தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெண் மொழிகள்

வேதா. இலங்காதிலகம்
மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில் !
நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி, !
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர், !
இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம். !
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக, !
தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக. !
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென !
வலை விரித்தது நாகரீக உறவாடல்கள். !
--------------------- !
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று !
மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று! !
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக, !
நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது! !
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே !
ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; , !
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்? !
போதிக்கும் வழியோ இப் பெண் மொழிகள். !
------------------------ !
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று !
சொல்லை உழுத கவியுலகில் பெண் மொழி !
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ! !
எல்லையின்றி எங்கு போய் முடியுமோ? !
பெண்களின் கவிதையானால் இன்று சிறு !
பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ! !
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது. !
என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது! !
---------------------------- !
பா ஆக்கம் - வேதா. இலங்காதிலகம். !
டென்மார்க்

அவசரத் தீர்மானம்!

இன்பசுதேந்திரன்
அவசரத் தீர்மானம்!
பூபாலத்தில்!
வெயிலைத் தொலைத்துவிட்ட!
அந்தச் சூரியன்!
முதுமை கொண்ட!
அந்தி வேளையிலே......!
மலையுச்சியில் பறவைகள்!
தங்கள் இனத்தோடு!
கூடு திரும்பின!
ஒரு சோதிடன் கொட்டாவி!
விட்டுக் கொண்டே குளித்த!
அந்த வேளையில்!
அரசியல்வாதிகளின் பேச்சில்!
நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
கொண்டு வந்த ஒரு கிழவி!
வெற்றிலை குதப்பிய!
வேளையில்தான்!
இந்த நிலவு இருட்டிற்கு!
வெளிச்சம் தந்தது!

அவள் வருவதாயில்லை

ரவி (சுவிஸ்)
வண்ணத்துப்பூச்சிகள் நிறங்களையெல்லாம் !
உதிர்த்துக் கொட்டிய பேய்ச்சோகம் !
அவள் முகத்தை சருகிட்டிருந்தது !
அப்படியான ஒரு பொழுதில் !
மீண்டும் அவளை நான் !
சந்தித்தேன் திட்டமிட்டபடி. !
!
கடல் எனது அலைகளையெல்லாம் !
வாரியெறிந்து !
அவளின் பாறையில் !
சிதறிக் கொட்டியது. !
வார்த்தைகளின் முழு வலுவையும் திரட்டி !
அவள்மீது அறைந்தேன் நான் !
அறையவும் முடிந்தது அப்படி !
அவைகளை நான் !
தயார்செய்து வைத்திருந்ததால். !
!
என்னை அசைத்தது அவளின் மௌனம்; !
என்றேயாகுக !
எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா !
அவள்மீதான நெருக்குதல்களை எப்படி நான் !
எனது உரிமையாக்கினேன் !
எங்ஙனம் சாத்தியமாகியது !
கிறுக்கிய வரிகளிடை !
கவிதை தோய்ந்தெழுந்த தாள்களையெல்லாம் !
மனசு விரைந்து தேடுகிறேன் !
அந்த வார்த்தைகளின் ஆண்மனத்தை எரித்துவிட !
அதன் வெறியை எரித்துவிட. !
!
அலைகள் ஓய்ந்த பொழுதில் !
எனது மௌனத்தை கடல் !
தாலாட்டியது. !
நான் நொந்துபோயிருந்தேன். !
அவள் இன்று வருவதாயில்லை. !
!
வானம் பறவைகளை உதிர்த்ததான !
பொழுதில் நான் !
பறிபோயிருந்தேன். !
-ரவி (சுவிஸ்)

மரபுகளை முறித்து

நிர்வாணி
எனக்குத் தெரியும் நீ யாரென்று!
ஏனெனில் நீயும் நானும் ஒன்று!
உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்!
என்னால் வரையறுக்கமுடியும்!
ஏனெனில் உனக்குள் நான்!
நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை!
நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம்!
நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி!
நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி!
ஆனாலும்!
இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல்!
எலிக்கும் பூனைக்கும் உறவு!
மரபுகளையும் முறித்துக்கொண்டு

ஈழத்தமிழ்க்கருவின் கதறல்

பிரியா பாஸ்கரன்
21 -ம் நூற்றாண்டின்!
இறப்பில் உள்ள உன்னில்!
லெமுரியா கண்டம் வாழ்ந்த!
தமிழன் முதல்!
இனம்புரியா இன்றைய!
தமிழன் வரை!
வாழ்ந்த தமிழ் மக்களின்!
மரபணுவால் வருவானது நான்!
என்பது வித்தையே !!
அம்மா ! !
நான் வெளிவரும் முன்னே!
உருவான நாள் முதல்!
என்னால் நீ பட்ட துயரை!
நான் அறிவேன்!
உன்னால் நான் பட்ட துயரை!
நீயறியாய்!
ஒரிரு நாளில் வெளிவரும் முன்னே!
உன்னோடு நான் கதைக்க!
விரும்புகிறேன்!
அம்மா !!
நினைவிருக்கிறதா !!
என்று எனக்கு!
அகவை மூன்று திங்கள்!
மெல்லிய மலர் மீது!
வல்லிய வன் கதிர்!
கல்வியதன்ன தீண்டியது என்னை!
கண நேரம் துடித்தேன் நான்!
நாழிகை ஓறிரண்டு கழித்து!
நாவினால் விழுங்கினாய் நீ ஒன்றை!
நாணில் புறப்பட்ட அம்பாய்!
நாற்புறமும் நஞ்சாய்!
அறித்தது என்னை!
எந்தையும் நீயும்!
கொஞ்சுக் குழாவியயில் நான் அறிந்தேன்.!
பிஞ்சு நான்!
ஐந்தாவது பெண் என்று!
வேண்டாது இது என்று!
சுரக்காது தாய்ப்பால் என்று!
கொடுத்தாய் இஞ்சிசாறு அன்று!
மாடுகாட்டி போரடித்தால்!
மாளாது செந்நெல் என்று யானைகட்டி போரடிக்கும்!
அழகான தென்மதுரைச் சீமையிலே!
பெண்ணொருத்தி!
களத்து மேட்டில்!
விளைந்த தானியத்தை!
கல்வேறு பொருள்வேறாக!
களைந்து கொண்டு தனித்திருக்கையில்!
பசி கொண்ட புலி ஒன்று!
புசிப்பதற்காக அவளை நோக்க!
தான் கொண்ட முறத்தாலே துரத்தினாலே!
அவளின் மரபணு என்னுள் இருக்குதம்மா!
அன்றொருநாள் !!
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே!
வாளொடு முன் தோன்றியது எங்கள் குடி!
தமிழ்குடி என்னும் சிந்தையிலே நான் இருந்தேன்!
ஆனால் நீயோ !!
திராவிட நாகர்கத்திற்கு முற்பட்டது!
ஆரிய நாகரீகம் எனும்!
தவறான வரலாற்றை உண்மை என்றாய்!
ஒவ்வாத நம் வாதத்தால்!
ஒ என நீ எடுத்தாய் வாந்தி!
மற்றொரு நாள்!
மானுடனாய் பரவிய நாம்!
திராவிடனாய் சுருங்கியதை எண்ணி!
நானிருக்கையில்!
ஆனால் நீயோ !!
இந்தியா என் தாய்நாடு!
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர்!
என்றாய்.!
அம்மா !!
தவறான வரலாறு வேண்டாம் என்று கதறினேன்!
திராவிடனாய் இருந்த என் அண்ணன்!
கர்நாடகன் என்னும் இந்தியனாய் மாறிய பின்!
தண்ணீர் தர மறுத்ததால்!
தமிழன் நான் வடித்த கண்ணீர் தான்!
அம்மா ! உன் பனிக்குட நீர்!
இறுதியாய் அம்மா !!
என் முப்பாட்டன் வயிற்று பேத்தி!
உன் மகள்!
தாயின் முலை அறுபடுவதை பார்த்து பயந்து!
தகப்பன் மண்டை ஒட்டல் அடிப்பட்டு!
செஞ்சோலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டால்!
அவளோடு சேர்த்து தொண்ணூறு குழந்தைகள்!
சிங்களன் வீசிய குண்டில் மாய்ந்த செய்தியை!
அறிவித்த தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி!
மானாட மயிலாட பார்த்தாயே அப்பொழுது எட்டி உதைத்தேன் அம்மா உன்னை!
ஆனால் நீ!
பெட்டைக்கோழி கூவுது என்றாய்!
அம்மா!
நான் கண்ணீர் விட்டு!
கதறுவதும் கதைப்பதும்!
உன் காதிற்கு எட்டாது!
ஆம் அம்மா !!
அம்மா என்னும் சொல்!
உன்னை பொறுத்தவரை!
ஆடு, மாட்டிற்கு உரியது!
அம்மா!
இறுதியாய்!
வேண்டாத குழந்தையாய் என்னை சுமந்து!
குழந்தைகள் தினம் கொண்டாடும் தலைவியாய் இருக்கும்!
உனக்கு மகளாய்!
இன உணர்வற்ற வந்தன்!
ஈன வயிற்றில் பிறந்து!
மண்ணுக்கு உரமாவதைவிட!
ஈழப் போராளியின் வயிற்றில் பிறந்து!
தனித்தமிழ் ஈழ மண்ணின் மைந்தனாய்!
என் மகனை வாழ வைக்க!
வாளேந்துவேன் வீர மகளாய் !!
இறுதியாய் அம்மா!
தமிழ் இன, மொழி உணர்விருந்தால்!
எனை ஈன்று எடு!
இல்லையேல்!
எனை கொன்றுவிடு !!
!
-பிரியாபாஸ்கரன்!
---------------------------------!
அட்சய பாத்திரமாய் அன்று!
பிச்சை பாத்திரமாய் இன்று!
தமிழன் !!
---------------------------------!
தமிழகத்தில் தீபாவளி !
தமிழ் ஈழத்தில் தீராவலி!
வெடிசத்தம்

வானமெங்கும் வஞ்சியின் வடிவம்

ப.மதியழகன்
மெல்லிடையாள், கொடிநடையாள்!
விழிகளிரண்டால் சமர் புரிவாள். !
கண்மணியாள், பொன் நிறத்தாள்!
செவ்விதழால் நவிலும் தேன்குரலால்!
மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள். !
நிலவொளியாள், மலர் முகத்தாள்!
மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள். !
ஈசனின் இடப்பாகமானவள், உயிர்களுக்கு வித்தானவள்!
நாணி நிலம் பார்த்து வெட்கி கன்னம் சிவப்பாள். !
ஒளியின் கிரணமானவள், வானவில்லின் வண்ணங்களானவள்!
தனது தோற்றப் பொலிவைக் கொண்டு!
விண்ணையே வியக்க வைப்பாள். !
ஸ்படிக நீரானவள், மழையின் சுவை போன்றவள்!
முத்துப் போன்ற பற்களைக் கொண்டு!
சிந்தும் புன்னகையால் அந்த மின்னலையே தோற்கடிப்பாள். !
நதியின் நீரலையானவள், புயலின் மையம் போன்றவள்!
சிறு நகத் தீண்டலிலே மானிடனை தேவனாக்கி!
தனது வியத்தகு ஆற்றலை உலகோருக்கு உணர வைப்பாள். !
கார்மேகமானவள், விருட்சத்தின் வேர் போன்றவள்!
தனது தயை குணத்தால் பூமிப்பந்தின் சுழற்சியையே!
கண நேரம் நிறுத்திவைப்பாள். !
நிலைச்சுடரானவள், குழந்தையின் பசியைப் போக்கும்!
பால் போன்றவள்!
ஏக்கத்தினை காதல் பரிசாக தந்து,!
காதலையும், காதலனையும்!
உயிரோடு கல்லறையில் புதைத்து வைப்பாள். !
மலரின் நறுமணமானவள், விடை காண இயலாத!
புதிர் போன்றவள்!
என்றும் வளராத தேய்பிறையாய்!
ஆடவர்களின் வாழ்வை மாற்றி வைப்பாள். !
தெய்வத்தாயானவள், கருவறை தெய்வச்சிலை போன்றவள்!
தனது உணர்வெழுச்சிகளை சம்ஹாரம் செய்து!
உள்ளத்திலேயே பூட்டி வைப்பாள். !
ஐம்பூதங்களானவள், உடலை இயக்கும் உயிர் போன்றவள்!
அன்று தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை!
மனக்கண்ணால் கண்டு அகிலம் வியக்க!
உள்ளிருந்து அந்தச் சிவகாமி ஆட்டுவித்தாள்

பதுங்குகுழி வாழ்வு

தீபச்செல்வன்
தீபச்செல்வன்!
!
பதுங்குகுழியினூளான வாழ்வு!
மனித நாகரீகத்தை!
வியந்துகொண்டிருக்கிறது !
நமது நகரின் பதுங்குகுழி !
பற்றிய விளம்பரங்களோடு.!
வீதியில் நடந்துகொண்டிருக்கையில்!
வேலியோர!
கால்வாய்களை அண்டியபடி!
அன்றாட வாழ்வு!
சென்றுகொண்டிருக்கிறது.!
வெள்ளைச்சீருடைகளை!
அணிந்துகொண்டு!
புத்தகங்களை!
பதுங்கு குழிகளில் நிரப்பி!
அதன் சுவர்களில்!
பாடத்தை எழுதி!
படித்துக்கொண்டிருக்கிறார்கள்!
மாணவர்கள்.!
அடிக்கடி திடுக்கிட்டு!
சிறுசிறு பள்ளங்களில்!
விழுந்து கிடக்கும்!
குழந்தைகள்!
சத்தமிடாமல் மூச்சிட்டு!
பதுங்கு குழியின் மூலைகளில்!
ஒளிந்துகொண்டு!
செவிகளை அறுத்து!
வீசினார்கள்.!
காற்றைக்கேட்டுப்!
பயந்துகொண்டார்கள்!
வானத்தை பார்க்க மறுத்து!
குப்புற விழுந்தார்கள்.!
இப்பொழுது இங்கே!
வீடுகட்டத் தேவையில்லை!
பள்ளிக்கூடம்!
கட்டத் தேவையில்லை!
வீதிசெய்யத் தேவையில்லை?!
மண்ணைக் கிண்டியே!
வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்!
மண்ணைக்கீறியே!
பயணம்செய்யவேண்டும்.!
நிலத்தின்கீழ்!
இயல்பான தேவைகள்!
அடங்கிக் கிடக்கின்றன.!
உரிமைகளும் அடையாளங்களும்!
புதைந்துபோகின்றன.!
ஒவ்வொருவரும் தங்களுக்கான!
பதுங்கு குழிகளைப்பற்றியே!
தீவிரமாக செயற்படவேண்டியிருக்கிறது!
சில வேளையில்!
தூக்கிப் புதைப்பதற்கு!
யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள்!
மொத்த வாழ்வும்!
பதுங்கு குழியில் அடங்கி!
புதைகுழிகளாகவும் மாறலாம்.!
நமது மனித வாழ்வு!
மண்ணைக்கிண்டி!
பூமியின் அடியைநோக்கி!
சென்றுகொண்டிருக்கிறதே?!
இவைகள்!
புதிய நாகரீகத்தின்!
வாழ்க்கை முறையா?!
விஞ்ஞானங்களின் பிரதிபலிப்பா?!
மனித உரிமைகளும்!
சிறுவர் உரிமைகளும்!
உக்கித்தொலைகின்றன!
வாழ்வும் கேள்விகளும்!
பதுங்கு குழியில் புதைகின்றன।

போதுமடா சாமி

த.சு.மணியம்
முருகனைக் கண்டவுடன்!
மூன்று முறை குட்டிவிட்டு!
வருக என்றழைத்து !
வாங்கினிலே உட்கார்த்தி!
பருக ஏதுனக்கு!
பழரசங்கள் வேண்டுமென்று!
உருகக் கேட்டதற்காய்!
ஓரு செம்பு தண்ணீர் என்றான்.!
மூன்று முடறுதன்னும்!
முற்றாகக் குடிக்கவில்லை!
சான்றுண்டா கேட்டுடுவீர்!
சத்தியமாய் ஏதெனக்கு!
ஈன்று வளர்த்தவளின்!
வன் சொல்லால் கோபமுற்று!
தோன்றும் மன உழைச்சல்!
நீங்குதற்காய் வந்ததென்றான்.!
ஒருத்தி அருகிருந்தே!
அமைதியற்ற மானுடத்தின்!
இருத்தி இரு பக்கம்!
இல்லாளாய்க் கொண்டதனால்!
உருத்துப் பெருத்திருப்பாய்!
உன் நிலையை மனத்திருத்த!
கருத்துக் கருவாடாய்!
காண்பதுவும் கனவதுவோ.!
நீட்டி நிமிர்ந்திருக்கா!
நீள் உடம்பு குனிந்திருக்க!
வாட்டி எடுக்குமவன்!
வேதனைதான் ஏதுவென!
மூட்டி நெருப்பதனை!
மூழவிடா அமைதியுடன்!
காட்டி என் நிலையை!
கச்சிதமாய் அமர்ந்திருந்தேன்.!
தந்திரங்கள் ஏதுமற்று!
தம் பாட்டில் வாழ்ந்தவர்கள்!
மந்திரங்கள் செய்தனரோ!
புகலிடுத்து வாழ் பெண்களுமோ!
இந்திரன் சபையினிலே !
நாள் நடக்கும் விழாக்களுக்கு!
தந்திடவே வேண்டுகிறார்!
புது நகையும் புடவைகளும்.!
வாங்கிக் கடன் நீண்டு!
வாசலிலே காத்திருக்க!
தாங்க முடியாதெண்ணி!
தாயிடமும் கேட்டுவிட!
வாங்கு வாங்கென்று!
வாங்கியதால் கவலைகொண்டு!
தாங்க வட்டிக்கென்று!
கேட்பதற்காய் வந்ததென்றார்.!
அன்றே பழநிக்கு!
ஆண்டியாய் வேல் கொண்டு!
சென்றே இருந்திருந்தால்!
சேதியிது நானறியேன்!
சாதுபோல் இருந்த என்னை!
சந்திக்கே வரவழைத்த!
போதுமப்பா நீபடைத்த!
பொன்னும் புடவைகளும்.!
த.சு.மணியம்

திமிர்க் காற்றும், விளை நிலமும்

ராம்ப்ரசாத், சென்னை
இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை !
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது!
வஞ்சக வானம் விதைத்த‌!
பெருஞ்சீற்ற‌த் திமிர் பிடித்த‌ காற்று...!
பாலின வேறுபாட்டின் ம‌ங்க‌லான‌ ஒளியில்!
நெல்லெனப் ப‌த‌ரைத் தாங்கிய‌ விதைக‌ளை!
விழுங்கி ப‌ச‌லை கொள்கின்ற‌து!
விளை நில‌ம்... !
விதைக்கப்பட்ட விதைகள்!
பதரென உமிழ்கின்றன‌!
ஒரு வீணடித்த தலைமுறையை...!
ஆங்கொரு மூலையில்,!
விளை நிலங்களை ஒத்துவிடும்!
தலைமுறையை தேடி உருவாகிறது!
சீற்றத்திமிர் கொண்ட காற்று!
மிகச்சிறியதொரு சுழலென‌...!

கால்கள்

நண்பன்
***********!
சாலையோரம்!
கழிவோடு கழிவாக!
அமர்ந்திருக்கிறான் -!
அங்கு வந்து செல்லும்!
பல கால்களையும்!
பார்த்துக் கொண்டே.....!
வளர்ச்சியை முடித்ததும்,!
இன்னும் வளருகின்றதும்,!
வளராமல் சூம்பிப் போனதும்!
எனப் பலப்பல!
கால்கள்!
அவன் கவனம் கவருகின்றன.....!
சாதியைத்!
தேடாத பார்வையால்!
கால்களைப்!
பார்த்துக் கொண்டிருக்கிறான்.!
சில கால்களின்!
வசீகர அழகு!
அவன் உத்தேசத்தை!
மறக்கடிக்கும் -!
பசியை மறக்க!
வைக்கும்!
புகை வலிப்பைப் போன்று...!
எல்லாக் கால்களையும்!
கவனிப்பது!
அவன் உத்தேசமில்லை -!
நீர் வற்றிய குளத்து!
கொக்கைப் போல!
அவன்!
கவனமெல்லாம்!
அணி செய்யப்பட்ட!
கால்களைத்!
தேடிக் கொண்டிருக்கும்....!
இன்றைய!
இரவுப் பொழுதிற்கு!
இரை கிடைக்குமா -!
இந்தக் கால்களில்!
ஒன்றிலிருந்து?!
அரக்கப் பசியுடன்!
கால்களைக்!
கவனமாகப்!
பார்த்துக் கொண்டிருந்தான் -!
பக்கத்தில்!
வேலையற்றுக் கிடந்தன!
ஊசியும், நூலும்.....!
------------------!
நண்பன்