தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதல் வேண்டாமடி

ஒளியவன்
இதோ எனது தனிமையின்!
இன்னொரு கேள்வியாக!
நீயும் இடம்பிடித்துவிட்டாய்.!
என்னை நீ விரும்புவதாக!
என்னிடம் கூறிவிட்டு!
என்னுடைய பதிலை!
என்னிரண்டு நாட்களுக்குள்!
கேட்டிருக்கிறாய்.!
காய்கின்ற வெண்ணிலாவில்!
காதல் தேடுபவள் நீ!
வெண்ணிலவு!
வெளிச்சத்தில்தான்!
வாழ்க்கையைத் தேடுகிறேன் நான்.!
ஆனந்தமாய் கடலில்!
அலையை இரசிப்பவள் நீ!
உண்மையில் கடலின்!
உப்புத் தண்ணீருக்குக்!
காரணமானவன் நான்.!
நீண்ட கரையில்!
நடந்து கொண்டு!
ஓடத்தைப் பார்ப்பவள் நீ!
வாய்பேசமுடியாது ஓட்டை!
விழுந்த அந்த!
ஓடத்தில் பயணிப்பவன் நான்.!
என்னை நம்பி!
எட்டு வைத்து!
நடக்கும் என்குடும்பத்தின்!
ஒரே முதலீடு!
என் படிப்பு.!
உன் காதல் பூக்கள்!
உதிராமலிருக்க!
சோலைவனம் தேடு - எனது!
பாலைவனத்தில் காதல்!
பூக்கள் பூப்பதில்லை!
!
- ஒளியவன்

வாடகை வீடு

உழவன்
தொப்பூழ் கொடி!
அறுபடும் வரை!
குழந்தைக்கு!
கருவறை!
வாடகை வீடு !!
வெள்ளி முளைத்த!
இரவு!
சந்திரனுக்கு!
வாடகை வீடு !!
விளக்கு தூங்கும்!
பகல்!
சூரியனுக்கு!
வாடகை வீடு !!
சல்லிக்கட்டு காளையாய்!
மிரட்டி வரும்!
காட்டு வெள்ளத்திற்கு!
ஓடை ஒரு!
வாடகை வீடு !!
வீட்டுக்கதவில்!
தூக்கிலிடப்பட்ட!
துணிப்பை!
பால் பாக்கெட்டுக்கு!
வாடகை வீடு !!
மார்கழி!
கோலத்துக்கு!
பனி தெளித்த!
முற்றம்!
வாடகை வீடு !!
வானவில்லாய்!
வந்துபோகும்!
வாலிபத்திற்கு!
சதைக்கூடு!
வாடகை வீடு !!
மானுட இனத்தையே!
இனம் பிரிக்கும்!
பணத்திற்கு!
சட்டைப்பை!
வாடகை வீடு !!
ஆட்டம் போடும்!
தசையுள்ள எலும்புகளே ...!
இப்பூமிப்பந்து!
உங்களுக்கு!
வாடகை வீடு

இப்படிக்கு

அறிவுநிதி
கவிஆக்கம்: அறிவுநிதி!
வசிப்பதற்காக!
வீட்டைக் கட்டியும்!
முகவரி நிரந்தரமாகியும்!
வாழ்வு தேடி!
புதுப் புது முகவரிகளுடன்!
சேமிப்புகளுக்காக!
சிதறிப் போன விசுவாசங்கள்!
தூரம் தூரமாய்..!
பிரிவின் பாரம் சுமந்து!
முரண்களுக்கு மத்தியில்!
பயணித்துக் கொண்டு!
வாழ்க்கை காத்திருப்பதாக!
எண்ணி!
வயது கடந்துகொணடிருக்கின்றது!
கனவுகள்!
ஒன்றென் பின் ஒன்றாக!
யாசிக்கின்றன!
பல வண்ணங்களில்!
அரிதாரங்களற்ற!
அவதாரம் பூண்டி ஏதேச்சைகளில்!
யத்தனிக்கும்!
அடுத்த இலக்கில் பெறும் பகுதி!
இருப்பது அறியாமல்!
நகர்ந்து கொண்டே இருக்கும்!
வாழ்க்கை!
திரும்பிப் பார்க்கும் போது!
இழப்புகளின் மிச்சம்!
தேடல்களில்!
எங்கோ எங்கோ..!
கடைசியாய்!
மௌனத்தில் உறைந்து போகும்!
மூச்சுப் பை!
சவப்பெட்டியில்!
குத்தப்படும் நிரந்தர முகவரி!
நிச் சலனமாய்!
வாழ்வின் அடிவாரத்தில்!
நினைவிடங்களாக!
பூர்விகம்.!
கவிஆக்கம்: அறிவுநிதி!
தொடர்புக்கு: 006590054078

வால் மட்டும்

ருத்ரா
எல்லாம் ஏசுவே !
எனக்கு எல்லாம் ஏசுவே!
அம்பதுகளில்!
ஒலித்த அந்த இனிய பாடலின்!
ஒரு மொழிபெயர்ப்பாக‌!
அந்த நீல வண்ணன் போல்!
உயர உயரக் கட்டிடமாய்!
நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலயம்.!
அந்த புனித மாட்டுக்கொட்டிலை!
திருப்பாற்கடலின்!
பாம்புப்படுக்கையிலும்!
நான் படம் பிடித்துக்கொண்டேன்.!
ஓங்கி ஒலிக்கும்!
எல்லாப்புகழையும் இறைவடிவமாக்கும்!
தன்மை கசிந்த மனிதத்தையும்!
மனத்தில் அச்சிட்டுக்கொண்டேன்.!
வீரமும் தியாகமும் !
வடிவெடுத்த‌!
அந்த கிரந்த சாகேப்புக்கு!
கவரி வீசி!
கண்களில் !
பனிக்கச்செய்தேன் மனத்தை.!
மெஸ்ஸையா இன்னும்!
வரவில்லை!
அவர்களோடு!
அந்த யூத பஸ் ஸ்டாப்பில்!
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.!
அரச மரத்து இலைகளோடு!
அன்பை!
இன்னும் கிசு கிசுத்துக்கொண்டிருக்கும்!
அந்த அரச முனிவனின்!
கச்சாமியின்!
காலடியில் வீழ்த்தக்கிடக்கின்றேன்.!
எல்லாவற்றையும்!
களைந்த நிர்வாணத்தில்!
பிரபஞ்ச பேரொளியின் பிரளயத்தில்!
ஜைனனாய் கல்லில்!
இறுகத்தொடங்கி விட்டேன்.!
கன்பியூஸியஸ் சொன்ன‌!
சமுதாய ஆன்மாவுக்கு!
கண் மூக்கு முகம் அமைத்து!
பிரபஞ்ச மண் பிசைந்து உருவம் செய்து!
அகத்துள் நுழைந்து பார்த்தேன்.!
மாசே துங்..லெனின் என்றாலும்!
மார்க்ஸ் என்றாலும்!
மானிடம் நோக்கி !
கடவுளை உமிழ்ந்து எறியும்!
ஒரு கடவுளின் கடவுளைக்கண்ட!
கருத்துகளிலும் வியர்த்து வியந்தேன்.!
நியூயார்க்கில் கடற்கரையில்!
மனித விடுதலை உணர்ச்சியின்!
கரு தாங்கிய ஒளியின்!
அந்த தேவதையின்!
மாணிக்க கிரீட சாளரங்களில்!
நின்று கொண்டு!
ஒரு பிரம்மாண்ட தரிசனம் செய்தேன்.!
விஞ்ஞானம்!
அங்கே ஊர்த்துவ தாண்டவம் செய்தது.!
அதன் விரிகூந்தலில்!
கோடி கோடி...கோடி!
பால் வெளியின் ஒளி மண்டலங்கள்.!
டார்க் எனர்ஜி ..டார்க் மேட்டர் எனும்!
இருட்டுப் பிண்டமாய் இருட்டு ஆற்றலின்!
இதய துடிப்புகளாய்!
சிவம் ஆனதை சிலிர்க்க சிலிர்க்க நின்று!
பார்த்து!
பேரொன்றியம் ஆனேன்.!
(கிராண்ட் யூனிஃபிகேஷன்)!
ஹிக்ஸ் போஸானும் நியூட்ரினோவும்!
அலங்காரத்தேரில் பவனி வர‌!
செர்ன் அணு உலைக்குள்!
நானும் கரைந்து போனேன்.!
என்ன எல்லாம் கருத்தில் நுழைந்ததா?!
எல்லாம் நுழைந்தது!
வால் மட்டும் நுழையவில்லை

'உலகக் கிராமத்து' மக்களே

வ.ந.கிரிதரன்
அங்கே!
எனது மண்ணில்!
மக்கள் மெளனித்திருக்கின்றார்கள்.!
மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள்.!
இரவும், பகலுமென!
ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள்.!
நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ!
அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும்!
தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட!
அவர்கள் இழந்து விட்டிருந்தார்கள்.!
சிட்டுக் குருவியொன்றுக்கிருக்கக் கூடிய!
குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கூட!
அவர்களால் அனுபவிக்க முடியாதவாறு!
அவர்கள் நிலத்துக்கடியில் புதைந்து கிடந்தார்கள்.!
இப்பொழுது வேலிகளுக்குள் வதைபட்டுக்!
கிடக்கின்றார்கள்?!
குண்டு மழையில் மானுட நாகரிகத்தின்!
அற்புதங்களையெல்லாம், பெருமைகளையெல்லாம்!
அவர்கள் இழந்து விட்டிருந்தபோது.!
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?!
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.!
நாளும், பொழுதும், கணமும்!
அவர்கள் சீர்குலைக்கப்பட்டபோது!
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?!
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.!
எல்லோரும் மெளனித்திருந்தார்கள்.!
ஓரிருப்புக்குரிய கெளரவத்தை, மாண்பினை,!
மகிழ்ச்சியினையெல்லாம்!
அவர்கள் இழந்து, தெருத்தெருவாக,!
காடு மேடு, நீர்நிலைகளினூடாகவெல்லாம்!
ஓடிக்கொண்டிருந்த போதெல்லாம்!
மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?!
அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.!
அங்கங்கள் சிதைக்கப்பட்டன; உயிர்கள்!
வதைக்கப்பட்டன; கற்பனைகள், கனவுகள்!
நொருக்கப்பட்டன; இருந்தும் அனைவரும்!
திரைப்படமொன்றினைப் பார்ப்பதுபோல்!
மெளனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!
அனைவருக்கும் புரிந்திருந்ததா?!
சரி எது? பிழை எது? என்பதெல்லாம்.!
இருந்தும் அவர்களை நகர விடாமல்!
எவை கட்டிப் போட்டிருந்தன?!
கிராமங்களை அன்பினூற்றென்று சொன்ன!
புண்ணியமான மானுடரே?!
'உலகக் கிராமங்களில்; ஏன் அவை!
சிதைந்து போயின என்பதற்கான!
காரணங்களைக் கூறுவீரா?!
எல்லைகளற்ற , குறுங் கிராமத்து!
மக்களே! எல்லைகளால்.!
இன்னும் எத்தனை காலம்தான்!
நீங்கள் குறுகிக் கிடக்கப் போகின்றீர்கள்?!
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்!
மெளனித்திருக்கப் போகின்றீர்கள்?!
இன்னும் எததனை நாட்களுக்குத்தான்!
மெளனித்திருக்கப் போகின்றோம்?

நிர்வாண உண்மை

தமிழ்ஹாசன்
ஓர் அதிகாலை கனவிது!
அந்த ஓர் அமைதியான !
அலாரமில்லா வேளையில் !
அவளது அருகில் நான்..!
அவள் பக்கத்தில் நானும் !
என் கக்கத்தில் அவளுமாய்!
கட்டிலில் கட்டியிருந்த நேரம்...!
கண்கள் இரண்டும் !
கனவினைத் தேட !
கைகள் இரண்டும் !
காமனை நாட !
கட்டியணைத்த நேரம் !
கண்களில் கண்ணீர்த்துளி !
கண்ட ஒவ்வோர் துளியிலும் !
கண்மணி உனது விழி...!!
உன் முதுகுத்தண்டில் !
முகம் புதைத்தேன் !
' ம் ' என்றாய்...!
மூச்சுவிட முடியாமல் !
முத்தம் தந்தேன் !
' ம்ஹூம் ' என்றாய்...!
இன்னும் சொல்லாத !
இடங்களிலெலாம் !
பல்லால் கடித்தேன்!
' ச்சீ ' என்றாய்...!
முடிக்கும் வேளையில்!
முத்தம் தந்தேன் !
போதும் என்றாய்...!
முடியாது இனிமேல் என்று !
காதலை சொன்னேன் !
போதாது என்றாய்...!
விடியலைத் தேடும் உலகில் !
உன் விழிகளைத் தேடும் !
என் விழிகள்!
உன் கைகைளைத் தேடும்!
என் கைகள் !
உன் மார்பினைத் தேடும் !
என் தலை !
உன் தேகத்தை தேடும் !
என் மூச்சுகாற்று!
போதவில்லை நமக்கு !
இருந்தாலும் !
போதுமடி எனக்கு..! !
கட்டியணைத்த நேரம் !
கனவாக போனாலும் !
கண்களில் சிந்திய !
கண்ணீர் மட்டும் !
கைகளில் நிக்குதடி ...!!
விடிந்ததும் புரிந்தது !
நிஜத்தில் நீ இல்லாத !
நேரம் கண்டு !
நித்திரை கலைந்தேன்... !
என் நிர்வாணத்தை !
உணர்ந்தேன்

கலைஞருக்கு வாழ்த்து

வ. ஐ. ச. ஜெயபாலன்
போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் எங்களுக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி.!
கலைஞருக்கு வாழ்த்து!
-வ.ஐ.ச.ஜெயபாலன்!
காலத்தில் சோழனுக்கு!
நீர் ஏந்திக் கல்லணை!
நிழலேந்திக் கோவில்.!
சேரனுக்கோ !
சிலம்பேந்தி வந்த தமிழிச்சி.!
பாண்டடியற்கோ சங்கம்.!
அடையா நெடுங்கதவும்!
ஆஞ்சல் எனும் சொல்லுமாய்!
எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு?!
கலைஞா உனக்கு!
காலச் சுவடாக!
விலங்கொடித்தால் ஈழம் இருக்கும்!
ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் !
!
---------------------------------!
கலைஞருக்கு மனம் கனிந்த நன்றி, ஈழத்தமிழர்கள் போராளிகள் தோற்றுப் போனால் நிச்சயமான இனக்கொலை ஆபத்தை எதிர் நோக்குகிற காலம் இது. தமிழர்களும் வங்காளிகளும் பல்தேசிய இனம் என்கிற வகையில் இந்திரா காந்தி அம்மையார் வங்காளதேசம் விடுதலைப் போரின்போதும் எங்கள் போராட்டதிலும் விசேட நிலைபாடு எடுத்தார். மேற்க்கு வங்கம் இந்தியா நாமிருக்கப் பயமேன் என்று வங்க மக்களும் சி.பி.எம் கட்சியும் பக்க பலமாக நின்றார்கள். இன்று எங்கள் பிரச்சினையில் சி.பி.ஐ எடுத்த மனித நேய நிலையை சிபிஎம் கட்சியும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகிறேன். தோழர் சீதாராம் எச்சூரி போன்றவர்கள் நிலமையை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தருகிறது. சீனச் சார்பு ஜெவிபி கட்சியினரால் ஒரு பத்திரிகையாலரால் சிலர் பிழையாக வழி நடத்தப் பட்டாலும் சி.பி.எம் ஆதரவுக்கு நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தமிழகத்தில் நெடுமாறன், வீரமணி, திருமாவளவன், மருத்துவர், வைகோ, கவிஞர் கனிமொழி, கவிஞர் இன்குலாப், டாக்டர் கிருஸ்ணசமி தோழர்கள் மகேந்திரன், நல்லக்கண்ணு, குளத்தூர் மணி போன்றோரின் ஆதரவு இல்லாதிருந்தால் நாம் எப்பவோ தெருத்தெருவாக எரிக்கப் பட்டிருப்போம். மேலும் இலகணேசனும் அண்மையில் எங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா அம்மையாரின் கண்களும் திறக்கும் என ஈழத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த கால இரு பக்கப் பிழைகள் மற்றும் எங்களது பெரும் தவறு என்பவை இன்று உணரப்பட்டு திருத்தப் படுகிறது. இன்றைக்கு வன்னி இந்து சமுதிரத்தில் வலுத்துவரும் சீனச் சதிக்கு எதிராக இந்தியாவின் உறுதியான ஆதரவாளனாக தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது. இலங்கை பாகிஸ்தான் பர்மா வழியில் இந்தியாவுக்கு எதிரான துறைமுக தளத்தை சீனாவுக்கு வளங்க முன்வந்துள்ளது. கலைஞர் மனம் வைத்தால் எங்கள் விடுதலையும் இந்தியாவுக்கு தலை கொடுக்கிற தோழமையான இலங்கைத் தமிழர்களது தேசமும் உருவாகும் என்பதில் ஐயமில்லை. எங்களை இனக்கொலை முயற்சியில் இருந்து எங்கள் மொழி வழித் தாயான தமிழ்நாடும் கலாச்சார தாயான இந்தியாவும் காப்பாற்ற முன்வரவேண்டும்

அன்பு

பாஷா
என் அன்பு !
ஏழு ஆண்டுகளாக !
என்னிதயத்தில் அடக்கப்பட்டு !
ஒரு நாள் !
உன்குரல் ஒலிக்க !
வெடித்து சிதறி !
உன் வாசல்வரை !
வழிந்துகொண்டிருக்கிறது! !
உன் அன்பு !
ஆறுதலாய் தொடங்கி !
அன்பாய் அவ்வப்போது சுயம்தொட்டு !
ஆண்டவன் கட்டளைகளாய் நிபந்தனைகளை !
அள்ளிதெளிக்கிறது! !
என் அன்பு !
பாலை மணலெடுத்து - அதன் !
குருதி பிழிந்து !
உன் உருவம் !
வடித்துகொண்டிருக்கிறது! !
உன் அன்பு !
அதன் வழித்தடங்களில் !
விரிந்துகிடக்கும் புல்வெளியாய் !
என் அடையாளம் !
சொல்கிறது! !
என் அன்பு !
வானெங்கும் வியாபித்து !
உன்மேல்மட்டும் அதன்மழை !
பொழிந்துகொண்டிருக்கிறது! !
உன் அன்பு !
சாரலாய் சிலநேரம் என் !
ஜன்னலோரம் வந்து !
உயிர்தீண்டிபோகின்றது! !
என் அன்பு !
அதன் சிம்மாசனத்தில் !
உன்னைமட்டுமே அமர்த்தி !
அழகுபார்க்கின்றது! !
உன் அன்பு !
அதன் கதவுகளை !
அனைவருக்கும் திறந்திருக்கிறது! !
என் அன்பு !
உன் குரல்தேனூற்றி !
அதன் தாகம்தீர்க்கிறது! !
உன் அன்பு !
அதன் உத்தரவாதத்திற்கு என் !
ஒருவருகை கேட்கின்றது! !
என் அன்பு !
அதன் எல்லா தருணங்களிலும் !
உன்னிடம் அடைக்கலமாகிறது !
உன் அன்பு !
உன் அலுவல் நேரத்தில் !
அதன் கதவடைக்கின்றது! !
என் அன்பு !
உயிர்பிரியும் நொடியிலும் !
உன் நினைவை சுமந்திருக்கிறது! !
உன் அன்பு !
ஊர்துறந்த நாளிலேயெ என் !
பெயர் மறந்துபோகின்றது

நாளைய வலி

சிதம்பரம் நித்யபாரதி
'எழுத்து வலிமையானது தெரியுமா?'!
-பெருமிதக் கேள்வி!!
வலிக்கும் எனத் தெரியும் என்றாள்.!
நெருக்கி நெகிழ்ந்து!
காலம் - காமம் மறுத்து!
விரல்கள் சேர!
வலிகளின் தழும்புகளைத் தேடினாள்.!
நாளைய கவிதை என்றான்!
இல்லை நாளைய வலி என்றாள்.!
-- சிதம்பரம் நித்யபாரதி

கையசைப்புகள்

வீ.கார்த்திகேயன்
ஒவ்வொரு முறை ஊருக்குப்!
புறப்படும் போதும்!
வீட்டு வாசலில்!
விட்டு வந்த கையசைப்புகள்..!
பேருந்துப் படியேறியதும்!
வழியனுப்ப வந்தவரிடம்!
புன்னகையோடு !
பரிமாறிக் கொண்ட கையசைப்புகள்..!
புதிதாய் வந்திருந்த!
குழந்தை விடைபெறும் போது!
பறக்கும் முத்தத்தோடு !
அனுப்பி வைத்த கையசைப்புகள்..!
நாம் பிரிந்த போது!
கனத்த நெஞ்சோடு !
கொஞ்சம் கண்ணீரோடு !
காட்டிச் சென்ற கையசைப்புகள்..!
எல்லாம் என்னிடம் ஏதோ!
சொல்ல முயற்சிக்கின்றன..!
அன்பையா பரிவையா!
நட்பையா காதலையா!
அல்லது இவற்றின் கலவையையா?!
எதுவாக இருந்தாலும் சரி!
பிரியும் நேரங்களில்!
நானும் சில கையசைப்புகளை!
காற்றில் விட்டுச் செல்வேன்!
இவற்றில் ஏதாவதொன்றை அவை!
உணர்த்திக் கொண்டிருக்கட்டும்