ஏதோ ஓர் மனிதம் - நிர்வாணி

Photo by Tengyart on Unsplash

ஐனனம்!
அலறல் சத்தம் கேட்டு!
மந்திகை ஆசுப்பத்திரி!
ஸ்தம்பித்துப் போனது!
தங்கத்துக்கொரு தங்கம்!
பிறந்ததென்று!
ஊருக்குள் காட்டுத்தீ பரவியது!
ஆறு பெட்டைக்கொரு பெடியனெண்டு!
அம்மா கர்வமாய்ச் சிரிப்பது!
என் காதுகளிலேயே கேட்டது!
ஞானம்!
அம்மன் கோயில் பூசாரி!
கைபிடித்து அரிசிக்குள்ள!
ஆனா எழுதிவச்சு!
பக்கத்து வீட்டக்கா மண்டையில குட்டி!
ஆவன்னா போட்டுவச்சு!
வந்த தமிழும்!
கிறுக்கி வச்ச கவிதைகளும்!
பாடையில போனாலும் சாகாது!
காதல்!
சின்னத்தம்பியற்ற சின்னமகளை!
போற இடமெல்லாம் விட்டுக்கலைச்சு!
கண்களால் வீசின!
காதல்வலைக்குள்ள சிக்கவைச்சு!
பத்திரமாய் பிடிக்க நினைக்கயில!
பாழாப்போனவள் வலை ஓட்டை ஊடே!
ஓடிவிட்டாள்!
அவளுக்காய் நூறு கவிதை!
அவள் பிரிவுக்காய் நூறு கவிதை!
எழுதிக்கட்டி வைச்சு!
ஐம்பது வருசமாச்சு!
கன்னக்குழியழகி!
போட்டுவைச்ச காதல் இன்னும்!
சாகலையே!
இனி!
அறிவுக்கும் இளமைக்கும்!
நரை வந்தாச்சு!
முகத்தில் கூட ரேகைக் கோடுகள்!
கோலம் போட்டாச்சு!
காக்கையிடம் கடன் வாங்கி!
உருவான மேனி நிறம் இன்னும்!
மாறலையே!
அத்துளு வயல்வெளியில்!
ஓடி விளையாடிய சிறுவன்!
அவன் எழுதிய கவிதைக்குப் பிறந்த!
கவிதையொன்றின் மழலை!
மொழிகேட்டுக் கண்ணுறங்கும் நேரமிது!
மரணத்திற்காய் மட்டுமே!
காத்திருக்கும் மனிதமிது!
---------------------!
நன்றி:: கால்ற்ரன் பல்கலைக்கழக விழா மலர், கனடா
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.