தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

செத்துப் போகும் வாழ்க்கை

மன்னார் அமுதன்
கூடா நட்பால்!
குறைந்து விடுகிறது!
சின்னவனின் மதிப்பெண்கள்!
நாகரிக மோகத்தில்!
ஸ்தம்பித்துக் கிடக்கிறது!
“பெரியவளின் பொழுதுகள்”!
சின்னத் திரைக்குள்!
சுழன்று திரிகிறது!
“மனைவியின் கடிகாரம்”!
வாழ்வியல் சீர்திருத்தம்!
பெரும் புலம்பலாய்க் கழிகிறது!
குடிகாரத் தந்தைக்கு”!
ஒருவரை ஒருவர் !
சுட்டிக் கொள்கையில்!
செத்துப் போகிறது வாழ்க்கை!

முயற்சி... கண்ணாமூச்சி... செல்லப்பெயர்

ஜெ.நம்பிராஜன்
1.முயற்சி!
சிணுங்குகிறது!
கை கால்களை ஆட்டுகிறது!
பிறகு அழுகிறது!
எதுவும் நடவாத போது!
தொட்டிலில் இருந்து!
தானே இறங்குகிறது!
குழந்தை!
2.கண்ணாமூச்சி!
முழுவதும் மறையாமல்!
கொஞ்சம் தெரியும்படி!
ஒளிய வேண்டியிருக்கிறது!
குழந்தைகளுடன்!
கண்ணாமூச்சி விளையாடுகையில்.!
3.செல்லப்பெயர்!
பெயர்கள் எல்லாம் வழக்கொழிந்து!
மனிதர்கள் எல்லோரும்!
'பார் கோடிங்' செய்யப்பட்ட பிறகும்!
நிலைத்திருக்கும்!
செல்லம், தங்கம், கண்ணுகுட்டி!
போன்ற பெயர்கள்!
-ஜெ.நம்பிராஜன்

தியாகராஜனின் 2 கவிதைகள்

A. தியாகராஜன்
என் கண்முன்!
நீ வந்து சென்றாய்!
சில நொடிகளே!
வெகுநேரம் ஆனது போன்றதொரு!
உணர்வு,!
கவிதை போன்றா?!
ஆம், இல்லை..!
ஆம்!
அதே பரவசம்!
இல்லை!
கவிதை!
ஏதாவது ஒரு நிலையில்!
நிலை பட்டு நின்றுவிடுகிறது!
நீயும் ஒருவேளை!
இல்லையெனில்!
அப்படியேவோ?!
A.தியாகராஜன்!
--------------------------------------------------!
நீ சென்று விடவில்லை!
எங்கேயும்-!
நீ சுவாசிக்க வேண்டிய!
காற்றை நான் சுவாசிக்கிறேன்-!
நீ விட்ட கடைசி காற்று!
வெளியில் கலந்து!
பொதுவானதாயிற்று-!
உன்னையெரித்த சாம்பலோ!
மண்ணிலும் காற்றிலுமாக!
உரமாகி உணவாகி!
இங்கு யாரும்!
சாவதில்லை!
சாச்வதமே...!
விதியாக!
மாறுதலே!
A..தியாகராஜன்!
----------------------------------------------------------!
A.Thiagarajan!
A504 Dosti Aster!
Wadala east!
Mumbai 400037

திலீபன்

கசுன் மஹேந்திர ஹீனடிகல
புன்னகைக்கும் இதயம் !
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்!
அழத் தோன்றும் முகத் தோற்றம் !
நேசத்தை யாசிக்கும்!
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து !
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! !
திலீபன் ! காற்றில் உதித்தவன் !!
நெஞ்சங்களில் !
அநேகமானவற்றை விட்டுச் சென்ற!
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்!
ஒரு 'கமா'வாக மறைந்த!
விலைமதிப்பற்ற யௌவனத்தை !
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த!
நேர்மையான புன்னகையும்!
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்!
அன்றிலிருந்து இன்று வரை !
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்!
கைகளிலில்லா ஐவிரல்களையும் !
தேடியலையும் தந்தையர்!
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் !
புதல்வர்களின் சடலங்களின் மீது !
ஓலமிட்டழுபவர்கள் !
எல்லா இடங்களிலிலும் !
இருக்கிறார்கள் திலீபன்!
எரியும் விளக்கின் சுடரின் !
கதைகளைக் கேட்கும் இருளும்!
'பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்' !
என்றே முனகும்!
உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள் !
விலகிச் செல்லும் கூடமும்!
'உண்ணாவிரதம் இருப்பது!
எப்படியெனக் காட்டுகிறேன்' எனக் கூறி !
மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்!
நல்லூர் வானம் எனப்படுவது !
வெடிப்புற்ற பூமியென அறிந்து!
சூரியஇ சந்திரர்களை விடவும் !
கருமுகில்கள் அணி திரளும்!
வாழ்க்கையில் சிறந்தவற்றை !
கோணலாகிய தினங்களிடையே ஒளித்து!
சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து !
இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா...!
!
கவிஞர் பற்றிய குறிப்பு!
கசுன் மஹேந்திர ஹீனடிகல - இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும்இ எழுத்தாளராகவும்இ ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகலஇ இலங்கை சட்டக் கல்லூரி மாணவராவார். 'முயஎi யுஉனை' எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களையும்இ வரவேற்பையும் பெற்றுள்ளது

மன்னித்து விடடி

பா நந்தன்
தமிழே! !
உன்னை வாழ்த்திப் பாடிடத்தான் !
குரல்வளை துடைத்தேன். !
ஆனந்த ராகம் பாடிடத்தான் ஆசை !
கிடைத்ததென்னவோ !
முகாரியின் முகவரிகளே! !
தாலாட்டும் ஒப்பாரியும் !
உலக மொழிகளில் !
உலக அழகியான உனக்கு மட்டுமே சொந்தமாம்! !
ஒப்பாரி மட்டுமே பாட முடிகிறது என்னால்! !
முலைப்பாலுக்கு பதில் !
முப்பால் ஊட்டி !
வளர்த்தானே வள்ளுவன் !
என்ன யிற்று !
அவன் வகுத்த !
அதிகாரங்களுக்கு? !
ஆத்திச்சூடி மூலம் !
அவ்வை தந்த !
அறிவு எங்கே போயிற்று? !
பூப்பெய்திய உனக்கு !
பாரதியும் தாசனும் !
போட்டி போட்டு !
ஊட்டிய வீரமும் நாணமும் !
எங்கே போயிற்று? !
கன்னித்தமிழாயிருந்த நீ !
தமிழ்த்தாயானது ங்கிலத்துடன் புணர்ந்ததாலோ? !
பிள்ளையும் பெற்று விட்டாயோ !
தங்கிலீஷ் என்று? !
ஆங்கிலத்தை நம்பாதே! !
எகிப்து மொழி, !
பாலி மொழி, !
கிரேக்க மொழி, !
ஹீப்ரு மொழி !
என உலகெங்கும் வேலையைக் காட்டி விட்டான். !
!
அவ்வளவு ஏன்? !
உன் சகோதரி !
சமஸ்கிருதமும் !
சாகக்கிடக்கிறாளே! !
அச்சம் கொள்ளாதே! !
அவனால் உன்னை அழிக்க முடியாது! !
ஊருக்கொரு உருவத்தில் நீ !
அலைவதனால் அல்ல... !
நீயே நினைத்தாலும் !
உன்னால் சாக முடியாது... !
உயிருக்கு ஏதடி !
உடல் சார்ந்த சாவு? !
- பா நந்தன்

மனித(ம்) உறக்கம்

ரசிகவ் ஞானியார்
குளிரில் நடுங்கிய!
பூனையின் முனகலாய்..!
எவரோ வீசிச்சென்ற!
ரொட்டித்துண்டுகளை தரையில் பரப்பி...!
வாழ்க்கையையும் ,!
ரொட்டித்துண்டுகளையும்,!
தேடித் தேடிச் சாப்பிட்டு...!
அழுக்குத்துணியில்!
தன்னையும் ..!
தன்மானத்தையும்...!
போர்த்தியபடி கிடக்க,!
உற்று நோக்கினேன்..!
மனசின் ஓரத்தில்!
மதப்பற்று!!
மத அடையாளம் தெரியவில்லை!!
இந்தியனாய் இருக்க கூடுமோ..?!
தேசப்பற்று..!
திமிறிக்கொண்டு வந்தது!!
தமிழனாய் இருக்குமோ?!
மொழிப்பற்றும் மீறி வந்தது!!
!
வேலை தேடி வந்து..!
வீதியில் நிற்பவனா?!
விசா எடுத்தவன்..!
விரட்டி விட்டிருப்பானோ..?!
!
விசாரித்தால்!
ஏழ்மை ஒட்டிக்கொள்ளுமென்ற அச்சத்தில்!
மனிதம் தவறியபடி..!
மனிதர்களின் அவசரங்கள்!!
மனசாட்சியினை!
பணங்களின் தேவைகள்..!
பறித்துவிட்டனவே!!
மனிதத்தை!
மண்ணெண்ணையில் எரித்துவிட்டு..!
சுயநலங்கள்!
சாப்ட்வேரில் சமாதியாகின்றது!!
பாவிகளா!
எவனுமே விசாரிக்க மாட்டீர்களா..?!
கதறுகிறது நெஞ்சம்..!
நான் எங்கே போனேனோ..?!
!
காட்டுமிராண்டிகள் எல்லாரும்..!
கவனிக்காமல் செல்லுகின்றனர்!!
!
இந்த!
காட்டுமிராண்டியால் முடிந்தது!
ஒரு கவிதை மட்டுமே..!
நானும் மனிதனாவதெப்போது..?!
!
- ரசிகவ் ஞானியார்!
-- !
K.Gnaniyar!
Dubai

தொலைதூர அழுகுரல்

நிந்தவூர் ஷிப்லி
பூச்சாண்டி வருவதாக!
அன்னை ஊட்டிய!
ஒரு பிடிச் சோற்றின்!
உயிர்ச்சத்தில்!
உதயமானது என் கிராம வாழ்வு!
புழுதிக்காற்றின்!
மண்வாசனையில்!
எத்தனை முறை!
நுகர்ந்திருக்கிறேன்!
தாய் மண்ணின் சுகந்தத்தை....!
மழை நாள் பொழுதுகளில்!
தெருவெல்லாம் திரண்டோடும்!
அழுக்கு நீரில் கால்நனைத்து!
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....!
நிலாச்சோறு!
திருட்டு மாங்காய்!
சைக்கிள் விபத்து!
முதல் காதல்!
இன்னும் எத்தனை நினைவுகள்!
என் உயிரோடு ஒட்டியபடி....!
அத்தனையும் துறந்து!
உலக வரைபடத்தில் மட்டுமே!
தாய்நாட்டை காணமுடியுமான!
ஒரு தேசத்தில் நான்....!
பணம் சம்பாதித்துக் கொண்டே!
இருக்கிறது!
என் உடல்!
உயிர் மட்டும்!
இன்னும் என் தெருமுனையின்!
பனைமரத்தடியில்.....!!
!
-நிந்தவூர் ஷிப்லி

புன்னகையிலிருந்து விடுதலை

ஜதி
ஒரு புன்னகையின் பாரமென்பது !
அதனைத் துயரத்திலிருக்கையில்!
புரியும்போதே அறியப்படுகிறது!
இக்கணம் நானணிந்துள்ள!
இப்புன்னகைதரும் வலிகள் !
கொஞ்சநஞ்சமல்ல!
எனினும்,!
புன்னகையைக் கழற்றி வைப்பதென்பது !
அவ்வளவு எளிதானதல்ல!
எப்பொழுதுமொரு புன்னகையை!
அணிந்திருக்கவேண்டிய கட்டாயம்!
எப்படியோ உண்டாகிவிட்டது!
ஒரு காக்கும் மருந்தென்று!
அனைவராலும் அது!
ஏற்கப்பட்டுள்ளது!
பீறிட்டெழும் ஓலங்கள்!
நெஞ்சத்துள் கனக்க,!
விக்கியடைக்கும் தொண்டையின் !
வலியையும் மீறிப் !
புன்னகைப்பதென்பது!
எத்தனை கொடூரம்...!
மரணம் கண்டு நகைப்பதென்பது!
மிகவும் அநீட்சையானதே...!
ஏனெனில் மரணம் மகத்தானது...!
இவ்வாழ்வோ மிகக்கொடியது!
அதனினும் கொடியது !
இவ்வாழ்வைக்கண்டு நகைக்கவேண்டுமென்பதே!
இருப்பினும்,!
புன்னகைக்கா திருத்தல்!
முகத்தின் நிர்வாணம்!
என்றே எண்ணப்படுகிறது!
சிறு தனிமையேனும் கிடைக்குமாயின்!
சற்றேனும் புன்னகையினைக் கழற்றிவைத்துவிட்டு!
மனமாற அழுதுமுடித்தபின்!
மறவாமல் மீண்டும் அணிந்துகொள்வேன்!
-ஜதி !
[20080912]

குழப்பம்

முருகடியான்
எங்கே மாந்தன்!
துயருற் றாலும்!
என்மனம் துடிப்பதுமேன்?!
அங்கே அவரவர்!
உறவென மாறி!
விழிநீர் வடிப்பதுமேன்?!
குண்டுகள் வெடித்துத்!
துண்டுகள் ஆகிக்!
குலையும் மாந்தரினம்....!
ஒன்றுமே செய்திட!
முடியா தின்னுயிர்!
உடலேன்? அவமானம்!!
வாடிய பயிரால்!
வாடிய மனதில்!
வன்மம் உறைவதுமேன்?!
தேடிய உறவும்!
திருவும் திறனும்!
தேய்ந்தே மறைவதுமேன்?!
விடுதலைக் காக!
உயிர்விடத் துடிக்கும்!
விறலார் ஒருபுறமும்!
கெடுதலைச் செய்தே!
புகழ்பெற நினைக்கும்!
கீழோர் மறுபுறமும்...!
மாந்தர்க ளாக!
ஈந்தவர் யாரோ?!
மலர்மே லுற்றவனோ?!
நீந்திய இலைமேல்!
நின்று வளர்ந்து!
நெடுமா லானவனோ?!
அரக்கரின் கொட்டம்!
அழித்திடும் கண்கொண்(டு)!
அரனார் வரவென்றோ?!
சுரக்கிற முலைப்பால்!
எதியோப் பாவில்!
சூலியுந் தரலன்றோ?!
அறிவதன் வளர்ச்சி!
அணுவென வெடிச்சி!
அழிவே வரலாறு!!
பொறிபல நூறு!
பூத்தநற் பேறு!
புன்மையே பெருங்கூறு!!
மறக்கப் படமனம்!
வைத்தவன் ஏனோ!
மடிக்கும் மதிகொடுத்தான்?!
இறக்கும் உடல்!உயிர்!
எடுக்கும் மறுவுடல்!
என்றேன் விதிபடைத்தான்?!
-பாத்தென்றல் முருகடியான்

மவுனவெளி

புதியமாதவி, மும்பை
பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்!
நிரம்பி வழியும்!
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்!
ஆடை அணி உறவுகள் களைந்து!
நிர்வாணமாய் பேசியது!
நம் மவுனம்.!
தொட்டுப்பார்த்தக்!
காற்று களைத்துப்போனது!
கருவறைக் கதவுகள்!
மூடிக்கொண்டன.!
யுகம் யுகமாய்!
சிற்பியின் உளிகளுக்காய்!
காத்திருக்கிறது!
கடலடியில் கரும்பாறை!
உடைந்த சிலை!
சிதைந்த ஓவியம்!
எரிந்த கரித்துண்டு!
என்னைப் போலவே!
எதையும் சொல்வதில்லை என!
பூக்கள் வாடலாம்!
பூமி வாடுவதில்லை.!
செத்தப்பின்!
உயிர்த்தெழுந்த!
பரமப்பிதாவின்!
கல்லறைச் சத்தியமாய்!
வாசிக்கிறேன்.!
'புதைந்து போன!
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை!
ஆமென்.'!
காத்திருந்ததாய்!
கனவுக்கண்டதாய்!
கவலைக் கொண்டதாய்!
கண்ணீர்விட்டதாய்!
கவிதை எழுதியதாய்!
காணத்துடித்ததாய்!
அன்று போலவே!
இன்றும்!
சொற்குப்பைகளுக்கு நடுவில்!
தொலைந்து போன!
வாழ்க்கையைத் தேடுகிறாய்!
வார்த்தைகள் எட்டாத!
பிரபஞ்சவீதியில்!
காலத்தைத் தின்று செரித்த!
நெருப்பாய்!
எரிந்து கொண்டிருக்கிறது!
நீ தூக்கிவீசிய!
மவுனவெளி