தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சீர்திருத்தம்

சரஸ்வதி பாஸ்கரன், திருச்சி
நாங்கள் மதச் சார்பற்றவர்கள், !
ஆனால் மதக் கலவரங்கள் !
மட்டும் நடப்பதுண்டு . !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் அமைதிப் !
பூங்காவில் வசிப்பவர்கள் ; !
ஆனால் குண்டுகள் !
தவறாமல் வெடிப்பதுண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் உலக !
சமாதானத்தை விரும்புகிறவர்கள் ; !
ஆனால் பிருத்வியும் !
அக்னியும் இங்குண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் கட்டுக்கோப்பானச் !
சட்டம் உடையவர்கள் ; !
ஆனால் கற்பழிப்புக்கள் !
காவல்நிலையத்திலும் உண்டு. !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் பெண்மையைக் !
காத்துப் போற்றுகிறவர்கள்; !
ஆனால் ...... !
தொட்டில் குழந்தைத் 'திட்டம் உண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் பகிர்ந்துண்ணும் !
பழக்கம் உடையவர்கள் ; !
ஆனால் நதிநீரில் மட்டும் !
அதற்கு விலக்குண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
சீர்திருத்தம் பற்றி !
மேடையில் வாய்க் கிழிய !
பேசுபவர்கள் ; வீட்டில் பெண்களை !
மட்டும் பூட்டி வைப்பதில் வல்லவர்கள் ; !
நாங்கள் இந்தியர்கள்

தொலைவானில்.. மின்னல்களில்

எம்.ரிஷான் ஷெரீப்
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை.. மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்!
01.!
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை !
----------------------------------------------!
வளைதலும்!
வளைந்து கொடுத்தலுமான!
நாணல்களின் துயர்களை!
நதிகள் ஒருபோதும்!
கண்டுகொள்வதில்லை !
கூடு திரும்பும் ஆவல்!
தன் காலூன்றிப் பறந்த!
மலையளவு மிகைத்திருக்கிறது!
நாடோடிப் பறவைக்கு !
அது நதி நீரை நோக்கும் கணம்!
காண நேரிடலாம்!
நாணல்களின் துயரையும் !
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து!
தான் கண்டுவந்த!
இரயில்பாதையோர நாணல்களின் துயர்!
இதைவிட அதிகமென!
அது சொல்லும் ஆறுதல்களை!
நாணல்களோடு நதியும் கேட்கும்!
பின் வழமைபோலவே!
சலசலத்தோடும் !
எல்லாத்துயர்களையும்!
சேகரித்த பறவை!
தன் துயரிறக்கிவர!
தொலைவானம் ஏகும்!
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்!
கண்டுவரக் கூடும் !
02.!
மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள் !
------------------------------------------!
இருப்புக்கருகே!
மூர்க்கத்தனத்தோடு!
பெரும் நதி நகரும்!
ஓசையைக் கொண்டுவருகிறது!
கூரையோடுகளில் பெய்யும்!
ஒவ்வோர் அடர்மழையும் !
வீரியமிக்க!
மின்னலடிக்கும்போதெல்லாம்!
திரள்முகில் வானில்!
இராநிலாத் தேடி யன்னலின்!
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்!
பிஞ்சு விரல்களை அழுது கதற!
விடுவித்துக் கொண்டோடுகிறாள்!
குழந்தையின் தாய் !
தொடர்ந்து விழும் இடி!
ஏதோ ஒரு!
நெடிய மரத்தை எரித்து அணைய!
நீயோ!
இடி மின்னலை விடவும் கொடிய!
காதலைப் பற்றியிருந்தாய்!
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்!
கருணை மிகுந்த ஓர் கரம்

சொல்லி வா

வசந்த் கதிரவன்
அவன் மரணிக்கும் போது !
ஒரு சேதி சொல்லிச் சென்றான் ... !
ஆச்சரியப்படுத்திய அது !
அச்சப்படவும் வைத்தது !
விரல் பற்றி !
குளிர்ந்த மூச்சோடு !
கருவறைக் குரலில் !
அத்தனையும் !
சொன்னான் ... !
தூரத் தெரிந்த !
விளக்கொன்றில் !
கண்ணைக் குவித்தபடி !
இன்னும் சொன்னான் !
கடைசியாய் சொன்னான் !
அவனிடம் இதைச் சொல்லாதே... !
சொன்னவை சொல்வதற்கே !
மரணிக்கும் போது !
என் சத்தியம் மீறிச் சொல்கிறேன் !
நீயும் சொல்லி வா

தனிமையில்

சின்னு (சிவப்பிரகாசம்)
கனவுகள் ஆதரிக்க!
கவலைகள் கண்விழிக்க!
இரவினில் விழித்திருந்தேன்!
தனிமையில் அமர்ந்திருந்தேன்!
கடும்புயல் கடந்து வந்தும்!
நெடும் பாதை தெரிகிறது!
உறவுகள் பிரிந்ததனால்!
தனிமையே கொல்கிறது!
கனவுகள் பிறந்தாலும்!
கவலையில் கரைகிறது!
கரையிலே நடந்தாலும்!
பெருங்கடலே தெரிகிறது!
வடுக்களை பார்க்கவில்லை!
தீப்புண்ணும் ஆறவில்லை!
இரவுகள் தூக்கமில்லை!
இனி ஒரு உறவும் இல்லை!
பொன்னில் மனதை வைத்து!
பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்!
மண்ணில் மனதை வைத்து!
மட்கிடும் நிலையைக் கொண்டேன்!
என்னில் உள்ளதெல்லாம்!
பொய்யும் புரட்டும் ஆக!
கண்ணில் நீர் வழிந்தும்!
கவனிக்க ஆளில்லை!
சொல்லில் உள்ளதெல்லாம் சூட்சமம் என்றுசொல்லி!
சொல்லிய மனிதரெல்லாம் சூனியர் என்றே எண்ணி!
அண்டை அயலவரும் ஆரிய உறவினரும்!
வேண்டாம் என்றே சொல்லி!
விருட்டென்று புறப்பட்டும்!
கவலைக்குள் கரைவதனால்!
கவனிக்க ஆள்வேண்டி!
கனவுகளில் தேடுகிறேன்!
விட்டு வந்த சொந்தங்களை!

நான் கூற நீ கேட்க

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
நிமிடத்தின் ஒர் பாகத்தை எனக்குத்தா !
என்மனவுறையை சிறிது அகற்றுகின்றேன் உன் !
செவிகளைத் திறப்பாயா ? !
உள்மனத்தின் அசுத்தங்களை கழுவும்போது அது !
உன்வீட்டுக் கால்வாய் வழியாக ஒடுகின்றது !
என் பயணப்பாதையில் சிறிது ஓய்வெடுக்க நான் !
எண்ணிய போதுன் இதயத்தைக் கடந்து !
கொண்டிருக்கின்றேன். !
மைல் கணக்காய் நடந்து விட்டேன் இன்னமும் !
அரைவாசிப் பயணம் கூட முடியவில்லையே !
முட்புதர்கள் முடிந்துவிடும் !
என எனக்கு ஏன் பொய்யுரைத்தாய் ? !
நான் நடக்கும் பாதைக்குப் பெயரே நெருஞ்சிப் பாதையாம். !
ஓடக்கூடாதென உட்கார்ந்தபடியே உத்தரவிட்டு விட்டான். !
சிந்தனைச் சுமைகளை நானிறக்கி வைக்க !
சிலைபோலமர்ந்து நீ கேட்டிருக்க !
உன்னிதயம் கனக்கின்றதே ஏனது ? !
சமுதாயாத்தின் அவலட்சணங்களை அகற்றிட !
அழுத்தமாய் போராட உன் துணை வேண்டும் !
மக்களின் மனங்களை பிணைத்திருக்கும் !
மாயை எனும் அந்தச் சங்கிலியை !
அறுத்தெறிவோம் என்னுடனே !
கூட வருவாயா ? !
விஞ்ஞானத்தை மறுக்கும் !
வீணர்கள் கூட்டத்தை !
வீழ்த்த ஓர் யுத்தம் தேவை !
விரைந்து நீ வாராயோ? !
ஆன்மீகம் எனும் அற்புத உணர்வு !
ஆண்டவன் எனும் அழியா ஞானம் !
அடிப்படையையே அழித்துவிட்டு சில தீயர் !
அறிவை மறுக்குமொரு அநியாத்தை !
அழிக்கவுன் துணை தேவை. !
பயணம் முடிந்தது பாதிதான் மீதி ஏக நின் தோள்வலிமை தேவை !
சிறிதுநேரம் என் விழிகளை மூடிக் கொள்கின்றேன் !
கனவெனும் தேரேறி களைவேன் அறியாமையை !
தோழனே ! !
தூக்கத்தைக் கலைக்காதே ஏனென்றால் !
ஏக்கம் விற்பனையாகா சந்தையது !
என்பேனா கக்குவது மையல்ல என்னிதய ரத்தமே ! !
முன்னேற்றங்கள் எல்லாம் க்ஷவ்வுலகில் !
மூலையில் !
முடங்கிக் கிடக்கின்றனவே !
நியாயங்களை ஏன் மூட்டையாக் கட்டி !
நிறுத்து நிறுத்து !
நீசருக்கு விற்கின்றாய் ? !
தடையெனும் தளயறுக்க கொண்ட கத்திரியில் !
நான் ஒருபாதி தான் !
மறுபாதி நீயும் நான்போகும் திசையில் அசையாவிட்டால் !
தவறாமல் தடைகள் தங்கியேவிடும் !
உன்னிதயத்தின் முன்னே நடந்து கொண்டிருக்கின்றேன் !
போகும் ஊருக்கு நீயும் சேர்ந்து நடக்காவிட்டால் !
விடிவுகள் விளக்கமற்றுப்போய்விடும் !
வெற்றிகள் !
வெறுமையாய்ப் போய்விடும் !
சிலர் மட்டும் வாழும் உலகில் !
பலர் ஏக்கம் தீரும் வகையில் !
நான் கூற !
நீ கேட்டு !
சேர்ந்து படைக்கும் ஓர் புதுவுலகில் !
ஆண்டவன் பெயரால் !
அபிஷேகம் மட்டுமின்றி !
அறிவையும் ஆக்கி வைப்போம் !
நேரம் நெருங்குது வா நாம் பயணத்தை தொடர்வோம்

கவிஞன் .. மழைத்தவம்

ப.மதியழகன்
01.!
கவிஞன் !
---------------!
மொழியால்!
முல்லைச் சரம் தொடுப்பான்!
இருளை!
வரிகளால் கிழிப்பான்!
மாயத்திரை அகற்றி!
ஞான தரிசனம் பெறுவான்!
தமிழை மழையெனப் பொழிவான்!
எழுதுகோலால் ஓவியம் வரைவான்!
கற்பனையில் சிறகடித்துப் பறப்பான்!
இறுமாப்புடன் வானை வம்புக்கிழுப்பான்!
கனவில் கூட கவியாகவே!
நடமாடுவான்!
வாழ்க்கை நதியில் எதிர் நீச்சலடிப்பான்!
இயற்கையின் பேரழகை கண்டு வியப்பான்!
தமிழுக்கு மகுடம் சூட்டி!
களிநடனம் புரிவான்!
இலக்கியத்தில் ஊறித் திளைப்பான்!
பாரதி போலவே நடப்பான்!
இனத்துக்கு இழுக்கு நேர்ந்தால்!
விஸ்வரூபம் எடுப்பான்!
காவியங்கள் பல படைப்பான்!
காதலில் சிக்கித் தொலைப்பான்!
பித்தனாய் சுற்றித் திரிவான்!
எழுத்தில் சித்தராய் தவம் புரிவான்!
என்றும் விலை போக மாட்டான்!
தமிழின் மானத்துக்கு தீங்கு நேர!
விடமாட்டான்!
தீக்கனலாய் என்றும் தகிப்பான்!
கவிச்சுடராய் ஒளிவெள்ளம் தருவான்!
தாயை தெய்வமாய் மதிப்பான்!
பெண் உரிமைக்கு குரல் கொடுப்பான்!
அவன் வாழும் காலங்களில்!
நலம் விசாரிக்காதவர்கள்!
இறந்த பின் சிலை வைப்பார்கள். !
02.!
மழைத்தவம் !
------------------!
எங்கே சென்றாய் மழையே!
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு!
எங்கே சென்றாய் மழையே!
காற்றே கருணை கொள்!
கார்மேகத்தைக் கடத்தி வந்து!
இந்த ஊருக்கு மேலே நிறுத்திவிடு!
வருண பகவானே!
மரங்களெல்லாம் இலையுதிர்த்து!
நிற்பதைப் பார்!
தளிர்க்கச் செய்ய!
தாராளமாய் தண்ணீர் பாய்ச்சு!
உன்னை வரவழைக்க!
கழுதைக்கு கல்யாணம்!
உன்னை உருக வைக்க!
இசை மேதைகளின்!
இன்னிசை கானம்!
மழை மகளே புவியரசன்!
உன் மீது மையல் கொண்டு!
தவிப்பதைப் பார்!
முத்தமிட்டு சங்கதி பேச!
உன்னை அழைப்பதைப் பார்!
ஆனந்த வெள்ளத்தில்!
நீ மிதக்கும் வேளையில்!
அருவியாய் நிலத்தின் மீது!
நீரை ஊற்று!
மழை தேவதையே!
உன் சிறகிரண்டையும் ஒடித்து விட்டனரா!
உன்னைத் தனிமைச் சிறையில்!
அடைத்துவிட்டனரா!
பயிர் செழிக்க உயிர் தழைக்க!
மனது வை மழையே!
விண்ணோடு எங்களால்!
சண்டையிட முடியாது!
வீண் பேச்சு கதைக்குதவாது!
வானம்பாடி கானம் பாடி!
வசந்தத்தை அழைப்பது போல்!
நாமெல்லாரும் அழைத்திடலாம்!
காற்றில் மண்வாசம் வருது பாருங்கள்!
கிழக்கு திசை கறுக்கத் தொடங்குது பாருங்கள்!
மழைதேவியே!
வெயில் அரக்கனை சம்ஹாரம்!
செய்து கொண்டிருக்கின்றாயா!
உயிர்களுக்கு வரமருள!
துணிந்து விட்டாயா!
உனது வருகைக்கு இடியோசை!
கட்டியம் கூறுகிறதே!
மழைத்தாயின் மனதில்!
ஈரம் இருக்கிறது!
சற்று அண்ணாந்து!
வானைப் பாருங்கள்!
மின்னல் கண்ணைப் பறிக்கின்றது

அடங்கா மண்ணிலே...! அமைதியாய்

அரசி
துயில் கொண்டிருப்பேன்..!!
-----------------------------------------------------------!
இலட்சியங்கள் கனவாகி விடுமோ...??!
இரவுகள் விடியாது போகுமோ...??!
காத்திருந்து...,!
காலங்கள் அழிந்தது..!!
காதலன் காற்றோடு கரைந்து போனான்..!!
சொந்தங்கள் சிதறி...!
சொர்க்கம் ஏகின..!!
சொல்ல வார்த்தை இல்லை..!
சொப்பனத்திலும் அழுகை தான்..!
கால் போன போக்கிலே,!
காடு மேடெல்லாம் நடந்து...,!
பித்து பிடித்தவள் போல,!
பிதற்றி பிதற்றி வந்தேன்...!!
பிஞ்சுகளை பிய்த்து போட்ட எறிகணை,!
பேதை என்னை விட்டு வைத்தது ஏனோ..??!
உறவுகள்.. உயிரை விட்ட கிபிரின் குண்டுக்கு - நான்!
உயிர் தப்பியது ஏனோ..??!
இடைத்தங்கல் முகாமில் வந்து...,!
இடிபடுவதற்காக....,உயிர் மீண்டு வந்தேனோ...??!
இதற்கு...நான் என் மண்ணுக்கு,!
உரமாகி போயிருக்கலாம்..!!
அடங்கா மண்ணிலே...!!
அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!!
அன்பு மண்ணிலே...! உயிர்!
அடங்கி போயிருப்பேன்...!!!!
உணர்வை உயிர்ப்பித்து,,!
உயிரைக்கொடுத்து...,!
உடலை மண்ணுக்கு தந்திருப்பேன்...!!
உண்மையோடு நான் தூங்கி போயிருப்பேன்..!!
மாறாக...!
உணர்வை இழந்து...,!
உடலை வருத்தி....,!
பொய்மையோடு போராடி,,!
உயிரோடு மரணித்து கொண்டிருக்கின்றேன்

மலர்கள் பேசினால்

ரசிகவ் ஞானியார்
மாடிவீட்டுப் பாடையிலும்.. !
மரித்திருக்கின்றோம்! !
ஏழை வீட்டுத் திருமணத்திலும்.. !
சிரித்திருக்கின்றோம்! !
மலர்கள் சாதி என்றாலும்.. !
மனிதநேயம் உண்டு! !
நல்லவேளை! !
மனிதசாதியாய் !
பிறக்கவில்லை! !
------ !
வந்தர்க்கெல்லாம் .. !
மணம் வீசுவோம்! !
வண்டுகளுக்கு மட்டும்.. !
முந்தானை விரிப்போம்! !
------ !
தாசிகளின் கூந்தலிலும் !
தவமிருக்கும் எங்களுக்கு !
*விதவைக்கு மட்டும்.. !
விதிவிலக்கு ஏனோ..? !
* !
------ !
அரசியல் மாலைகளில் !
ஆணவப்படுவதை விட.. !
ஆண்டவச் சன்னிதானத்தில் !
அடிமைப்படவே விரும்புகிறோம்! !
!
*இதயம் நெகிழ்வுடன் !
ரசிகவ் ஞானியார் !
* !
-- !
K.Gnaniyar !
Dubai

எப்போது

மதிரஞ்சனி
கவிஆக்கம்: மதிரஞ்சனி!
உன்னை காண என்!
விழிகள் தவிக்கிறது!
உன் நிழலினை என்!
விழிகள் தேடுகிறது!
நீ என்னை பார்ததும் - என்!
விழிகள் தரையை நோக்கின!
நீ என்னை பார்க்காதபோது என்!
விழிகள் உன்னை இரசித்தன!
உன்னை நேரடியாகப் பார்த்து - என்!
விழிகள் பேசும் நாள் எப்போது

தவம்!

மாவை.நா.கஜேந்திரா
கொட்டும் மழையில் !
குடைநடுவே!
நாம் இருவரும்!
நடைபயின்ற காலங்கள்!
கோடை வெயிலில்!
குளிர்தேடி!
ஒட்டிக்கொண்டிருந்த!
ஓரங்கள்!
உன் கால்கொலுசொலியை!
என் கவிதையாக்கிய நாட்கள்!
இன்று நட்ட நடுவானில்!
நான் மட்டும் தனியே!
உன் தரிசனத்துக்காய்…!
காத்திருப்பில் கூட!
சுகமுண்டு-எனும்!
சொல்லை நம்பி..!