தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கால்சட்டையின்.. இன்றைய சுடுகாடொன்றில்

வித்யாசாகர்
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!.. இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம் !
!
01.!
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!
---------------------------------------------------------------!
நாங்கள் பிடித்த மண்வெட்டியும்!
மண்கூடையும்!
சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை,!
சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன;!
சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட!
வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த!
அப்பாவின் சாராயமும் -!
அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது;!
பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்!
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை!
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்!
கருகித் தான் போனது;!
ஏங்கிய மனசும், எட்டிநின்று பார்த்த!
ஆசைப் பார்வையும் ஈரமே காயவில்லை; ஈரத்தின்!
சதுப்பிலும், ஏறி அடுக்கிய செங்கற்களின் இடுக்கிலும்!
வாழ்க்கை வெறுமனே புதைவது வலித்தது; !
படித்து வராத அறிவும், பகுத்தறியக் கல்லா!
கல்வியும் வெறும் தார்சாலையில் தீர்வது தீரட்டும்,!
நாளை மரணித்துப் படுக்கும் பாடைக்கு, பார்ப்பவர்!
'மண்வெட்டியின் பிணமென்று' பெயர்வைப்பர் வைக்கட்டும்;!
தெருவோர தூளியின் ஓட்டையில் வரும் காற்றும்!
எங்கோ தூர இடைவெளியில் கேட்கும் பிள்ளைகளின்!
படிக்கும் சப்தமும், அம்மா சேலையின் வாசமும், அப்பா !
என்றோ வங்கித்தரும் புதிய சட்டையின் பூரிப்பும் போதும் போதும்;!
பெரிய படிப்பு படித்து காதில் ஸ்டெதாஸ்கோப் மாட்ட!
திடீரெனக் கனவெல்லாம் பூக்கவில்லை, அந்த புதிய புத்தகத்தின்!
வாசம் நுகர அன்றிலிருந்தே ஒரு ஆசை, ஆயுதம் பிடித்த கையுதறி!
யாரேனும் புத்தகத்தைத் திணித்தால்; கெட்டியாகப் பிடித்துநடக்க ஆசை;!
ஆசையென்ன ஆசை!
அது தெருவோர சல்லியுடனோ !
தீப்பெட்டியின் குச்சிகளோடோ!
ஊதுபத்தியின் வாசத்திலோ கலந்து மணக்கும் மணக்கட்டும்;!
நாங்கள் படித்தாலென்ன!
எங்களின் கிழிந்த கால்சட்டைகள் ஒட்டித்!
தைக்காவிட்டால்தானென்ன - உங்கள் மனது லேசாகும்!
வேண்டுமெனில் ஒரு உச்சுக் கொட்டிவிட்டு கடந்துப் போங்கள்;!
எங்களுக்கான வாழ்க்கை எப்பொழுதும் போல்!
மண்வெட்டியிலும் மண் கூடையிலும்!
படிக்கக் கிடைக்காத பாடங்களாகவே நிறையும்!
அல்லது உங்கள் தீபாவளியில் பட்டாசாய் நன்கு வெடிக்கும்;!
காலத்திற்கும் ஒரு குறையாய் எங்களுக்குள் மட்டும்!
இது வலிக்கும் வலிக்கட்டுமே; எங்களுக்கு வலித்தாலென்ன - நீங்கள் போய்!
அந்த உழைப்பாளர் சிலையில் ஒன்றிற்கு கால்சட்டையும்!
இன்னொன்றிற்கு குட்டைப் பாவாடையும் மாட்டிவிடுங்கள்,!
அல்லது யாரேனும் சிபாரிசு செய்து - அந்த!
உழைப்பாளி சிலைக்கருகே யிரண்டு!
சிறுவர் சிலைகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்;!
நாங்கள் படிக்காத கல்வியை கவிதையாக்க நாளையது உதவலாம்!!!
02.!
இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம் !
-------------------------------------------------------------------!
மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம்!
இன்னும் காய்ந்திடாத மனத்திரையில் !
விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது!
மரணத்தின் பெயர்தான் கொலையில்லை;!
சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில்!
சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் !
நடக்கின்றன கொலைகள் -!
உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே;!
மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம்!
தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும்!
அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ கண்ணீரோ!
போனது போனபடியே நகர்கிறது காலம்;!
யாருக்கு யாருண்டு!
யாரின் அசைவில் யாருக்கு வலிக்கிறதிங்கே!
யாருமில்லா தனியுலகில் எவர்குறித்து யெண்ணியழ - !
இத்தனை இத்தனைச் சுயநலமோ?!!!!
சோற்றிற்கு சண்டையிட்டு சொத்துக்கு கொலைசெய்து!
பாட்டிற்கு கடல்தாண்டி படத்திற்கு வீடு விற்று!
வேலைக்கு லஞ்சம் கொடுத்து ஏழையின் ரத்தமருந்தி!
காதலுக்கு வீடுவிட்டு கட்டியவளை தெருவில் நிறுத்தி !
ச்சி........... மனிதர்களா நாம்?!
மனிதம் நிரம்பிய -!
உணர்விற்குத் தக வாழ்க்கையையா வாழ்கிறோம்?!
பிறர் நல அக்கறையின்றி பிறப்பவர் யாருமிலர்!
பிறர்நல னெண்ணாதார் இறப்பதில் வருத்தமுமில்லை!
பிறருக்கு ஈயாதான் இருப்பதில் ஏதுமில !
உயிர் அது இழுத்து இழுத்து ஒருவீட்டில் விளக்கெரிய -!
வீடு சுற்றியொரு அடர்ந்த இருட்டுப் படருமெனில் !
விட்டுத் தொலையதை;!
கனக்கும் சுடு காடுதனில் -!
துளிர்க்கட்டும் புதிய மனிதம் உனக்கும் எனக்கும் பிறருக்குமாய்

பஞ்ச பண்டவர்கள்

முத்தாசென் கண்ணா
(வறட்சியினால் விவசாயிகள் எலிக்கறி தின்று உயிர் வாழ்ந்தார்கள் என்ற செய்தி உண்மையென்றால் இந்த புலம்பலும் உண்மை தான்)!
எத்தன மொற ஏறுழுதும்!
எள்ளுளுந்து வெளையலையே!
எட்டி எட்டிப் பாத்தாலும்!
ஒசந்த மானம் கருக்கலையே!
கொழும்பு ஊத்துன சோறெல்லாம் !
கொழுத்துப் போன ஜனங்களுக்குத்தான்!
எத்தினி வருசம் கடந்து போனாலும்!
ஏழைக்கு எப்பவுமே எள்ளுருண்டைதான்!
ஒத்த வேல கஞ்சி ஊத்தி!
கட்ட உசிர புடிச்சு வெச்சிருக்கோம்!
இப்படியே ரெண்டு நா கடந்தா!
இருக்கப்போறது ஒடம்பு மட்டும்!
ஒடையெல்லாம் வத்திப்போச்சு !
இந்த கூழாங்கல்லுக சாகலியே!
திங்க மணல தேடினாலும்!
லாரி போக நிக்கலியே!
இதே கேள்விய நாங்களும்!
எத்தினி நாளா கேட்டுகிட்டிருக்கோம்!
இப்பவாவது உண்மைய சொல்லுங்க !
எப்பத்தான் எங்களுக்குத் தை பொறக்கும்?!
-- முத்தாசென் கண்ணா

பறவைகள் உலகம்

வசந்த் கதிரவன்
எல்லாப் பறவைகளுமே !
கழுகின் கண்ணும் !
கிளியின் மூக்கும் !
மயிலின் தோகையும் !
தேடி ஓடுகின்றன !
குயிலின் குரலை !
வாங்கிய சேவலொன்று !
’நல்ல டிமாண்ட் சார், ரேட் தான் ஜாஸ்தி’ !
படியேறி வந்து புலம்பியது !
பறக்க ஆசை தான் !
பறப்பது பற்றி பேசும் போதெல்லாம் !
முதலில் பறப்பது பற்றி !
விளக்க வேண்டியிருக்கிறது !
உயரம் கூறும் போது தான் !
கவலை கொள்கின்றன !
இந்தப் பறவைகள் !
இட்ட முட்டைகள் !
இங்கே தான் இருக்கின்றன !
ரைட்டும் லெப்ட்டும் !
ஸ்ட்ரைட்டுமே திசைகளாய் !
பதிக்கப்பட்ட குஞ்சுகள் உறையும் !
அக்மார்க் முட்டைகள் !
றெக்கைக்கு உறையிட்டு வெளி வந்த குஞ்சொன்று !
பைக் உதைத்துக் கடந்தது !
நிறமற்ற நாயும் பின் சென்றது

கருக்குகள்.. இரசிகர்கள்

ஈழநிதி
01.!
கருக்குகள் !
---------------------!
சமையலறையிலும் !
சைவம் அசைவமென!
சமைக்கும் சட்டிகளிலும் !
சாதிகள்வைத்தோம். !
மாட்டைத்தொழுபவன் !
மனிதனைத்தின்கிறான்!
மாட்டைத்தின்பவன்!
மனிதனைத்தொழுகிறான் . !
சுற்றிவரக்கடலிருநதும்!
கடற்தொழிலாளி கறிவைப்பது!
தகரத்தில் அடைக்கப்பட்டமீனில். !
கங்கையை,நதியை!
கடலுக்குப்பாய்சும் நாட்டில்!
என்றும் குடிநீர்ப்பஞ்சம் !
தெனனாசியாவின் !
அரசியல் விளையாட்டரங்கு!
இலங்கை. !
கடவுளின் கைகளில்!
ஆயுதங்கள் !
அவரவர் தற்பாதுகாப்பிற்காக. !
02.!
இரசிகர்கள் !
---------------------!
மரத்திலிருந்து!
ஒருகிளையையேனும்!
ஒடிக்கப்பயமாயிருக்கு,!
மர உரிமையாளன் ஏசுவானென்று... !
கடிக்கவரும்!
நாயைஅடிக்கவும் பயமாயிருக்கு,!
நாயுரிமையாளன் அடிக்கவருவானென்று... !
மனிதனைவதைப்பதும் கொலைசெய்வதும்!
மிகச்சுலபமாயிருக்கின்றது !
யாரும் கேட்கமாட்டார்கள்!
யாருக்கும்பயப்படத்தேவையில்லை . !
கொலைசெய்பவன்!
பெரியமனிதனாய்,சாதனையாளனாய்!
மதிக்கப்படுகிறான்,போற்றப்படுகிறான்!
விரும்பியோ விரும்பாலோ!
நட்புகள்சேர்கின்றன. !
தமிழ்ச்சினிமாவில்!
ஒருவனைஒருவன் !
அரிவாளால் வெட்டி!
வாளில்வடியும் குருதியை!
விரலால்வழித்து !
மீண்டும்வெட்டி !
குருதிமுகத்தில்த்தெறிக்க ... !
கலையைக்கொலையாக்கி!
சினிமாவினூடாக !
கொலையைக்கலையாக்கி...!
கலைஇரசனை கொலைஇரசனை !
பழக்கமாகி வழக்கமாக!
அதுவேவாழ்வாகி!
கொலை இரசிகர்களாகிவிட்டோம்

இடைவெளி, பூ பூக்கிறது

அறிவுநிதி
“இடைவெளி”!
கற்றத்தருகிறது ஞாபகங்களை!
பிரியங்களும்!
ஸ்பரிசங்களும் துளிர்க்கிறது!
வலி மறந்து!
தள்ளி நின்றபோதும்!
எதிர் பிம்பமாய்!
இடைவெளியும் தொடார்புடையதாகவே!
கவிதை: அறிவுநிதி!
!
பூ பூக்கிறது..!
!
ஒரு பூ பூந்தோட்டமாகிறது!
எங்கிருந்தோ வந்த வண்ணத்துபூச்சிகள்!
யாரும் அறியாமலே வட்டமடிக்கின்றன!
பூ பறிக்கும் ஆவல் கண்களில் நிகழ்கிறது!
தோட்டத்தில் புரலும் காற்று!
பூவின் நறுமணத்தைக் கொண்டு!
அத்திசை கௌரவிக்கப்படுகிறது!
சுவாசம் பூவானது!
உள்ளிளுக்கும் மூச்சு வசந்தமாக்கப்பட்டு!
மனதின் ஆழத்தில் வார்த்தைகள்!
தேங்கி (பெறுமூச்சுடன்)!
மௌனிக்கிறது!
சில மலர்கள் உதிர்கின்றன!
காலம் கடந்தும் கனவுகள்!
சிதிலமடைகின்றன..!
மரணத்தை யார் நிறுவியதோ?!
கவி: அறிவுநிதி

அகதி விசாரம்

வ. ஐ. ச. ஜெயபாலன்
தீபட்ட மத்தாப்புகளாய் !
திடுப்பென்று, !
மிலாறாய்க் கிடந்த மரஞ்செடி கொடிகள் !
பூவும் தளிருமாய்ப் பொலியவரும் !
இளவேனில். !
நாளொரு பறவையும் !
பொழுதொரு விலங்கும்புக !
உயிர் பெறும் துருவ உலகம். !
சூரியன்கூடத் தூங்க மறுத்த !
குதூகலமான வெய்யில் இரவுகள். !
எந்தத் துயரும் தோல்வியும் இழப்பும் !
ஓர் நாள் முடிவுறும் !
மரணத்தை அன்று வாழ்வு வென்றிடும் என்று !
துயில் நீங்கி அசையும் மலைப்பாம்பினைப் போல் !
உருகிடும் ஆற்றில் மீன்கள் பாடும். !
வெப்பமானியே கிளர்ச்சியடைகின்ற !
இந்த நாட்களில் !
இடுகாட்டிலிருக்கும் நடுகல்போல் !
நான் மட்டுமேன் வாழாதிருக்கிறேன்? !
வாழ்வை ரசிக்கும் மரபில்லாத !
யாழ்ப்பாணத்தான் என்பதனாலா? !
இராவணனாலும், அனுமனாலும் !
மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம் !
தீயிடப்படுகின்ற துயரத்தினாலா? !
எதிரிகளாலும் குமாரர்களாலும் !
கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய !
சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள் !
என்னிடம் இல்லையென்பதனாலா? !
ஈசலாய் பறக்கும் என் தாயக மக்கள் !
உலகப்பந்தின் ஒவ்வோர் புறத்திலும் !
இறகிழந்து !
வீழ்ந்து கிடக்கின்ற வேதனையாலா? !
அகதிகளாகவும் !
சர்வதேசக் கூலிகளாகவும் !
மனித முகம் சிதைந்த பின்னரும் !
புகுந்த நாடுகளில் !
இது என் சாதி இது என் சொந்த ஊர் !
இது எனக்கான சீதனம் என்று !
நாறுகின்ற நம் தொழுநோய் தொடரும் !
சிறுமைகள் கேட்டுத் திகைத்ததனாலா? !
தசாப்தம் ஒன்றாய் என் தாய்நாட்டில் !
இலையுதிர்காலம் தொடர்கிறதாலா? !
விமானத்தில் வருகிற குருட்டுப் பிசாசுகள் !
பதுங்கு குழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில் !
தாயைத் தவிக்கவிட்டு வந்ததனாலா? !
நான் அனுப்பிடும் குரோணரைத் தின்னவும், !
வழித் துணையாய் அதை அழைத்துச் செல்லவும், !
சிறீலங்காவின் கொலை விமானங்களை !
குரோணர்களாலே அடித்து விரட்டவும் !
குரோணர்களாலே தலைக்குமேலே !
குண்டு துளைக்காத கூரைகள் போடவும் !
அறியா என் தாய் அகதி முகாம்களில் !
சீரழிகின்ற சேதி கேட்டதனாலா? !
வாழும் என் விருப்பைத் தேயிலைக் கொழுந்தாய் !
கிள்ளிச் செல்கின்ற துயர் எத்துயரோ? !
உருளைக்கிழங்குபோல் இயக்கமில்லாதெனை !
இரு எனச் சொல்கிற துயர் எத்துயரோ? !
- வ. ஐ. ச. ஜெயபாலன் !
நன்றி: ஒரு அகதியின் பாடல்

மழை வேண்டல்

முத்துசாமி பழனியப்பன்
அணை கட்டி நீர் தடுக்கும்!
அண்டை மாநிலங்கள்!!
அகன்றோடிய காவிரியாய்!
இனி வாய் பிளந்து கிடக்குமோ!
எம் நிலங்கள்?!
எத்தீங்கு யாம் செய்தோம்?!
இப்பெருஞ் சாபங் கொடுத்தார் யார்?!
விழி திறந்து பாராயோ!
வருண பகவானே!
எங் காடுகள் கொடுக்கும்!
கருணை மனுவை!
உஞ் செவியில் செலுத்தாயோ?!
கள்ளிச் செடிகள் முளைத் தெழுமுன்!
காட்டாறு மழை பல அனுப்பி!
அணைகள் தரை மட்டஞ்செய் தெங்கள்!
அடுப்பெரிய ஆணை நீ செய்வாயோ?

ஒற்றை பூமாலை.. லஞ்சம்

கி.அற்புதராஜு
01.!
ஒற்றை பூமாலை !
---------------------!
மனைவியின் !
வேண்டுதலை !
நிறைவேற்ற !
ஞாயிறு மாலை !
கோவிலுக்கு !
பேருந்தில் செல்லும் முன் !
கோவில் அருகில் !
பூமாலை கிடைக்குமோ, !
கிடைக்காதோ என எண்ணி !
ஏறுகின்ற பேருந்து நிலையம் !
அருகிலிருந்த பூக்கடையில் !
ஒற்றை பூமாலையை !
விலைப் பேசி வாங்கி !
பேருந்தில் ஏறினோம். !
!
ஒற்றை பூமாலையைப் !
பார்த்த சகப் பிரயாணி !
சற்றே தள்ளி உட்கார்ந்தார். !
!
இறங்கும் பேருந்து நிலையம் !
அருகிலேயே கோவில் !
இருந்ததால், நாங்கள் !
கோவிலுக்குள் நுழைவதை !
அவர் பார்த்திருந்தால் !
திருப்தி அடைந்திருப்பாரோ !
என்னவோ..! !
!
02. !
லஞ்சம் !
-------------!
அரசாங்கம் தினந்தோறும் !
500 ரூபாய் கொடுத்தும் !
வேலை செய்யாத !
அரசு அதிகாரி, !
நான் 50 ரூபாய் கொடுத்ததும் !
செய்து முடித்தார் !
அந்த வேலையை

மொழி வாழ்த்து

சின்னபாரதி
மொழி வாழ்த்து !
கவி ஆக்கம்: சின்னபாரதி !
!
தாயின் தனிமொழி வாழி !
தாழ்ந்தவர் உயர்ந்திட வாழி !
இல்லறம் போற்றி வாழி !
இவ்வுலகம் போற்றி வாழி !
குழவியிதழ் தேனாய் வாழி !
கொண்டவர் உயர வாழி !
நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழி !
நிகரில்லா நிலையாய் வாழி !
கற்றவர் போற்ற வாழி !
கயவர் தம்மை மாற்ற வாழி !
எண்ணாலும் எமுத்தாலும் வாழி !
சொல்லாலும் செயாலாலும் வாழி !
கவிதையும் கதையுமாய் வாழி !
காவியமும் காப்பியமுமாய் வாழி !
செம்மொழியிலும் சிறப்பாய் வாழி !
எச் செவிக்கும் தேனாய் வாழி !
இதயமதை இல்லமாக்கி வாழி !
இன்முகங்காட்டி பேச்சு மொழியாய் வாழி !
கரும்பலகை தாண்டி வாழி !
கனினியுகம் தாண்டி வாழி !
கலப்பு களைந்து வாழி !
கன்னித் தமிழாய் வாழி !
கவி ஆக்கம்: சின்னபாரதி !
006591029762

நீ வருவாய்

மார்கண்டேயன்
நீ வருவாய் என . . .!
நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்!
நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்!
நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்!
நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்!
நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன் !
நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்!
நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்!
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .!
நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன் !
நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்!
என்ற என் இருப்பை உறுதி செய்ய!
என்றாவது ஒரு நாள் நீ வருவாய்