தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நடுகற்கள்

வி. பிச்சுமணி
வீரத்தின் சாடசியாய்!
வாழும் உயிருள்ள நடுகற்கள்!
வாதத்தை மட்டும் ஏற்று!
நீதிவழங்கும் நாட்டில்!
குற்றவாளிகள் !
க்டல் வற்றிய பூவிகோள் கண்கள்!
எலும்புகூட்டை போற்றிய தோல்கள்!
எதற்கு உண்கிறோம்!
ஏன் வாழ்கிறோம்!
என உணர்வற்ற உடல்கள்!
உலகெமெங்கும் தமிழ்தீயை மூட்டும்!
உருவங்கள் !
புதைத்த உறவு மீள வரும்!
எரித்த சாம்பலில் எழுந்து வருமென!
மீள குடியமர்த்தபடா!
விடுதலைக்கு உயிர் அளித்த உத்தமிகள் !
மேற்கு நோக்கிய பார்வை!
எதிர்நோக்கி நீளும் கைகள்!
காண மறுத்து!
குனிந்த எங்கள் தலைகள்!
தன்மக்களை காக்கவே !
மையத்துக்கு கடிதம் வரைந்து!
கொண்டிருக்கும் !
கடலில் கரைத்த சாம்பல்கள்!
முள்வேலி விடும் மூச்சு காற்றுகள்!
இக்கரை தொடும் நாளில்!
அக்கறை உள்ள ஒராயிரம் பிணங்கள்!
வீறு கொண்டு எழும்!
நம்பிக்கை தான் விடுதலை தரும்

ஒரு போர்

நிர்வாணி
என் குழந்தைகளுக்குள் வக்கிரங்களை !
விதைத்த போரே தொலைந்துபோ !
மாமனிதர்களைக் காவுகொண்ட போரே !
மறைந்துபோ !
சோலைகளுக்குள் உல்லாசமாய் !
பாடி மகிழ்வித்த குயிலையும் சோலையையும் !
அழித்துவிட்ட போரே ஓடிப்போ !
இன்பமாய் வாழ்ந்த என் மக்களின் முகங்களை !
கண்ணீரால் கழுவிய போரே காணாமற்போ !
வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வேண்டும் !
எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் !
சோகத்தைப் பொறித்துவிட்ட போரே !
அழிந்துபோ !
இன்று எங்களின் சுடுகாடுகளிலும் !
புல் முளைத்திருக்கிறது !
வீடுகளையே சுடுகாடாக்கிய போரே !
மரணித்துவிடு

வியர்வைக்கும் நிறமுண்டு

ரசிகவ் ஞானியார்
மூட்டைச்சுமந்த முதுகுவலியில் !
வியர்வையொடு தந்தை............ !
சமையல்கட்ழல் !
சாம்பல்புகையில் !
வியர்வையோடு தாய்........ !
புதுப்படக்கூட்டத்தின் !
புழுக்கம் தாங்காமல் !
வியர்வையோடு மகன்.......... !
ஆம் !
வியர்வைக்கும் நிறமுண்டு

நான் கேவலமானவனே

சம்பத்குமார்
புதிதாக நான் எதை பற்றி!
எழுதப் போகிறேன்!
எல்லாமே பழகிப் போய்விட்டது!
என் கனவுகளையோ!
மகிழ்வுகளையோ!
ரணங்களையோ...!
கண் நிறைத்த இடங்களையோ!
கவர்ந்த பெண்களையோ!
ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ!
வேறு என்ன இருக்க போகிறது!
என் கவிதைகளில்....!
என் தவறுகளை மறைத்து!
எழுதும் இவற்றில் என்ன உண்மை!
இருக்கப் போகிறது!
நெருப்பால் சுட்டால் எரிவது போல‌!
என் நிதர்சனமும் தினமும் !
சுட்டு பொசுக்குகிறது என்னை...!
என் கேவலங்கள், காம வக்கிரங்கள்!
சுயனலம், பொறாமை மறைத்து!
காதலையும்,மலர்களையும்!
தென்றலயும் மட்டுமே!
எழுதுவதால் நான் என்னில் !
யோக்கியமாகி விட முடியாது..!
இங்குள்ள அனைவரையும் விட‌!
நான் கேவலமானவனே

தனிமை

ந.மயூரரூபன்
முறைக்கிறதா என்னைப் பார்த்து!
சிரிக்கிறதா என்னைப்பார்த்து!
ஒன்றுமே புரியவில்லை!
அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்!
பிடிபடவில்லை ஒன்றுமே.!
நான் பார்க்கும் எல்லாமே!
விரோதமாய்ப் பார்க்கின்றன!
என்னை மட்டுமே.!
என் கண்ணில் எப்போதும்!
ஒட்டியிருப்பது பயந்தானோ?!
பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?!
என்னுள் துடிப்பு ஏறிக்!
குலைகிறது தாறுமாறாய்.!
என்னுயிரைக் கொய்துவிடும்!
கனவுகள் நெருக்குகின்றன.!
கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்!
அருட்டிப்பார்க்கிறது என்னை.!
ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்!
உடல் வறட்டக் கத்தும் சத்தமும்!
மூச்சழிக்க வைக்கும் என்னை.!
கொப்பில் குதிக்கும் தாட்டானும்!
தேடித் திரிவது என்னைத்தான்.!
ஊத்தை இளிப்புடன்!
ஊடுருவிப் பார்க்குமது என்னை.!
பார்வைகளிலெல்லாம்!
உயிர் கொழுவித் தவிக்கும்.!
நான் போகுமிடமெல்லாம்!
நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.!
என்னைவிட எல்லோரும் நண்பர்களே.!
காகமும் தாட்டானும் கூடத்தான்.!
அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்!
நான் மட்டும் தனியே

உள்ளத்தைக் கேள் அது உள்ளதைச் சொல்லும்

சத்தி சக்திதாசன்
உள்ளத்தைக் கேள் - அது!
உள்ளதைச் சொல்லும்!
எண்ணத்தின் சாரங்கள்!
ஏக்கத்தின் பிறப்புக்கள்!
ஏழ்மையின் இலக்கணம்!
எதிர்பார்ப்பின் எடுத்துக்காட்டு!
மனதினில் கருவாகி!
மிதந்தது உருவாகி!
அருகினில் நெருங்கிடவே!
அறிந்ததோ கானல் நீர்!
ஆமாம் ... தயங்காதே ...!
உள்ளத்தைக் கேள் .... அது!
உள்ளதைச் சொல்லும்!
வண்ணமுடைத்த கனவுகள்!
வானுலாவும் நினைவுகள்!
காண்பதற்கும் நினைப்பதற்கும்!
கடைசிவரை போராட்டம்!
முரசறையும் முழக்கங்கள்!
மூச்சுவிடா முயற்சிகள்!
வெற்று வேட்டு வாடிக்கை!
வாழ்வெல்லாம் வேடிக்கை!
கொள்கைகள் காகிதத்தில்!
கொண்டாட்டம் அவர் வியர்வைதனில்!
அனவரின் உடல்களிலும்!
ஓடுவது செந்நீரே!
யார் யாரோ வந்தார்கள்!
ஏதேதோ சொன்னார்கள்!
காற்றடித்த திசைவழியே!
காணாமல் போனதம்மா!
முடியாமல் பிதற்றுகிறேன்!
முடிவென்ன கதறுகிறேன்!
மூடியிருப்பது விழிகள் மட்டுமல்ல!
மூடர்களின் இதயங்களும் தான்!
உள்ளத்தைக் கேள் - அது!
உள்ளதைச் சொல்லும்

யாரு செஞ்ச பாவம் ?

மகா.தமிழ்ப் பிரபாகரன்
மௌனத்தையும் குற்றம்!
சாட்டியே பழக்கப்பட்டதடா!
நான் கண்ட!
பந்தம்...!
எமது செவிகேட்கவே!
மட்டம்தட்டுதடா!
சில சொந்தம் !!
இவர்களின்!
கார்த்திகைமாத விரதம் போலே!
மௌனம் காத்தவனை!
தூண்டிவிட்டு என்னதொரு!
வேடிக்கை சல்லாபம்!
அர்ப்பமான இன்பமயம்...!
மௌனமென்மை!
குலைந்தால்!
அர்ப்பமயம் பந்தத்திற்கு!
காதுக்கினிய!
இனிமைகளாகுமா?!
நம்பிய போதெல்லாம்!
ஏமாளி,!
கோமாளியானேன்...!
வெம்பிய நாழிகையாவும்!
தன்னந்தனிமையில்!
கண்ணீரானேன்...!
சிலர் வேசங்களின்!
ஒத்திகை கண்டுக்கழிக்க!
விசமத் தனமாய்!
பெத்தவக்கூட்டுக்குள்ளே நஞ்சை!
கக்கியது சொந்தம்...!
விளைவு ! பெத்தவள்!
ஓலமாய் கடுங்கூறும்!
வார்த்தை வழியே என்!
செவியுணர சொன்னாள்!
நீயெல்லாம் கவித!
எழுதறனு தமிழு!
தமிழுனு தெருத்!
தெருவா சோத்துக்கு!
பிச்சயெடுக்க போற...!
தாயே !!
நீயும் படைப்பவள்!
நானும் படைப்பவன்!
ஈரெய்ந்து மாசம்!
தாமதமாயிற்று!
என்னை படைக்க...!
அம்மா !!
பூலோக பிம்பத்தில்!
நான் ஒளிர!
நீ காரணம்...!
பிரசவ வலியில்!
உமக்கு அனுபவமுண்டு!
கலைஞனின் கைவலி!
உணர்ந்ததுண்டா !!
உன் கருவறையில் ததும்பி!
இருளில் குடியிருந்த!
உன் மகன்!
உணர்கிறேன் !!
படைப்பாளியாய்...!
நானும் முதல்வனாய்!
உன் புதல்வனும்!
மிளிர்வேன்!
தேம்பாதே அம்மா

என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே?

சத்தி சக்திதாசன்
என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?!
----------------------------------------------!
கேள்விகளை நான் கேட்பேன்!
அது என் கடமை!
பதில்களைத் தருவது!
உன் திறமை.!
பத்துநாளாய்ப் பட்டினி!
பாடிக் கொண்டே கையை நீட்டும்!
பாலகன் அவனையும் இறைவா!
பசியுடன் படைத்தது நீயா ?!
நோயினில் தவித்திடும் அத்தாய்!
பாயினில் உறங்கிடும் அவள் பதி!
கோலங்கள் பலவாய் மாற்றிக்!
கொடுத்ததும் நீயா சொல் ?!
பொழுது போக்க பள்ளிக்கு!
போகும் சில செல்வச் சிறார்!
பள்ளிவாசலில் கண்ணீரொடு!
பார்த்து நிற்கும் சின்னஞ் சிறுவன்!
பாரதன் ராஜ்ஜியத் தலைவனும் நீயா ?!
கண் மூடும் போதும், விழிக்கும் போதும்!
கடவுள் உன்னை கண்பதே பணியென!
கடமை தன்னை கடவுளாய்ப் புரியும்!
கர்மவீரன் கண்களில் கண்ணீர்!
காலத்தின் கோலத்தை வரைவது நீயா ?!
பெண்களாய்ப் பிறந்த காரணத்தால்!
பொன் கேட்கும் உலகின் பேராசையால்!
வாழ்வின்றித் தவிக்கும் கன்னியரின்!
வதைப்பைப் போக்கும் வகையில்லா!
வாழ்வை வகுத்த வள்ளலும் நீயோ ?!
உழைத்து, உழைத்து தம்முடலை!
உருக்குலைத்த மக்கள் வாழ்வினில்!
உயர்ச்சி என்பதே இல்லா நிலமை!
உனது உலகம் இதுவோ சொல் ?!
நீயில்லை என்பார் வரிசையில்!
நானில்லை என்று அறிவாய் இறைவா!
ஏனில்லை உலகில் நியாயம் என்றே!
ஏக்கம் நெஞ்சில் தோன்றுது அத்னால்!
எழுந்தன கேள்விகள் பதிலென்ன சொல்?!
-சக்தி சக்திதாசன்

கதவு .. கவிதை

கவிதா. நோர்வே
01.!
கதவு !
-----------!
கதவுகளை இறுகச்சாத்திவிட்டாய்!
நான் உள்ளே வருவதெப்படி?!
உடைத்து வந்தாலோ!
உடைந்த கதவுகள் பற்றியே!
சீற்றம் வருகிறது!
உன் கதவுகளுக்குரிய சாவி!
இப்போது என்னிடமில்லை!
சாவியில்லாமல் பூட்டுடைக்க!
எனக்கும் இஷ்டமில்லை!
சாவிகள் கிடைத்தாலும்!
உன் விருப்பின்றி!
ஒருக்காலும் திறவேன் நான்!
திறக்கும் என!
நிலவின் இராத்திரிகளிலும்!
நிலவை விடியல் தின்றபின்னும்!
உன் கதவருகில் !
காத்திருந்த நான்!
தற்போது!
எழும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்!
என் வெறுமை இப்போது!
பரந்த வெளிகளால்!
நிரப்படுகிறது!
சிறு புள்ளியாகி!
மறைந்துகொண்டிருக்கிறது!
உனக்கும் எனக்குமிடையிலான!
மூடிய கதவு!
விதிகள் உடைபடும் சப்தம்!
காலின் கீழ்!
நீ கதவு திற!!
பொறுக்கிச் சேகரித்த!
பழைய சாவிகளெல்லாம்!
அந்த வாசலில்!
வைத்திருக்கிறேன் நான்!
காற்றாகிவிட்ட மனதிற்கு!
கதவுகள் இனி எதற்கு?!
மிக அழகு!
வெளி நிலவு!!
கதவற்ற பிரபஞ்சம்!!
திறந்த பூமி!!
நான் போய்க்கொண்டிருக்கிறேன்!
02.!
கவிதை!
----------------!
நான் ஒரு கவிதையை எடுத்துப்படிக்கத்!
தொடங்குகிறேன்!
கவிதையென்றால் எனக்குப் பிரியம்.!
காற்றாய் என்னை எப்போதும்!
அவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.!
அதனால்!
எல்லாக் கவிதைகளுக்கும்!
என் மேல் பிரியம் என்று சொல்வதற்கில்லை!
சில கவிதைகள் அடிவானத்தின் அழகினை போல!
என்னுடன் பயணிக்கிறது!
சில கவிதைக்கு தொட்டாச்சுறுங்கி போல!
என்னை கண்டதுமே முகம் சுருங்கிவிடுகிறது!
சில கவிதைகள் கண்டும் காணமல்!
நழுவிவிடுகின்றன!
சில கவிதைகள் என்னைக் காதலிப்பதாக!
தீவிரம் காட்டுகின்றன!
எனக்கு தெரிகிறது சில கவிதைகள்!
அழகாய்ப் பொய் சொல்கின்றன!
இதமான பின்அந்திகளாய் சில கவிதைகள்!
என் வீடு வந்து போகின்றன!
முற்றத்தில் மட்டும் சுகம் கேட்டுப்போகிறது!
சில கவிதை!
ஒரு கவிதை எப்போதும் நினைவில் நிற்கிறது!
ஒரு கவிதையுடன் பேசாவிடில்!
ஒரு நாள் மரணித்துப்போகிறது.!
கைகளுள் சினுசினுத்துக்கொண்டு!
அழகானதொரு ஹைக்கு போல!
ஒரு கவிதை என்னையே சுற்றி வருகிறது !
எப்போதும் இரண்டு கவிதைகள்!
என்னோடே உறங்குகின்றன!
ஒன்று நெருக்கமாய்…!
இன்னொன்று எதிர்த்திசையுடன்.!
உறவாடிக்கொண்டிருக்கிறது!
சில கவிதைக்கு என்மேல்!
பெருமரியாதை!
சில கவிதைகளுக்கு என்னைத்!
தப்பாகவே புரிபடுகிறது!
சில கவிதை ஆர்வக்கோளாரில்!
அரித்துக்கொண்டிருக்கின்றன என்னை.!
கழுத்தறுத்த கவிதைகளும் உண்டு!
சில கவிதைகள்!
சாலையோரக் கானல் நீரைப்போல!
நெருங்கமுதலே கரைந்துவிடுகிறது!
போர்க்காலக் கவிதைகள்!
பரிதாப்பத்திற்குரியவை!
படிப்பதற்க்குக்கூட விரல்நடுக்கம் ஏற்படுகிறது!
இந்தக் கவிதைகளின் அழிவு!
ஏற்புடையதாயில்லை!
மூர்க்கமான கவிதைகளை!
என்னுள் நெருங்க விடுவதில்லை!
ஒரு கவிதை கனவுகளிலும்!
என் தலை கோதிக்கொண்டிருக்கிறது!
அன்பு செய்யும் கவிதைகள்!
எப்போதும் கண்மூடிய புத்தனைப்போல!
காட்சியளிக்கின்றன.!
கிழிந்துவிட்ட கவிதைகள் சிலவும்!
எரிந்து போன கவிதைகள் சிலவும்!
நினைவுகளாய் கனக்கிறது!
என்மீது கோபமான கவிதைகளை!
எனக்கு மிகவும் பிடிக்கும்!
அவை போலியாய் சிரிக்கும்போது மட்டும்!
முஞ்சியில் ஓங்கிக் குத்தத் தோன்றும்!
வன்முறைக் கவிதைகளுடன்!
எப்போதுமே வாக்குவாதம்!
சில அகிம்சைக் கவிதைகள்!
அர்ப்பத்தனமாக இருக்கின்றன!
மரபுக்கவிதைகளின் இம்சை சமயங்களில்!
எல்லை மீறுகிறது!
இவை புதுக்கவிதையைப் போல!
பாசாங்கு செய்வதில் அர்ப்பசந்தோசமடைகின்றன!
வயதேறிய கவிதைகள்!
நிதானமானவை, அனுபவமிக்கவை!
ஒருசில கவிதைக்குப்!
புறம்பேசுதல் பிடித்தமாயிருக்கிறது!
என்னில் பொறாமை எனும் கவிதைகண்டால்!
சிரிப்பு வருகிறது!
பக்கத்தில் இருந்தே சூழ்ச்சிசெய்யும்!
கவிதைகளையும் உடன் வைத்திருக்கிறேன்!
சில கவிதைகள் கலாரசனை கொண்டவை!
என்பதற்காகவே ஒத்துப் போகிறது!
சில கவிதைகள் கவிதைக்குரிய தகுதியை!
இழந்துவிட்டிருக்கின்றன!
நான் காதலித்த கவிதை ஒன்று!
தொலைந்துபோகத் துடித்துக்கொண்டிருக்கிறது!
எந்த சலனமுமற்று எல்லாக் கவிதைகளையும்!
ரசிக்கவே விரும்புகிறேன்;.!
சிலநேரங்களில் மட்டும்!
கவிதைகள் எல்லாம் மீண்டும்!
மனிதராகத் தெரிகின்றன!
அந்த நேரங்களில் ஒரு ரசிகனாக!
என்னைப் பாதுகாத்துக்கொள்ள!
உண்மையிலேயே!
நான் ஒரு கவிதையை எடுத்துப்படிக்கத்!
தொடங்குகிறேன்

நாம் நாமாக

றஞ்சினி
தயவு செய்து!
நாம் காதல் செய்வோம்!
என் உதடுகள் இரண்டும்!
உன் உதடுகளை முத்தமிட்டும்!
அடிவானம் கரைந்து மறையும் வரை!
நாம் திருப்தியுறாதவர்களாக!
எமக்காக!
இந்த உலகம் விரியட்டும்!
நீ!
என்னிடத்தில் இருக்கும்போது!
ஆணாக இராதே!
என்னை!
நீயாக மாற்ற முயலாதே!
நான் நானாகவும் நீ நீயாகவும்!
இருப்போம்!
எமக்கு இப்போது பலம்!
பற்றிய பிரச்சனை வேண்டாம்!
நான் பெண்!
ஆணின் பார்வையில்!
வெற்றிடங்களும் ஓட்டைகளும்!
நிறைந்தவள்!
நீ உன் ஆண்புத்தி ஜீவத்தால்!
என்னை நிரப்பி ஒட்டி சீர் செய்ய!
நினைக்காதே!
பின்!
எமது உதடுகள் இரண்டும் ஒட்டாது!
எமது காதல் இன்பம் பெறாது!
தயவுசெய்து நாம் காதல் செய்வோம்!
நாம் நாமாக இருந்து.!
!
நன்றி : இந்தியா டுடே