தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மவுனவெளி

புதியமாதவி, மும்பை
பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்!
நிரம்பி வழியும்!
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்!
ஆடை அணி உறவுகள் களைந்து!
நிர்வாணமாய் பேசியது!
நம் மவுனம்.!
தொட்டுப்பார்த்தக்!
காற்று களைத்துப்போனது!
கருவறைக் கதவுகள்!
மூடிக்கொண்டன.!
யுகம் யுகமாய்!
சிற்பியின் உளிகளுக்காய்!
காத்திருக்கிறது!
கடலடியில் கரும்பாறை!
உடைந்த சிலை!
சிதைந்த ஓவியம்!
எரிந்த கரித்துண்டு!
என்னைப் போலவே!
எதையும் சொல்வதில்லை என!
பூக்கள் வாடலாம்!
பூமி வாடுவதில்லை.!
செத்தப்பின்!
உயிர்த்தெழுந்த!
பரமப்பிதாவின்!
கல்லறைச் சத்தியமாய்!
வாசிக்கிறேன்.!
'புதைந்து போன!
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை!
ஆமென்.'!
காத்திருந்ததாய்!
கனவுக்கண்டதாய்!
கவலைக் கொண்டதாய்!
கண்ணீர்விட்டதாய்!
கவிதை எழுதியதாய்!
காணத்துடித்ததாய்!
அன்று போலவே!
இன்றும்!
சொற்குப்பைகளுக்கு நடுவில்!
தொலைந்து போன!
வாழ்க்கையைத் தேடுகிறாய்!
வார்த்தைகள் எட்டாத!
பிரபஞ்சவீதியில்!
காலத்தைத் தின்று செரித்த!
நெருப்பாய்!
எரிந்து கொண்டிருக்கிறது!
நீ தூக்கிவீசிய!
மவுனவெளி

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்

அகரம் அமுதா
முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக!
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதற்கிருக்கும்!
நல்ல குணம்கூட நாலுபேர்க் கில்லை:இக்!
கல்வியென் மேலெறிந்த கல்!!
எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்தி ரேகை!
அழிந்துக்கண் பார்வை குறைந்து -பழுதாகிக்!
கண்ணாடி போட்டபின்னும் 'ஹோம்ஒர்க்செய்' என்கிறீங்க!
என்னாங்க டீச்சர் இது!!
விடிந்தால் டியூஷன்விட்டால்பள்ளிக் கூடம்!
முடிந்து விளையாடப் போனால் -படிங்கற!
வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறைய கற்றிருக்காள்!
ஆர்கிட்ட சொல்லி அழ!!
ஹோம்ஒர்க்கை செய்தகை யோடு படித்துவிட்டு!
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட!
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி!
போரடிக்கு தேவாழ்க்கை போ!!
!
-அகரம்.அமுதா

திரைகடல் போகிறேன்

அகரம் அமுதா
கவி ஆக்கம்: அகரம் அமுதா!
நெஞ்சம் வளர்ந்து இடையகம் தேயும்!
நிலவே! திரைகடல் போய்வரவா?!
கஞ்சன் வழங்கிய தானம் போன்ற!
கனிமொழி யே! நான் போய்வரவா?!
பனிமலரே! பூம் பஞ்சனையே! உன்!
பார்வையின் எல்லை கடந்திடவா?!
கனிமரமே! பொன் ஊஞ்சலுமே! நல்!
கற்பகமே! விடை கொடுத்திடு வா!
எல்லா நதியும் மலையில் தோன்றி!
எழுகடல் தானே முடிகிறது உன்!
பொல்லா நதியோ விழியில் தோன்றிப்!
பொதிகையில் சென்றேன் முடிகிறது?!
குளத்தில் தானடி குமுதம் மேவும் - செங்!
குமுதத்தில் ஏன் இருகுளங்கள்?!
நிலத்தில் வீழும் மின்னல் போலென்!
நெஞ்சில் உன்னால் கலவரங்கள்!!
அழுதது போதும் அடியே பெண்ணே!!
வுழிகின் றகண்ணீர் வற்றிவடு!!
விழுதென நீள்கிற தெந்தன் கண்ணீர்!
செழுகடல் இதழால் ஒற்றியெடு!!
பிரிவுத் துயரம் உனக்கும் உண்டே!
பிரிவே உறவுக்கு வழிவகுக்கும் - இதழ்!
பிரியா மொட்டுக்கள் மணப்பது மில்லை!
பிரிந்தால் தானடி மலர்மணக்கும்!
ஆண்டுகள் இரண்டு போனால் வருவேன்!
அதுவரை அன்பே! நிலைக்கனு மதனால்!
எனையுங் கொஞ்சம் வாழவிடு!!
கவி ஆக்கம்: அகரம் அமுதா

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்

ப்ரியன்
அன்று தொடங்கிய மழை !
சாரலாகி ஓடிப் போனது! !
வாசல் தௌ¤க்கும் அளவுகூட !
பூமி நனையவில்லை; !
ஆனாலும், !
என் மனது தெப்பலாக !
நனைந்திருந்தது !
நீ மழையில் நடந்து சென்றதில்! !
************************ !
ஒற்றைக் குடைக்குள் !
நெருக்கமாகக் !
காதலர்கள் நகர்ந்தால் !
கோபப்படுகிறான் வருணன்! !
மழை பெருக !
சாரல் தவிர்க்க !
மேலும் நெருக்கமாக !
மீண்டும் கோபம் !
மீண்டும் சாரல் !
மீண்டும் நெருக்கம் !
************************ !
உன் கால்தடத்தில் !
தேங்கி இருந்த மழைநீரைத் !
தீர்த்தமென்கிறேன்; !
அப்படியென்றால் !
நீ தேவதைதானே! !
************************ !
கடலுக்குள் விழுந்த !
மழைத்துளி போல் !
பத்திரப்படுத்திவிட்டேன் !
என்னுள் விழுந்த உன்னை! !
************************ !
மழையில் நனைபவளே! !
தெரிந்து கொள் !
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள !
வான் அவன் விடும் !
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை! !
************************ !
எல்லோரையும் வெறுமனே !
நனைத்துவிட்டுச் செல்கிறது மழை! !
உன்னில் மட்டுமே !
அதுவே ரசித்து உள்ளிறங்கிப் போகிறது! !
************************ !
பெரிதாய்ப் பொழியும் மழையில் !
நனைந்து நிற்கிறேன்; !
உன் கால்தடத்தைத் தனியே !
நனையவிட்டுச் செல்ல !
நான் ஒன்றும் உன்னைப் போல் !
கொடுமையானவன் அல்ல! !
************************ !
பெரும் பாலையில் தவறிப் !
பெய்துவிட்ட !
மழை நீ !
எனக்கு! !
************************ !
எவ்வளவு பத்திரமாய் !
நீ நடந்தாலும் !
உன்னையும் அறியாமல் !
வழியெங்கும் !
பெய்துகொண்டே செல்கிறது !
உன் அழகுமழை! !
************************ !
மழை நேரத்தில் !
திரும்பும் பக்கமெல்லாம் !
தெரியும் மழைக்கீற்று மாதிரி !
என் மனதில் திரும்பும் பக்கமெல்லாம் !
நீ! நீ! நீ! !
************************ !
தண்மையான !
உன்னைச் செதுக்குகையில் !
சிதறிய !
சின்னச் சின்னச் சில்லுகள்தாம் !
மழை! !
************************ !
சுகம்! !
மழையில் நனைந்து கரைதலும்! !
உன் பிடியில் !
கரைந்து தொலைதலும்! !
************************ !
வானம், !
பெய்ய மழை !
பெய்யப் பெய்யப் பெருமழை! !
நீ, !
காண அழகு !
காணக் காணப் பேரழகு! !
************************ !
என்னை அந்தி முதல் !
ஆதிவரை நனைத்துச் !
செல்கிறீர்கள்! !
பலநேரங்களில் நீயும்! !
சிலநேரங்களில் மழையும்! !
************************ !
உடுத்திக்கொள்ள !
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம் !
அம்மணமாய் விழும் !
அம்மழைக்கு! !
************************ !
இதுவரை துரத்தித் துரத்திக் !
கிட்டியதில்லை! !
தானாய்க் கிட்டியதுதான் !
நீயும் மழையும்! !
************************ !
நேற்றைய !
என் கோபத்தையும் !
உன் வருத்தத்தையும் !
துவைத்துத் துடைத்துப் !
போயிருந்தது !
இரவில் பெய்த மழை! !
************************ !
என்னவோ அறியேன் !
எப்படி என்றும் அறியேன் !
என் உயிர்வரை நுழைந்து !
மனம் ஊடுருவ உனையும் !
மழையையும் மட்டும் அனுமதிக்கிறேன்! !
************************ !
எத்தனை மழைத்துளிகள் !
மண் முத்தமிடுமிடுகின்றன என !
எவ்வளவு நேரம் எண்ணிக் கொண்டிருப்பது !
சீக்கிரம் வந்துவிடு! !
************************ !
என் மீது !
ஒரு மழையாய்த் தான் !
பொழிந்து செல்கிறது !
நீ சிந்தும் மென்னகை! !
************************ !
நீ !
கோபம் காட்டும் நாட்களில் !
கண்ணாடிச் சில்லுகளாய்க் !
குத்திச் செல்கின்றன !
மழைத்துளிகள்! !
************************ !
உன் கன்னக்குழியில் !
தங்கும் அந்த ஒற்றைத்துளி !
மழை அமுதத்தின் விலை !
காதல்! !
************************ !
நீ தொட்டுப் பேசுகிற நேரங்களில் !
மழை ஞாபகம் !
தவிர்க்க இயலவில்லை எனக்கு! !
************************ !
மழையில் நனைந்த உன் முகம் !
ஒரு நிலவில் !
சில நட்சத்திரங்கள்! !
************************ !
உன் மௌனம் கலைந்த கணத்தில் !
மனம் கொள்ளும் வேகத்தில் !
வானம் உடைத்து !
நொறுங்கி விழுகிறது !
மழை! !
************************ !
நனைய நீ ஊரில் இல்லை !
என்பதற்காக !
எட்டியே பார்க்கவில்லை !
மழை! !
************************ !
முதன்முதலாய் மழையுடன் !
பெண்ணை ஒப்பிட்டுக் கவி சமைத்தவன் !
யாரென யாராவது கேட்டால் !
என்னைக் கை காட்டு! !
பெண்ணென்றால் அது !
நீ மட்டும்தானே! !
************************ !
ஜன்னலில் பார்த்ததைவிடவும் !
பக்கத்தில் பார்த்தல் !
அழகு! !
நீயும்! !
மழையும்! !
************************ !
வார்த்தையாகக் கூட இல்லை !
ஒரு எழுத்தாகக் கூட இல்லாதவனை !
ஒரு கவிஞனாய் மாற்றிய !
பெருமை !
உனக்கும் !
மழைக்கும் மட்டுமே! !
************************ !
என்னைக் கொஞ்சுகையில் !
கைகால் முளைத்த !
மழையாகிறாய் நீ! !
************************ !
மழையும் நீயும் !
நனைக்கிறீர்கள் !
நனைப்பதாய்ச் சுடுகிறீர்கள் !
சில நேரங்களில்! !
************************ !
நின்ற பின்னும் !
சிறிது நேரம் !
இலை தங்கும் மழை போல !
நீ நின்று போன !
இடத்தில் எல்லாம் !
கொஞ்சநேரமாவது தங்கிச் !
செல்கிறது அழகு! !
************************ !
நீ மார்பில் !
சாயும் தன்மையில் !
என்னை அறியாமல் !
நானே மழையாகிறேன்! !
************************ !
என் மனம் !
பட்டுப் போகக்கூடும் !
எனும்போதெல்லாம் !
மழையாகப் பெய்துபோகிறாய் !
நீ! !
************************ !
மழைத்துளிக்காகப் !
புதைந்து காத்திருக்கும் !
விதைகள் போல! !
உன் விழிப் பார்வைக்காகக் !
காத்திருக்கின்றது !
என் காதல்! !
************************ !
கருமை வர்ணம் பூசித்திரிந்த !
அம்மேகத்தின் பிள்ளை !
மண்தீண்டலில் எழுந்த !
மண் வாசனை !
நுகர்தலில் உணர்கிறேன் !
உன் வாசனை! !
************************ !
வானம் கிழிக்கும் !
வெளிச்சத்தில் - எழும் !
இடி ஒலியில் !
சோ! என !
மண் நனைத்து !
மண் நிறைக்கிறது மழை! !
என் உயிர் நனைத்து !
என் உயிர் நிறைக்கும் உன் உயிர்! !
************************ !
நீயும் நானும் !
இரவில் நடந்துவர !
சொல்லாமல் கொள்ளாமல் !
ஓடிவந்து நனைத்து !
விளையாடிய !
அச்சிறுபிள்ளை சிறுமழையை !
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் !
கண்ணிலும் !
உயிரிலும்! !
************************ !
மண்ணுள் ஊடுருவிச் செல்லும் !
மழையென! !
என் உள்ளம் !
னர்ந்து நுழைகிறாய் நீ! !
************************ !
எதுவாக நீ வந்தாலும் !
இன்பமே! !
ஆனால், !
மழையாக வந்தால் !
பேரின்பம்! !
************************ !
நனைந்து சென்ற உன்னை !
ஆயிரமாயிரம் பிம்பமாய்க் !
காட்டியது மழை! !
************************ !
சுத்தமான !
அந்த மழைத்துளி !
பார்க்கும்போதெல்லாம் !
உன் ஒப்பனையற்ற முகம் !
முன்னால் நிற்கிறது! !
************************ !
நனைத்து நனைத்தே !
நெருக்கமான !
மழை போலவே !
சுகமாகிறாய் !
நீயும்! !
************************ !
நீ வருவாய் என்பதை !
முன்னமே வந்து சொல்லிவிட்டுப் !
போய்விடுகிறது !
மழை! !
************************ !
பைத்தியமாகிவிடத் தோன்றுகிறது !
மழையில் உறையும்போதும் !
உன் நினைவுகளில் நனையும்போதும்! !
************************ !
பூமியைச் சுத்தமாக்கிப் !
புதியதாக்குவது மழை! !
என்னை !
துடைத்துப் புதியவனாக்குவது !
உன் பார்வை! !
************************ !
தேடிக் கொண்டே !
இருக்கிறேன்! !
சேலை விலகிய நேரத்தில் !
தொட்டு விளையாடி !
ஒரே ஒரு முறை உனை !
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த !
அச்சிறுமழையை! !
************************ !
மழை ரசித்தாலும் !
உனை ரசித்தாலும் !
நேரம் கடப்பதும் !
தெரிவதில்லை! !
உயிர் கரைந்து !
ஓடுவதும் தெரிவதில்லை! !
************************ !
உனைத் தொட்ட பின் !
அதே துளி! !
கவனி அதே துளி !
ஏன் எனையும் தீண்டவில்லை எனக் !
கோபித்துக் கொண்டேன் !
மழையிடம் நேற்று! !
************************ !
மழை பெய்யும் !
நாட்களெல்லாம் !
உனைக் கண்ட நாட்களாக !
அமைந்துவிடுகிறது! !
************************ !
உனைக் கண்ட நாட்களுக்கே !
என் நாட்காட்டியில் !
இடமிருக்கிறது! !
போனால் போகட்டும் !
உனக்காக !
மழை கண்ட நாட்களையும் !
சேர்த்துக் கொள்கிறேன்! !
************************ !
மழை தொட்டால் மட்டுமே !
சிலிர்த்தவன் நான்! !
நான் தொட்டால் மட்டுமே !
சிலிர்ப்பவள் நீ! !
************************ !
தெரியும், !
மழையில் நனைகையில் சிலசமயம் !
நான் பருகும் !
ஒவ்வொரு துளியிலும் !
இருக்கிறாய் நீ! !
************************ !
எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள் !
என்றாய்! !
நீ மழையில் நனைவது !
கண்டதிலிருந்து என்றேன்! !
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்! !
அடுத்த மழை பெய்யத் தொடங்கியது !
நீயும் நனையத் தொடங்கினாய் !
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்! !
************************ !
சந்தோசம் !
துக்கம் !
எதற்கும் அழுதுவிடாதே! !
நமக்காக தான்தான் !
அழுவேன் என !
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது !
மழை! !
************************ !
எப்படித் தேர்வு செய்கிறாய் !
உன்னை நனைப்பதற்கான !
மழையை! !
************************ !
மழையில் சிக்கிக் கொண்ட !
பெருவியாதிக்காரனின் தவிப்பாய் !
உன் விழிதேடிக் கிடக்கிறது !
என் காதல்! !
************************ !
உனைப் பார்க்க வரும்போதெல்லாம் !
மண் அன்னையை நோக்கிவரும் !
மழைப் பிள்ளையென !
குதித்தோடி வருகிறேன்! !
************************ !
உன் இதழில் உணர்ந்தேன் !
சுவையில்லா ஒரு சுவையான !
மழையின் சுவையை! !
************************ !
உன்னை நினைத்தபடி !
வானம் நோக்கி !
இருந்தேன்! !
நெற்றி விழுந்து !
நெஞ்சுவரை நீந்திய !
மழையின் தண்மை !
இன்னமும் அதிகமாய் !
ஞாபகப்படுத்திவிட்டது உன்னை! !
************************ !
உன் மீது கோபம் காட்டும் நாட்களில் !
என்னை மட்டும் தீண்டாமல் !
விலகிப் பெய்துவிட்டுச் செல்கிறது மழை! !
************************ !
நீ பேசாமல் இருந்தால் !
என் வானமெங்கும் !
மேகமூட்டம்! !
************************ !
நீ கோபம் காட்டும் நாட்களில் !
என் மனமெங்கும் பெய்யும் !
வலிக்க வலிக்கக் !
கல் அடி மழை! !
ஆலங்கட்டி மழை! !
************************ !
மழை மண் விழுந்த அடுத்தநாள் !
முளைத்துவிடும் விதையென !
நீ கண்ணுள் விழுந்த !
அடுத்த நொடி முளைத்துவிட்டான் !
என்னுள் காதல்! !
************************ !
நீ மழையில் நனைந்த !
லயத்தில் கண்டுக்கொண்டேன் !
மழையே ரசிக்கும்படி !
எப்படி மழையில் !
நனைவதென! !
************************ !
பெருமழைக்கே !
பயந்து போகாதவன் !
உன் விழியோரம் வழியும் !
ஒருதுளிக்குப் !
பதறிப் போகிறேன்! !
************************ !
உன்னைக் கொஞ்சுவதில் !
எனக்குப் போட்டி !
மழை மட்டுமே! !
************************ !
மண் விழுந்த மழை மட்டுமா? !
நீயும் !
கவிதை நடையில்தான் !
நடக்கிறாய்! !
************************ !
திட்டிக் கொண்டே !
துப்பட்டா கொண்டு நீ !
தலை துவட்டுகையில் !
எனக்கு !
இன்னமும் செல்லமாகிப் போகிறது !
மழை! !
************************ !
உன்னில் !
கவிதை காணும் இடமெல்லாம் !
ஒரு புள்ளி வைத்துச் !
செல்கிறது மழை! !
************************ !
- ப்ரியன்

வலி

s.உமா
பிரசவ `வார்ல்` டில்!
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.!
பொய் வலிதான் !
புறப்பட்டு வந்து விட்டேன்!
பாதுகாப்பாய்!
பிள்ளைப்பெற... !
அந்தோ !!
எனக்கு நடந்தது!
`அவசர` சிகிச்சை!
அறுவை சிகிச்சை!
ஆனால் !
அவசியமே இல்லாமல்!
வலியே இல்லாமல்!
குழந்தை!
பிறப்பிக்கப்பட்டது.!
அழுதது, !
சிரித்தது,!
வளர்ந்தது...!
இன்னமும்!
வலித்துக்கொண்டேயிருக்கிறது...!
மனம்,!
வலிக்காக ஏங்கி... !
நிரந்தர வலியை!
எனக்களித்தவர்கள்!
அங்கே!
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்!
மனங்களை விட்டு!
பணங்களை மட்டுமே !
`எண்ணி`க் கொண்டு

உன்னைப்போல்.. ஆடியபாதம்

பத்மா சுவாமிநாதன்
உன்னைப்போல் ஒருவன்...!
01.!
உன்னைப்போல் ஒருவன்!
-------------------------------------!
காகம் !
இறந்துபோனால்!
கலவரமாகுது - எங்கள்!
மொட்டைமாடி...!
நாயொன்றின் !
உயிர்பிறிந்தால்!
நள்ளிரவு நண்பர்களின் !
ஒப்பாரி...!
ஓலைப்பாம்பொன்று!
உயிர்துறந்தால்!
ஒட்டுமொத்த பாம்புகளின் !
அணிவகுப்பு...!
எறும்புகூட!
தன் துக்கத்தை!
இயல்பாய்!
எடுத்துரைக்கும்...!
காக்கைக்கும்!
நாய்க்கும்!
எறும்புக்கும்!
உள்ள குணம்...!
தமிழனுக்கு!
ஏனோ இன்னும்!
தட்டுப்படவே!
இல்லை...!
தனது இணம்!
வேரருக்கப்படுவதை!
எந்த இனமாவது!
பார்த்து ரசித்ததுண்டா?!
கண்ணாற!
கண்டோம்...!
காதாற!
கேட்டோம்...!
இலங்கையில்!
நடந்ததை!
இறையாண்மை!
என்றோம்...!
இந்த மண்ணில்!
நடக்கும்போது!
எதைசொல்லி!
தவிர்ப்போம்...!
மாணவன்!
தாக்கப்படுவான்!
என்றதும்!
பொடா பாய்ந்ததே...!
எங்கள் மீனவன்!
தாக்கப்படும்போது!
ஏன் எதுவுமே!
பாய்வதில்லை?!
மனித உரிமை!
கழகமென்ன!
மன்னையா!
தின்கிறது?!
மந்திரி பதவிக்கு!
மட்டும்!
டெல்லிக்கு போகும்!
தந்திரக் கிழவன்...!
தமிழன் உயிரென்றால்!
தந்தியும் கடிதமும்!
அனுப்புவானாம்?!
அதை மத்திய அரசு ஏற்க்குமாம்... !
முத்துக்குமாரின்!
மரணத்தை அரசியலாகினார்களே...!
ஏன் மீனவன் சாவை!
கையிலெடுக்கவில்லை...!
கேட்டுகொண்டே போக!
கேள்விகள் ஆயிரமுண்டு...!
கேட்கும் யோக்கியதை!
எனக்கென்ன இருக்கிறது...!
நானும்!
உங்களைப் போல்!
ஒருவன் தானே...!
02.!
ஆடியபாதம்...!
-------------------------!
அவர்தான் எங்கள்!
தமிழ் ஐயா...!
தமிழென்னும் சலங்கைகட்டி!
தனக்கென்ற பாணியிலே!
தரைபடாமல் ஆடியபாதம்...!
...!
தேமாவும், புளிமாவும்,!
அணி வகையும்,!
திருக்குறளும்,!
அவைபொருளும்...!
திகட்டாமல் விருந்தளிப்பார் - கணீர்குரலில்...!
ஐம்பெரும் காப்பியம்,!
அகநானூறு, புறநானூறு!
எட்டுத்தொகை, பத்துபாட்டென...!
தலையில் தட்டியே சொல்லித்தருவார் - அந்த!
தடித்த மீசைக்காரர்...!
நேர்கொண்ட பார்வையும்,!
நிமிர்ந்த நடையும்,!
முறுக்கிய மீசையும் - நன்கு!
மழித்த கன்னமும்...!
ஓங்கிய குரலும்!
வெள்ளை உடையும்!
எப்போதும் எளிமையுமென - அப்படியே!
மனதில் நின்றார்...!
அவர் நடத்திய பாடம்போல.!
எப்போதுமே ஹீரோதான் அவர்...!
விடைத்தாள் தருகையில் மட்டும் வில்லனாக காட்சிதருவார்...!
இவரும் சராசரி என்றே நினைத்துவிட்டேன் - சிறுவன்தானே நான்.!
எட்டாம் வகுப்பு படிக்கையிலே!
தமிழ் மன்றத்தேர்வு...!
காய்ச்சல் எனக்கு - இது தேர்வு காய்ச்சலல்ல...!
எல்லோரும் வந்திருக்க - என்னை தேடியவர்!
தன் மிதிவண்டி தந்து!
என் நண்பனை அனுப்பிவிட்டார் வீட்டிற்கே...!
ஐயாவே ஆளனுப்ப!
புறப்பட்டேன் பரிட்ச்சைக்கு...!
எழுதவும் செய்தேன் - அவருடைய பேனாவிலேயே...!
எத்தணை பேருக்கு கிடைக்குமோ அந்த வாய்ப்பு?!
என்னை பொறுத்தவரை!
அது வாய்ப்பல்ல - வரமே!!!!
வருடங்கள் ஓடின...!
வயதும் ஆனது...!
காலத்தின் கட்டளை - அம்மாமனிதனை!
மீண்டும் சந்திக்க...!
பேருந்திலே பார்த்தேன்!
ஐயா நலமா என்றேன்?!
சற்று நெருங்கிவந்தே!
இணம்கண்டார் - நான்தான் என்று!
ஏ... சோழியவிளாகத்து கெடா...!
இப்படித்தான் எனை அழைப்பார் - மகிழ்ச்சியில் இருக்கையிலே...!
இன்றோ...!
மங்கிய பார்வை...!
தொங்கிய தோள்கள்...!
குன்றிய குரல் என!
வயோதிகனாய் காட்சிதந்தது - என் தமிழ்...!
அப்போதுதான் சொல்லநினைத்தேன்!
ஐயா வணக்கம்...என்று!
பள்ளியில் எழுந்து நின்று!
சொன்னதுபோல...!
உனக்கல்லவா சொல்லவேண்டும்!
என் முதல் வணக்கம்...!
இந்த காட்டானையும் கிறுக்கவைத்த - தமிழ்க்!
கடவுளல்லவா நீ எனக்கு...!
உன் பொர்ப்பாத கமலங்களில் - என்!
படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்

இளமைக்கால நட்பு

யாழினி அத்தன்
நீயும், நானும்!
கரகமாடிய அந்த!
ஒற்றை விளக்கு அரசமரத்தடி...!
தோல் கிழிந்து இரவெல்லாம்!
சிராய்ப்பு வலி கொடுத்த!
நாய்க்கர் வீட்டு வேப்பமரம்...!
மட்டைகளை தோளில் சுமந்து!
மைல்கணக்கில் நடந்து!
கிரிக்கெட் ஆடிய!
சொசொரப்பு மைதானங்கள்...!
எதிரியின் பம்பரங்களை!
சில்லு சில்லாக உடைத்த!
பிரேமா வீட்டு முன்வாசல்...!
பசியெடுக்காத நிலாவுக்கு!
கும்மி தட்டி சோறு£ட்டிய!
தாவணி சிட்டுக்களை!
காண அமர்ந்த திண்ணைகள்...!
குமாரிடம் மூக்குடைபட்டு!
இரத்தம் சிந்திய!
நெருஞ்சி முட்புதர்...!
இப்படி!
ஒவ்வொன்றாய்!
பதினைந்து ஆண்டுகளில்!
எல்லவற்றையும்!
மிதித்தழித்துவிட்ட!
கால அரக்கன்..!
மிஞ்சியிருக்கும் நினைவுகள்!
மட்டும்!
சுவடுகளாய்...!
இயற்கையின் உயிரையெடுத்து!
உயர்ந்தோங்கி நிற்கும்!
செத்துபோன!
கான்கிராட் கட்டடங்கள்...ஊரெங்கும்...!
தென்றல் போய்!
தேங்கிவிட்ட கொசுக்களை!
விரட்டும் பேன் காற்றுகள்!
நாகராகப் போர்வயில்!
என் கிராமமும் மாறிவருகிறது!
இன்றொரு நகரமாக...!
எங்கும்!
ஓய்வில்லா மனிதர்களின்!
தேடல்கள்...தேடல்கள்...தேடல்கள்!
என் தலை வெள்ளிக் கம்பிகளையும்!
உன் தலை வழுக்கையயும்!
தாண்டி நின்ற!
நம் புன்சிரிப்பும், தழுவல்களும்...!
ஆயிரம் மைல்களுக்கப்பால்!
நம் உடம்புகள்...!
அடுத்தடுத்த வீட்டிலிருக்கும்!
நம் இதயங்கள்...!
நண்பா!!
நிகழ்வுகளையெல்லாம்!
ஜீரணித்து!
பசியோடு சுற்றித் திரியும்!
காலத்தையும் தாண்டி நிற்கும்!
நம் நட்பு!
அற்புதத்தில் அற்புதம்.!
எழுதியவர்: யாழினி அத்தன்

மேக‌ தூது

அருண்மொழி தேவன்
மழையை சுமந்துச் செல்லும்!
மேகங்களே!!
என் மனதையும் கொஞ்சம்!
சுமந்துச் செல்லுங்கள்..!
தென்திசை நோக்கித்தானே!
உம் பயணம்!!
அங்குதான் இருக்கிறது!
என் கிராம‌மும், இத‌ய‌மும்..!
--------------------!
சென்ற‌ வாரம்!
க‌ன்று ஈன்ற‌தாம் எங்க‌ள் ல‌ட்சுமி.!
அத‌னிட‌ம் போய் சொல்லுங்க‌ள்!
அந்த‌ சின்ன‌ க‌ன்றுக்காக‌!
கொஞ்ச‌ம் காம்புக‌ளை!
இறுக்கிக்கொள் என்று.!
பாவி பசு!!
என்னை விட‌!
என் குடும்ப‌த்தின்மீது !
அதிக‌ பாச‌ம் அத‌ற்கு.!
ஒரே நேர‌த்தில்!
ஒட்டுமொத்த‌ ர‌த்த‌த்தையிம்!
பாலாக‌ த‌ர‌ச்சொன்னால் கூட‌!
த‌ந்துவிடும்.!
-------------------!
என் வீட்டுக்கு அருகில்!
எங்காவ‌து வெள்ளை நிறத்தில்!
ஒரு சேவ‌ல் தென்ப‌ட்டால்!
த‌ய‌ங்காம‌ல் அத‌னிட‌ம் சொல்லுங்க‌ள்.!
நான் உற‌ங்க‌ச் சொன்ன‌தாய்..!
பாவ‌ம்!ஊரில் இருந்த‌வ‌ரை!
நான் ப‌டிக்க‌வேண்டும் !
என்ப‌த‌ற்காக‌!
நான்கு ம‌னிக்கே!
எழுந்து கூவும்..!
!
--------------------------!
எங்க‌ள் தெருவுக்கு!
ப‌க்க‌த்து தெருவில்!
விளையாடி கொன்டிருக்கும்!
என் ந‌ண்ப‌ன் வீட்டு நாய்.!
அத‌னிட‌ம் போய்ச் சொல்லுங்க‌ள்!
நான் அடுத்த‌ வார‌ம் !
ஊருக்கு வ‌ருகிறேன் என்று..!
என் ந‌ண்ப‌னின் வீட்டுக்கு!
நான் செல்லும்போதெல்லாம்!
என் நண்ப‌னுக்கு முன்ன‌ரே!
வாச‌ல் வ‌ரை!
வ‌ந்து வ‌ர‌வேற்கும்!
அந்த‌ நாய் க‌ண்டிப்பாக‌!
ம‌கிழ்ச்சிய‌டையிம். !
!
--------------------------!
ஊரை விட்டு வெளியே!
கொஞ்ச‌ தூர‌ம்!
ந‌ட‌ந்துச் சென்றால்!
ஒரு மேல்நிலைப் ப‌ள்ளி வரும்!
ம‌ற‌க்காம‌ல் அத‌னிட‌ம்!
நான் சொன்ன‌தாய்!
ஒரு வ‌ண‌க்க‌ம் சொல்லுங்க‌ள்.!
என்னை யாரென்று கேட்கும். !
ப‌ரவாயில்லை!!
நீங்க‌ள் வ‌ந்துவிடுங்க‌ள்.!
ஏனெனில்!
வாங்கிய‌வ‌ன்தான் ம‌ற‌க்க‌கூடாதே த‌விர‌!
கொடுத்த‌வ‌ன் அல்ல‌!
-----------------------------!
ஏன் ம‌னித‌ர்க‌ளிட‌ம்!
சொல்ல‌ உன்னிட‌ம் ஏதும்!
சேதி இல்லையா?என்று நீ !
கேட்ப‌து என் காதில் விழுகிற‌து.!
ம‌னித‌ர்க‌ளுட‌ன் பேச‌!
அறிவிய‌ல் உள்ள‌து.!
மனதில் உள்ள இந்த ஜீவன்களோடு பேச‌?

நீ

தென்றல்.இரா.சம்பத்
சகியே..........!
ஏதோ ஒரு நினைவோடுதான்!
கவி எழுத துவங்குகிறேன்!
என்னையுமறியாமல்!
உன் பெயரை மட்டும்!
எழுதி முடித்து!
முற்றுப்புள்ளி !
வைத்துவிடுகிறேன்!
என் கவிதைக்கு.!
!
2.!
சகியே........!
உனைத்தவிர !
எல்லோருக்குமே!
புரிந்துபோனது!
எனது கவிதையும்!
காதலும்...!
3.!
சகியே........!
நீ !
இந்த ஒற்றை எழுத்து!
என்னவெல்லாம் !
செய்துவிட்டு போய்விட்டது!
என் இதயப்பரப்பின்!
எல்லா திசுக்களையும்..!
4.!
சகியே...........!
உன் நினைவுகளுடன்!
என் இரவுகள் விடிவதை!
நீ அறிவாயா......?

அகதிச்செடி.. செடி எடுத்துக்கொள்

மௌனன்
அகதிச்செடி.. செடி எடுத்துக் கொள்ளுங்கள்!
01.!
அகதிச்செடி!
-------------------!
புறக்கடையில் அந்த மாஞ்செடியை!
இரண்டு நாளாய்தான் பார்க்கிறேன்!
சிறு கொழுந்துகள் துளிர்த்து!
அருகில் நின்ற வேம்பின் நிழலில்!
பணிந்து நின்றிருந்தது!
யாருக்கும் தெரியாமல்!
பூமியில் கொஞ்சம் நீருறிஞ்சியும்!
வெயிலுக்கு தன்னைத் !
தொட அனுமதித்தும்!
அச்செடி தன் துளிர்ப்பை!
வெளிச்சத்தில் வைத்திருந்தது!
யான் அறிய விரும்புவதெல்லாம்!
எந்த வனத்திலிருக்குமோ!
இச்செடிக்கான தாய் மரம்.!
02.!
செடி எடுத்துக் கொள்ளுங்கள்!
---------------------------------------!
குழந்தையைச் செவிலியிடம் !
ஓப்படைப்பதைப் போல் !
பெயர்த்து வந்த புன்னைக் கன்றை !
பின் தோட்டத்தில் வைத்தேன்!
தொப்புள் கொடி மண்ணோடு !
கைக்கு வந்த புதுச்செடியை!
தன் கருவென சுமந்து கொண்டது தோட்டம்!
வேர் கொண்ட நிலத்தின் !
ருசியும் நாற்றமும் கொண்டு!
ஒரு தேவகன்னியின் செவ்விதழ்போல் அரும்பியது !
அதன் முதல் இலை!
மலர் கொண்ட காலத்தில்!
தாவரங்களின் தேவதையென!
தளும்பி நின்றது அதன் இளமை!
பெருங்காமத்தால் முறியும்!
தனித்திருப்பவளின் உடலைப்போல்!
காற்றுக்கு அதன் சிறு கிளை !
முறிந்த காலத்தில்!
அதன் விதை ஒன்று!
முட்டி முளைத்திருந்தது!
அதன் மடியில்!
இன்னொரு செவிலிக்கான!
குழந்தை அதுவென்று!
நினைத்துக் கொண்டேன்