தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அதிகம்

முருகடியான்
நாத்திகனாய் இருந்ததனால்!
நானிழந்தத் தமிழதிகம்!!
நாத்திகனாய் இருந்ததனால்!
நானறிந்த அறிவதிகம்!!
நாத்திறத்தார் சொல்,எழுத்தால்!
நடைமயங்கி நானெடுத்த!
பாத்திறத்தை அறியாமல்!
பா,திறம்போ னதேயதிகம்!!
!
காதலெனுந் தேனுணர்வில்!
கடமைமறந் தேனதிகம்!!
சேதமிடும் விலங்குணர்வில்!
சேர்ந்திருந்த நாளதிகம்!!
பேதைகளைப் பேரறிவுப்!
பேழையென்ற நினைப்பதிகம்!!
ஏகமிலாப் பொதுவுணர்வில்!
இருந்ததுதான் மிகஅதிகம்!!
!
எல்லார்க்கும் நன்மைசெய்ய!
எண்ணுகின்ற குணமதிகம்!!
நல்லராய் நினைத்ததனால்!
நானிழந்த பணமதிகம்!!
புள்ளார்க்கும் மனக்காவாய்!
பூத்திருக்கும் கவியதிகம்!!
கள்வடிக்கும் செந்தமிழைக்!
காப்பதிலென் உணர்வதிகம்!!
!
-பாத்தென்றல்.முருகடியான்

நகைப்பாக்கள்

வே.மணிகண்டன்
குடை ராட்டினம்!
சுற்றும் சிறுவனுக்கு……..!
உலகத்தைச் சுற்றும் மனசு!
தேர்வு பயம்!
இரவு முழுக்க படித்தான்…….!
கந்த சஷ்டி கவசம்!
அம்மாவின் கடுதாசி!
பாதியில் படிக்கிறது…….!
என்னோடு கண்ணீரும்!
சிரிக்க வைக்கும் கோமளியை!
அழவைக்கும்;;;;;……..!
வாழ்க்கை!
வாசனை திரவியத்தை!
மறக்கவில்லை……….!
குளிக்க மறந்தவன்!
ஊர் சுற்றும் பிள்ளையின்!
வேலைக்காக……….!
கோயில் சுற்றும் அம்மா!!
-வே.மணிகண்டன்!
மாமதயானை!
முனைவர்பட்டஆய்வாளர்

இசையால் இம்சிக்கப்பட்டவன்

கிரிஷாந்
உன் வாசனையில் நெருங்கி வரும் !
நினைவுகளின் வேரில் !
எனக்குள் படர்கின்றது !
இனியதொரு காலம்.!
சலிக்காமல் அவிழ்கிறது !
கண்ணீர்ப் பூக்கள் .!
நீ கடந்து சென்ற தெருவில் !
இன்னும் இசைத்துக் கொண்டிருக்கிறது !
நீ தீண்டாமல் போன !
ஒரு புல்லாங்குழல் .!
மொழியை இழந்து படுகின்றது !
ஏதேதோ காதல்களை !
என் இசையில் நிரம்பித் தவிக்கின்றது !
உன் அர்த்தங்கள் .!
பிறிதொரு நேரத்து வாசனையில் !
நான் வேறொரு !
வாத்தியமாகியிருந்தேன்!
நீ என்னை நினைவுகளால்!
வாசித்துக்கொண்டிருந்தாய்

என் நெஞ்சோ

தாஸ்
தினம் தத்தளிக்கும்!
பஞ்சு மெத்தையை!
வெறுத்து நான்!
படிக்கற்களையே வெறித்து!
பார்க்கின்றேன் தூரத்திலாவது!
நீ வருகின்றாயா என!
அறிய!- ஆனால்!
உன் தூது கூட!
என்னை நெருங்க!
மறுக்கின்றது!!
யாரோ வீட்டு!
படலையை விரட்டும்!
மணிசத்தம் என்!
நினைவறையையும் அடிக்கடி!
ஞாபகப்படுத்துகிறது!
உன் தூது வருமென்று!!
விரைந்து நான்!
வெளியே வந்தால்!
என் நெஞ்சை!
மீண்டும் விரக்தியே!
தழுவுகின்றது!!
வாழ நினைக்கினே!
என் அன்பே வாவா!!
சாவை வெறுக்கிறேன்!
என் அன்பே தாதா!
உன் நெஞ்சை!!
சம்மதம் தா!
அன்பே!!
என் சஞ்சலம்!
தீர்த்து!
சபலங்களையும் சலனங்களையும்!
தீர்க்க விரைந்துவ

ஓட்டை பலூன்!

வி. பிச்சுமணி
காக்கா கூட்டில் காக்காகுஞ்சின் அலகு!
வெளியில் பசியுடன் நீட்டிகொண்டு!
நீள அலகில் இரைவருமென !
செவ்வாய் பிளந்து கிடக்கிறது!
காற்றுபோன அடிகுழாய் ஒன்றில் !
நீர்ஊற்றி நீர் வரும் !
நீர் குடிக்கும் நீர் ஊற்றுகள் !
நீருககாக காத்திருக்கின்றன!
பாம்பை உண்ணும் பாம்பு!
ராஜநாக பாம்பு குறும்படம் விரித்து !
பாம்புக்காக காத்திருக்கின்றது!
வியர்தது கொட்டும் உடம்பில்!
ஈரக்காற்று படும் பொழுது!
ஒரு சிலீர்ப்பு உண்டாகும் !
அதனன்ன சுகம் தேடும்!
அந்த நினைவுகள்!
ஓட்டை பலூனில் காற்று அடைக்கிறது!
நேரடியாய் வரும் நாளில் !
அண்டத்தில் பறக்கவிடலாம் பறக்கலாம்!

பொறுமை கொள்

சி. கலைவாணி,வேலூர்
பெண்ணே!!
பகலிரவாய் படித்து!
பற்பல தேர்வுகள் எழுதி!
பல்கலைக் கழகத்திலும் நீ!
பார்க்கமுடியாத பட்டங்களை...!
இல்லற வாழ்க்கை உனக்கு!
இலவசமாய் வழங்குகிறது!!
கணவன் ஏச்சுக்களில்தான் எத்தனை!
கணக்கற்ற பட்டங்கள்!!
கழுதையென்றும், கழிசடையென்றும்!
கௌரவப் பட்டங்கள்!!
மாமியாரின் வசைகளிலோ!
மகத்தான விருதுகள்!!
சண்டாளியென்றும் சாகசக்காரியென்றும்!
கொண்டவனைக் கைக்குள் போட்டு!
குடிகெடுக்க வந்தவளென்றும்!
தலையணை மந்திரம் ஓதி!
தனிக்குடித்தனம் செல்பவளென்றும்!
தாளமுடியா வசவுகள்,!
மீளமுடியா துயரங்கள்!!
பூமித்தாய்க்கு நிகராக!
பொறுமைதனைக் கொண்டோர்!
பூவையரென்று உரைக்கும்!
பொன்மொழியை நினைவுகொள்!!
பத்து மாதங்கள் சுமந்து நீ!
பெற்றெடுக்கும் மகவு உன்னை!
“அம்மா!” என்றழைக்கும் அப்பட்டம் உன்னை!
அகமகிழச் செய்யும் வரை

எட்டில் சனி

த.சு.மணியம்
வான்படையும் காட்டியதே தமிழன் வீரம்!
வந்தனவே வாழ்த்துகளும் நாளும் ஈழம்!
தேன் இனிக்கச் சேதிவர தெருக்கள் எங்கும்!
தெம்மாங்கு பாடியதே தமிழர் வாயும்!
கூன் விழுந்து நா தளர எதிரி வீரம்!
கூடு விட்டுப் பறந்ததுவே உலகு எங்கும்!
கோன் நடத்தும் அராஜகத்தின் முடிவின் காலம்!
கொண்டு வந்து விட்டுடுத்தே தெருவின் ஓரம்.!
மட்டுநகர் வீதீயெங்கும் அகதிக் கோலம்!
மக்களுமோ பட்டினியில் தினமும் வாழ்வும்!
கட்டவிழ்த்து விட்டதுபோல் களத்தில் ஏவும்!
கணக்கடங்கா குண்டுகளால் நீழும் சாவும்!
கிட்டவரா மறவர்படை கிழக்கில் என்றே!
கிறக்கத்தில் வாழுகின்ற பகைவன் வாழ்வும்!
வட்டமிட்டு வான்படைகள் போடும் குண்டால்!
வழி வழியே பிணங்களுடன் தளங்கள் வீழும்.!
ஓடுமட்டும் ஓட விட்டுப் பார்த்திருக்கார்!
ஓர் நாளே அத்தனையும் வழித்தெடுப்பார்!
காடுமட்டும் வீரமென்று கணித்திருப்பார்!
களம் இறங்கின் முடிவெடுக்கா தளம் திரும்பார்!
கேடுகெட்ட கூலிகளைக் கணக்கும் வைப்பார்!
கேள்வியின்றி அவர் தலைகள் கொய்தும் கொள்வார்!
பாடுபட்டுக் கடன் எடுத்து யுத்தம் செய்வோர்!
பார்த்திருக்க உலகினையும் மதியால் வெல்வார்.!
த.சு.மணியம்

திருவண்ணாமலை.. கண்ணாடியில்

கிறுக்கன்
திருவண்ணாமலை சாலையில் அடிபட்டு நசுங்கி கிடந்ததோர் குரங்கு...கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்!!
!
01.!
திருவண்ணாமலை சாலையில் அடிபட்டு நசுங்கி கிடந்ததோர் குரங்கு!
------------------------------------------------------------------!
நேற்று இரவா?!
பகல் புலருகையிலா?!
இன்று காலையிலா?!
இந்த சம்பவம்!
எப்போது நிகழ்ந்தேறி இருக்கும்?!
தகவல் தொடர்பு!
வளர்ச்சியால் !
நம் மூதாதையர்களில்!
ஒருவரை !
இழந்திட்டோமோ?!
அடிபட்ட நேரத்தில்!
தன் தாய் இடுப்பை!
சிறு குரங்கின் பிஞ்சு விரல்கள் !
இறுக்கி பிடிதிருந்திருக்குமோ?!
அதன் அதரங்கள்!
தாயின் மார்பை கவ்வி கொண்டிருந்திருக்குமோ?!
போகும் போது!
நடு சாலையில் கிடந்தது...!
திரும்புவதற்குள் !
யாரோ அதை சக்கரத்தால்!
நசுக்கி சாலையோரம்!
நகர்த்தி விட்டிருந்தார்...!
இந்த சடலத்தை இந்நேரம்!
அடையாளம் கண்டிருந்தால்!
இந்த குரங்கின் இணை!
என்ன பாடு பட்டிருக்கும்?!
குரங்குகள் விசித்திரமானவை!
அவை நீத்தாரை !
எரிப்பதில்லை!!
புதைப்பதில்லை!!!
கடந்து சென்று கொண்டிருக்கிறன...!
!
02.!
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்

தீயெனத் தனிமை சுட

எம்.ரிஷான் ஷெரீப்
எந்தவொரு மேகக்கூட்டமும்!
எனக்கென்று நிற்காதவொரு!
பெரும்பரப்பில் நான்;!
பேசக்கேட்க யாருமற்றுத்!
தனித்திருக்கிறேன் !!
இப்பொழுதுக்குச் சற்றுப்பின்!
வலி மிகும் தொனியுடனான!
எனது பாடல்!
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி!
உடற்புழுதியப்பும்!
இப்பாலைவனம் பூராவும்!
எதிரொலிக்கக் கேட்கலாம் !!
எனைச் சூழ ஒலித்தோயும்!
எந்தவொரு அழைப்பும்!
எனக்கானதாக இருப்பதில்லை ;!
எனைச் சிதைத்து ஆளும்!
இப் பெருவலியையும்!
எவரும் உணர்வதில்லை !!
இப்படியே போனாலோர் நாளென்!
முதல்மொழியும் மறந்துவிடுமென!
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்!
விழும் துளியொவ்வொன்றுமென்!
செவிக்குள் ரகசியம் பேசித்!
தசை தடவிக் கீழிறங்கி,!
மணலுறிஞ்சி மறைந்து போக!
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து!
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?!
எனைச் சூழ்ந்திருக்கும்!
தனிமையையும் , மௌனத்தையும்!
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்!
தோள்தொட்டுக் கதை பேசவொரு!
சினேகிதம் வேண்டுமெனக்கு.!
நீயென்ன சொல்கிறாய் ?!
!
- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

போருளிழந்து

இ.இசாக்
இ.இசாக் !
வெளிநாடு தான் !
வேலை நேரத்திற்கொன்றும்; குறைவில்லை !
விடிவதற்குள் தொடங்கி !
எல்லோரும் ஓய்ந்தபின்னும் தொடரும் !
நம்ம அம்மாக்களைப் போல. !
பிறந்த குழந்தையிலிருந்து !
வருகிற விருந்தினர் வரையிலும் !
கவனிக்கவேண்டியிருக்கிறது எக்குறையுமின்றி! !
அவர்களுக்கான தேவைகள் அனைத்தையும் !
மறதியொன்றுமின்றி !
முடித்துவிடுகிறேன். !
வேலையில் பிழையெதுவும் கண்டதில்லை !
இன்று வரையிலும் !
ஏனோ.. !
ஓராண்டு ஆகியும் !
எனக்கும் குடும்பமிருக்கிறது !
எனக்கும் தேவைகளிருக்கிறதென்பது !
நினைவுக்கு வருவதேயில்லை முதலாளிக்கு. !
வளைகுடாவெங்கும் !
காற்றில் கலந்து !
வான்வெளியில் மிதந்துக்கொண்டிருக்கின்றன !
மானுட செவியேற்காத !
அண்ணல் நபிகளாரின் சொல் !
உழைத்தவர் !
வியர்வை காயுமுன் !
ஊதியம் கொடுக்கவேண்டும்|