கனிந்த மனமேன் இல்லை - மு.இளங்கோவன்,புதுச்சேரி

Photo by Paweł Czerwiński on Unsplash

தண்ணீர்க் குடத்தை நீதூக்கித்!
தாவித் தாவி மான்போலப்!
பெண்ணே நீயும் ஒருநாளில்!
பேடைக் குயிலாய் நடந்தாயே!!
பெண்ணே நானும் உன்னழகில்!
பிரியா விருப்பம் கொண்டேனே!!
கண்ணீர்க் கடலில் விழுந்தவனின்!
கவலை மாற்ற வந்துவிடு!!
வாரிச்சுமந்த உன்னழகை!
வண்டாய் நானும் நுகர்வதற்குப்!
பாரி என்னும் வேந்தனெனப்!
படைகள் தொலைத்து வந்தேனே!!
பாரி என்னும் வேந்தனெனப்!
பரிதவித்து நின்றாலும்!
ஏரிக் கரையில் உனக்காக!
என்றும் காத்து நிற்பேனே!!
வெள்ளைப் பசுவும் உனக்குண்டு!!
வேலி நிலமும் உனக்குண்டு!!
கொள்ளை வனப்பின் தூண்களுடன்!
கோயில் போன்ற வீடுண்டு!!
பிள்ளைகள் கூடி விளையாடப்!
பெரிய தோட்டம் பலஉண்டு!!
கள்ளி! என்னை ஏற்பதற்குக்!
கனிந்த மனமேன் இல்லையடி?!
!
முனைவர் மு.இளங்கோவன்!
புதுச்சேரி,இந்தியா
மு.இளங்கோவன்,புதுச்சேரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.