தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிலேடை வெண்பாக்கள்! - (I)

அகரம் அமுதா
சிலேடை வெண்பாக்கள்!-(I)!
கடிதமும் கண்ணும்!!
மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்;!
ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; - நாடிப்!
படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற்!
கடிதமும் கண்கள்நேர் காண்!!
!
தனமும் குணமும்!!
ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே!
நன்றாய் பெருமைபல நல்குதலால்; - என்றும்!
மனிதர் ஒருசிலர்க்கே வாய்த்தலால் குன்றும்!
தனம்குணம்ஒன் றென்றால் தமும்!!
கவிதை: அகரம் அமுதா

ஏதோ ஓர் மனிதம்

நிர்வாணி
ஐனனம்!
அலறல் சத்தம் கேட்டு!
மந்திகை ஆசுப்பத்திரி!
ஸ்தம்பித்துப் போனது!
தங்கத்துக்கொரு தங்கம்!
பிறந்ததென்று!
ஊருக்குள் காட்டுத்தீ பரவியது!
ஆறு பெட்டைக்கொரு பெடியனெண்டு!
அம்மா கர்வமாய்ச் சிரிப்பது!
என் காதுகளிலேயே கேட்டது!
ஞானம்!
அம்மன் கோயில் பூசாரி!
கைபிடித்து அரிசிக்குள்ள!
ஆனா எழுதிவச்சு!
பக்கத்து வீட்டக்கா மண்டையில குட்டி!
ஆவன்னா போட்டுவச்சு!
வந்த தமிழும்!
கிறுக்கி வச்ச கவிதைகளும்!
பாடையில போனாலும் சாகாது!
காதல்!
சின்னத்தம்பியற்ற சின்னமகளை!
போற இடமெல்லாம் விட்டுக்கலைச்சு!
கண்களால் வீசின!
காதல்வலைக்குள்ள சிக்கவைச்சு!
பத்திரமாய் பிடிக்க நினைக்கயில!
பாழாப்போனவள் வலை ஓட்டை ஊடே!
ஓடிவிட்டாள்!
அவளுக்காய் நூறு கவிதை!
அவள் பிரிவுக்காய் நூறு கவிதை!
எழுதிக்கட்டி வைச்சு!
ஐம்பது வருசமாச்சு!
கன்னக்குழியழகி!
போட்டுவைச்ச காதல் இன்னும்!
சாகலையே!
இனி!
அறிவுக்கும் இளமைக்கும்!
நரை வந்தாச்சு!
முகத்தில் கூட ரேகைக் கோடுகள்!
கோலம் போட்டாச்சு!
காக்கையிடம் கடன் வாங்கி!
உருவான மேனி நிறம் இன்னும்!
மாறலையே!
அத்துளு வயல்வெளியில்!
ஓடி விளையாடிய சிறுவன்!
அவன் எழுதிய கவிதைக்குப் பிறந்த!
கவிதையொன்றின் மழலை!
மொழிகேட்டுக் கண்ணுறங்கும் நேரமிது!
மரணத்திற்காய் மட்டுமே!
காத்திருக்கும் மனிதமிது!
---------------------!
நன்றி:: கால்ற்ரன் பல்கலைக்கழக விழா மலர், கனடா

கனிந்த மனமேன் இல்லை

மு.இளங்கோவன்,புதுச்சேரி
தண்ணீர்க் குடத்தை நீதூக்கித்!
தாவித் தாவி மான்போலப்!
பெண்ணே நீயும் ஒருநாளில்!
பேடைக் குயிலாய் நடந்தாயே!!
பெண்ணே நானும் உன்னழகில்!
பிரியா விருப்பம் கொண்டேனே!!
கண்ணீர்க் கடலில் விழுந்தவனின்!
கவலை மாற்ற வந்துவிடு!!
வாரிச்சுமந்த உன்னழகை!
வண்டாய் நானும் நுகர்வதற்குப்!
பாரி என்னும் வேந்தனெனப்!
படைகள் தொலைத்து வந்தேனே!!
பாரி என்னும் வேந்தனெனப்!
பரிதவித்து நின்றாலும்!
ஏரிக் கரையில் உனக்காக!
என்றும் காத்து நிற்பேனே!!
வெள்ளைப் பசுவும் உனக்குண்டு!!
வேலி நிலமும் உனக்குண்டு!!
கொள்ளை வனப்பின் தூண்களுடன்!
கோயில் போன்ற வீடுண்டு!!
பிள்ளைகள் கூடி விளையாடப்!
பெரிய தோட்டம் பலஉண்டு!!
கள்ளி! என்னை ஏற்பதற்குக்!
கனிந்த மனமேன் இல்லையடி?!
!
முனைவர் மு.இளங்கோவன்!
புதுச்சேரி,இந்தியா

கண்ணாமூச்சி ஆடுகிறாள்

இன்பசுதேந்திரன்
என் மனதில் பதிந்த!
முதல் உருவம்!
வரையாத ஓவியமாய் அவள்!
பார்த்தது அறிமுகமே!
என் நினைவாலயம்!
சிதைந்து கிடக்கின்றன இங்கே!
மீண்டும் நினைவுகள்!
ஒழுங்கு வர!
ஒரு போராட்டம்!
நித்தம் நித்தம்!
அவள் பார்வையில்!
வலி கொண்ட!
என் மனதிற்கு மருந்தேயில்லை!
அவள் அறிமுகத்தை!
அழிப்பதற்க்கு!
தயாராகிவிட்டேன் நான்!
வாளேந்திய துணிவோடு!
வெட்ட வெட்ட!
வீழாத நினைவுகளாய்!
அவள் பார்வை!
என் கண்களைக்!
கட்டி விட்டு!
கண்ணமூச்சி ஆடுகிறாள்!
தேடுகின்ற!
என்னையும் ஏமாற்றுகின்றாள்!
பார்வையால்!
சிறை வைத்துவிட்டாள்!
நான் வாழ்வதா வீழ்வதா!
அவள் நினைவில்

அரிதாரம்

பி. முரளி
அன்றாட வாழ்க்கையின் !
அத்தியாயங்களுக்கு !
அழகூட்ட முயன்று !
அரிதாரம் பூசிப்பூசி !
வெறுத்துவிட்ட !
வறண்ட உதடுகளுக்கு !
தவணை முறையில் !
செயற்கையாய் !
உயிரெனும் !
செரிவூட்டப்படுகின்றது...... !
காற்றின் எதிர்திசைப்பறவையாய் !
இறுகிய மனதும் !
தளர் நடையுமாய் !
வழியில் வரும் !
பரிட்சயமானவர்களின் !
புன்னகைக்குத் திணறும் !
உதடுகள் !
உதிர்த்துவிட்டுச்செல்லும் !
ஒப்புக்கொன்றை..... !
அதிகார வர்க்கத்தின் !
புரிதலின் அலைவரிசையில் !
அவசரமாய் !
தவறி வரும் வார்த்தைகள் !
இதயம் கிழித்து !
உதிரம் பருக !
இயலாமையின் விளிம்பில் !
ஒளிப்படக்கருவியின் முன் நிற்கும் !
செயற்கை புன்னகையாய் !
அலுத்து விடுகின்றது !
அலுவலக வாழ்க்கை !
சில தனிமைகள் !
சில மௌனங்களென !
இதயத்தாடையில் !
மென்று துப்பும் !
கசப்பான உணர்வுகளில் !
அவசியமற்ற !
போலிப்புன்னகைகளிலிருந்து !
விடுவித்துக்கொள்ள !
ஒரு வேளை !
விலங்கினமாய் பிறந்திருந்தால் !
சிறப்பாய் இருந்திருக்குமென்று !
தோன்றும் தருணங்களில் !
நிலவொளியை உள்ளங்கையில் !
அள்ளி உயர்த்திப்பிடித்து !
சிதறடிக்கும் அரிதாரத்தின் !
அர்த்தம் தெரியாத !
மழலைச்சிரிப்பு !
தெளிந்த பிரவாகமாய் !
நம் மனசுக்குள் !
சிதிலமடைந்த உணர்வுகளின் !
சாம்பலில் !
சில்லென்றதொரு !
கவிதை எழுதிச்செல்லும்

மரித்தாலும் பிறப்பேன்

லலிதாசுந்தர்
பார்த்திருக்கிறேன்!
பூக்களுடன் வண்டுகள் !
கொஞ்சி விளையாடுவதை-கேட்கிறேன்!
இப்பொழுது தான்!
பூக்களுடன் வண்டுகள் !
பேசும் காதல் மொழியை!
உனை காதலித்த பின்பு!
குயவன் கைப்பட்ட மண்ணாய்!
பாண்டம் செய்கிறாய்!
என் மனதை!
உன் பார்வையால்!
அடர்காடு களைந்து!
பாறைத்தேடும் சிற்பியாய்!
செதுக்குக்கிறாய் !
ஆடைகளைந்து என் மனதை!
உன் கருவிழிகளால்!
தவித்துக்கொண்டிருக்கிறேன்!
கரையேறத் துடிக்கும்!
பாய்மரக் கட்டையாய்!
உன் நெஞ்சில்!
குடியுரிமை வாங்க!
ஏங்கிகொண்டிருக்கிறேன்!
மரணத்தின் பிடியிலிருந்து!
விடுபட துடிக்கும்!
மரணதண்டனை கைதியாய்!
உன் செவ்விதழ்களிலிருந்து!
உதிரும் முத்துகளுக்காக!
மரித்தாலும் பிறப்பேன்!
என் கவிதையை!
உன் இதழ்கள்!
அரங்கேற்றம் செய்யும்!
ஒவ்வொருமுறையும் .............. !
- லலிதாசுந்தர்

நினைவுப் ப்ரவாகம்

கா.ஆனந்த குமார்
எனதந்தப்புரத் தூய்மையின் போது!
கிடைத்தது என் பால்ய கால உடை!
வண்ணமும் வெளுப்புமாய் கிழிசல்களுக்கிடையில்!
செலவழிக்கப்படாத ஒற்றைப் பைசாவையும்!
மிட்டாய் துணுக்குகளையும்!
தோழியின் முனை முறிந்த பென்சிலையும்!
எவருமறியா நள்ளிரவில் வெளிப்பட்ட!
மூத்திரத்தின் வாசத்தையும்!
இன்னும் பலவற்றையும் தாங்கியபடி...........!
தூக்கியெறியுங்கள்!
என்றென் மனைவி சொல்லும் முன்!
பத்திரம் தேடுகின்றேன் இரகசியமாய்!
எல்லாவற்றையும் சுமந்தபடி!
!
-கா.ஆனந்த குமார்

சலனம்

ப.குணசுந்தரி தர்மலிங்கம்
வசீகரம்!
தொடர்புடையது தான்!
எல்லாக் காலத்தும் இடத்தும்!
பொருத்தம் பெறுவதில்லை!
இயல்புக்கு மகிழ்ந்தாலும்!
தோலைப் பொசுக்கும்!
வெக்கையும் தேவைப்படுகிறது.!
அறியாமல் நிகழும் மாற்றத்தில்!
விரும்பியவற்றோடும் ஒட்டமுடிவதில்லை.!
நிராசையால் நிரம்பும் மனது!
பார்வையை விஷமாக்குகிறது.!
பதட்டமல்ல!
கண்ணீரின் சிவப்பை விரும்பவில்லை.!
அருகிழுக்கப்படும் கோட்டிலிருந்து!
துகள்கள் பறக்கின்றன.!
வட்டத்துடன் இணையாது!
மேலெழும் புகைச்சுருள்!
மனத்தின்!
உட்கூரைவரை தடம் சுருள!
அதிசயமாய் நிழல்கள்!
நடனமாடுகின்றன.!
பழுது பழுதுதான்!
இயல்பை மீறும் அடையாளங்களில்!
கட்டுப்படுவதைத் தடுக்கிறேன்.!
அதன் மெய்யில்!
விளங்கப்பண்ணும் எதுவும்!
சங்கடப்படுத்துகிறது!
சூழல் கனக்க!
புருவ முடிச்சின் விரிவில்!
சிறுமைப்படுகிறது சொல்.!
இடைப்புகும் எச்சரிப்பை!
உதாசீனப்படுத்தும் உறவில்!
காட்சி தெரிக்கிறது.!
மாறிப்பதியும் கருத்தில்!
எந்நிலை விரிய!
கண்களையும்!
விலக்கி வைக்கிறேன்.!
ஆழ்ந்த சுவாசம் உறங்க வைக்கிறது!
இருப்பிலிருந்தும் அந்நியமாக்குகிறது

எனது கேள்விகள்

முஹம்மட் மஜிஸ்
கூடு தகர்த்து!!
சுதந்திரமிக்க- பறவைகளின்!
இருப்பு நீக்கிய!
உனது வக்கிரம்!
உனதான பொழுதுகளில்!
நிகழ்தாயிற்று!
அது!!
உனது தேசியகீதத்தை!
கொச்சைப்படுத்திய அதன்!
அழுகையும்!
உனது- நிஜங்களோடு!
முரண் பட்ட அதன்!
கனவுகளுமே!!
காரணமென்று-அவைகளின்!
கழுத்துக்களை நெரித்ததாய்!
அடிக்குறிப்பு எழுதிய!
உனது சாமர்தியத்தை!
போற்றுகிறேன் எனது!
நண்பா நான் உன்னிடம்!
கேட்க்க வேண்டியிருக்கிறது!
அவைகள் எப்போதாவது!
உனது தலையில்!
மலங்கழித்தனவா?

இன்றின் கணங்கள்

ராமலக்ஷ்மி
வெளிச்சத்தில் காணநேரும்!
ஒளிச் சிதறல்களோ!
விளக்கு அலங்காரங்களோ!
ஆச்சரியம் அளிப்பதில்லை.!
அற்புத உணர்வைக்!
கொடுப்பதுமில்லை.!
இருளிலேதான் அவை!
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி!
உயர்வாகத் தெரிகின்றன.!
வாழ்வின் வசந்தகாலத்தில்!
வாசலில் விரிந்துமலர்ந்து!
சிரிக்கின்ற!
வண்ணக் கோலங்கள்!
எண்ணத்தை நிறைப்பதில்லை!
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.!
பருவங்கள் மாறிமாறி!
வரும் உலகநியதி!
வாழ்வின்மீதான நம்!
பார்வையையும் மாற்றிடத்தான்-!
போன்ற!
சிந்தனைகள் எழுவதில்லை,!
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.!
இன்னல் எனும்ஒன்று!
கோடை இடியாகச்!
சாளரத்தில் இறங்குகையிலோ-!
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்!
திடுமெனப் புகுந்து!
சிலீரெனத் தாக்கும்!
வாடைக் காற்றாக!
வாட்டுகையிலோதான்-!
துடித்துத் துவளுகின்ற!
கொடியாய் மனம்!
பற்றிப் படர்ந்தெழும்!
வழிதேடித் திகைத்து-!
கவனிக்க மறந்த!
இன்றின் சின்ன சின்ன!
சந்தோஷக் கணங்களை!
கவனமாய் உணர்ந்து-!
சிலிர்த்துச் சிறகடித்துப்!
பறக்கிறது வானிலே!!
தவிர்க்க முடியாத!
தவறும் இல்லாத!
இயல்புதானே!
இது வாழ்விலே