தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அர்த்தமற்ற வார்த்தை

இ.இசாக்
அப்பாவும் அம்மாவும்!
கவனிப்பாரற்று காலத்தைக்கடத்துகிறார்கள்!
அடிப்படை வசதியுமற்ற!
என்!
கிராமத்தில்!!
எனக்கிணையானவளும்!
வெளியிலும் சொல்லமுடியாமல்!
வெட்கி!
வெட்கி!
சோகத்தில் கழிக்கிறாள்!
தன்!
விடியாத இரவுகளை !!
வாரிசுகளும்!
நாலு இடம் அழைத்துச்செல்ல!
நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர!
ஆளின்றி!
புழுங்கி!
புழுங்கி!
நகர்த்துகிறார்கள் நாட்களை !!
எனக்கும் எவருமில்லை!
இந்த!
அந்நிய மண்ணில்!
இருந்தும்!
வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன்!
“நான்!
குடும்பக்காரன்'

சிரிப்பதும்.. வேண்டும்,, மழை நின்ற

கிரிகாசன்
சிரிப்பதும் அழுவதும் ஏன்??.. வேண்டும் சக்தி.. மழை நின்ற அதிகாலை நேரம்!
!
01.!
சிரிப்பதும் அழுவதும் ஏன்??!
-------------------------------------!
நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்!
நித்திய சூரியனே - நினைப்!
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்!
பாரிலிருக் கையிலே!
கால விதியிதோ மாலைமதி கெட்டு!
காணும் பிறை யொளியாய்-பலர்!
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்!
கூடியிருப்ப தென்ன?!
மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை!
மேவி இருள் பரவும் - அதி!
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்!
காணும் இரண்டுவிதம்!
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்!
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்!
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை!
மீது துயில் சிலர்க்கும்!
கானமிடும் நல்ல வானில் குருவிகள்!
ஊர்வலம் செய்யழகும் அங்கு!
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென!
கோலமிடும் எழிலும்!
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்!
தீபங்கள் வைத்தவளோ - மன!
மானது ரம்மிய மாகக் களித்திட!
மஞ்சள் நிலவு வைத்தாள்!
ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு!
அத்தனை கோபங்கொண்டு - பல!
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட!
மின்னலை கொண்டுவைத்தாள்!
வானம் அழுவது போல மழையுடன்!
வாரிப் புயலடித்து - பெரி!
தான முரண்படும் பேய்மழை ஊதலும்!
ஏனோ நிகழவிட்டாள்!
பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்!
பூவுலகே யறியும் - அலை!
மேவுகடல் மீது மீனழுதால் அலை!
யோடு கலந்துவிடும்!
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்!
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி!
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்!
தாலும் துயர் இருக்கும்!
பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து!
பற்றிடத் தேவையில்லை - மலர்க்!
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட!
வீழும் விதிமுடியும்!
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்!
நெஞ்சில் குடியிருக்கும் -இதை!
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்!
உண்மை நிலைதிகழும் !
!
02.!
வேண்டும் சக்தி!
-------------------------!
அழகான ஓடை அதிலோடும்நீரும்!
அரும்பான மலர் போலும் வாழ்வும் !
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும் !
இதை மிஞ்சும் விதமான அறிவும் !
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள் !
விதமாக துயர்போக மகிழ்வும் !
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும் !
படர்கின்ற மனம் வேண்டும் தாயே! !
கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும் !
கொத்தும் வல்லூறாகக் குணமும் !
மதிவானில் குறையும் மழைதூற துளியும் !
மணல்வீழும் நிலை தாழவேண்டாம் !
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும் !
கரை ஏறக் குடிகாணும் அழிவும் !
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி !
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும் !
நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம் !
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா !
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும் !
வருந்தாத உள்ளங்கள் வேண்டும் !
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம் !
பழமென்று இனிதான உறவும் !
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம் !
புன்னகை புன்னகை வேண்டும் !
குயிலோசை கூவும் குரலின்பந் தானும் !
கனிவோடு காதோரம் செல்லும் !
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும் !
விளைவான எதிரோசை வேண்டாம் !
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம் !
படும்தூறல் மழைகண்ட தோகை !
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும் !
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும் !
!
03.!
மழை நின்ற அதிகாலை நேரம்!
---------------------------------------!
தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில் !
தரும்மழை ஓய்ந்துவிட !
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல் !
தீர்ந்தொரு அமைதிபெற !
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச் !
சிவந்திடும் வான்வெளிக்க !
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை !
விடியலில் வெளிநடந்தேன் !
கலகல வென ஒலி எழுமதி காலையில் !
கதிரவன் வரும்திசையில் !
பளபள எனும்ஒளி பரவிட இருளவன் !
பயமெழத் தலை மறைந்தான் !
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக் !
கூடிய தூவானம் !
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில் !
சிணு சிணுத்திடக் காணும் !
சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச் !
சடுதியில் நீர் பெருகி !
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக் !
கிளர்வுடன் அதுவிரைய !
மளமள எனவளர் மரங்களும் நீரிடை !
மலர்களும் சருகுதிர்த்தே !
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும் !
வியனுறு கலை வியந்தேன் !
வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை !
வடிவுடன் தாமரைகள் !
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித் !
தளர்வுற இதழ் விரியும் !
பளபள எனவெயில் பகலென வருமுதல் !
பறவைகள் துயில் கலையும் !
படபட என அவை பரப்பிய சிறகுடன் !
பறந்திடும் வான் வெளியும் !
கடகட வெனஉருள் காளைகள் வண்டியில் !
கவினுறு சந்தமெழும் !
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும் !
அழகினை அவைபேணும் !
மடமட எனமது வருந்திய வண்டினம் !
மலர்களில் மயங்கிவிடும் !
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை !
கொண்டிட அழதுகொழும் !
எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில் !
எழும்விழும் பின்னுயரும் !
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென !
அடுத்ததை செய உணர்த்தும் !
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர் !
குலவிடும் இனிதென்றலும் !
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக் !
கொண்டிடச் செய்தகலும்

சிறைச்சாலை

த.சரீஷ்
மனித நடமாட்டமில்லாமல் !
என்றுமில்லாத !
மயான அமைதி !
வீதியெங்கும் பரவியிருக்கும். !
நம்பிக்கையில்லாத நிலையில் !
நாடுமுழுவதும் !
எந்தக்கணத்திலும் !
இருண்டுபோகலாம் என்ற !
அச்சத்தோடு மௌனித்துப்போகும். !
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் !
இன்னும்... !
இராணுவப் பாதுகாப்பு !
பலப்படுத்தப்பட்டிருக்கும். !
அரச மாளிகைகளில் !
பாராளுமன்ற வளாகத்தில் !
விமான நிலையத்தில் !
பொருளாதார நிலையங்களில் !
பொது இடங்களில் !
மக்கள் நடமாட்டம் இல்லாமல் !
இராணுவ நடமாட்டம் அதிகரிக்கும். !
அவர்களின்... !
சந்தேகத்துக்குரிய நபர்களாக !
எதுவுமறியாத... !
எங்கள் சகோதரர்களே !
வழமைபோல !
கைதுசெய்யப்படுவார்கள். !
அரச தொலைக்காட்சி !
வானொலி !
பத்திரிகைகளில் !
இன்று... !
மக்கள் வீதிகளில் !
நடமாடவேண்டாம் !
என அறிவிக்கப்படும் !
சொந்தநாட்டுக் குடிமக்கள் !
நடமாடக்கூட !
சுதந்திரமில்லாத !
அந்த நாள்தான் !
அவர்களின்... !
சுதந்திர தினம்...!!! !
த.சரீஷ் !
04.02.2006 (பாரீஸ்)

முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்

எதிக்கா
எனக்குப் பிடித்ததில்லை!
வெட்டொன்று துண்டிரண்டு!
பேச்சிலும் செயலிலும் இருந்தது!
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்!
என் வாழ்க்கை ஆகிவிட்டது!
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?!
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி!
அழைப்புக்கள் எத்தனை?!
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்!
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு!
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்!
சின்னச்சின்ன சண்டைகள்!
துளித்துளியாய் கண்ணீர்!
மனம் இழகி!
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து!
காதல் மந்திரம் சொல்வேன்!
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து!
புதிய காதலர்களாய்!
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்

மூதூர்.. வாப்புச்சி பற்றி வராத கவிதை

அசரீரி
01.!
மூதூர் பற்றிய கவிதை!
-------------------------------!
என்னமாய்ப் பாரிக்கிறது காற்று!
எங்களின் யுகம் நிரம்ப இருந்த!
நன்கு பருத்த மலைகளின்,!
பச்சை வயல்களுமான கனவுகளின்!
வீரிட்ட கதறலாகி எழுந்த சத்தம்!
தாங்கவே முடியாதபடிக்கு!
வழியில் பிரிந்த எங்களது சுவாசங்களையும் சேர்த்தே!
அள்ளி வந்திருக்கிறது போலும்..!
அத்தனையிலும் ஆஹிரத்து மணம்!
இப்போதே நீ சொல்லியாக வேண்டும் எனக்கு!
அச்சுப்பிழைத்துப் போன உன் ஈழப் புத்தகத்தில்!
எந்தக்கதையிலேனும் வருகிறதா..?!
என் நெருப்பு எப்போதேனும்!
உன் மண்ணைத் தின்றிருப்பதாக..!
!
02.!
வாப்புச்சி பற்றி வராத கவிதை!
-------------------------------------!
இது வரைக்கும் பேசாத வார்த்தையென்று!
எதுவுமேயில்லை!
பூக்களைப் பற்றின காலத்துக் கவிதைகளிலிருந்தும்!
மரியாதை நிரம்பின சொற்களாகவும்,!
உங்களுக்குமென ஒன்றித்த ஏதும் தென்படுவதாயுமில்லை!
உதிர்ந்து விழும் பூக்களை மரத்தின் வியர்வையாக்கியும்!
வாப்பாக்களுக்கு உவமையாக்கியும்!
எல்லாரும் எழுதிவிட்ட பின்னும்!
வாழ்வே உருகியோடி!
நாங்களே தன் வாழ்வென்றாகி!
அதில் எனக்கென்று வேறாய் இந்திரியமும் தந்து!
அதே வாப்பாத்தனத்தோடு!
எல்லா நாளும் இருக்கும் உங்களுக்கு!
இன்று மட்டும் கவிதையெழுதி என்னத்துக்குக் காணும்!
(15-06-2008 தந்தையர் தினத்துக்காக..)

வரலாறு

தென்றல்.இரா.சம்பத்
உலகத்தில்!
எந்த நாட்டு காதலைப் பார்த்தாலும்!
கர்வப்பட ஏதுமில்லை!!
ஒருவன் ஒருவளை ஏமாற்றுவது!
ஒருவள் ஒருவனை பரிதவிப்பில் விடுவது!
அதனால் அவனோ!
அவளோ உயிரை விடுவது!
இதுதானே வரலாறு!
இறந்த காலத்தில்!
காதல் தோல்வி மழையில்!
நனைந்து போனது!
அல்லது கண்ணீரால்!
இதுதானே வரலாறு!
இப்போது காதலில்!
புதிய நாகரீகம் பிறந்திருக்கிறது!
இங்கே !
காமம் ஒரு கவர்ச்சிப்பொருளாய்!
புகுந்திருக்கிறது!
இறந்த காலத்தில்!
இதயத்தில் சுமந்து!
அழுதவருண்டு!!
இப்போது!
வயிற்றில் சுமந்து!
அழுபவருண்டு!
அழிப்பவருண்டு!
காதலில்!
நாகரீகம் வேண்டுமானால்!
புதிதாய் இருக்கலாம்!
ஆனால் !
வரலாறு ஒன்றுதான்.!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2

கருக்கலைப்பு

நிந்தவூர் ஷிப்லி
ஜனனங்களுக்காய்!
படைக்கப்பட்ட!
கருவறைகள்..!
இன்றோ!
மரணங்களுக்கான!
கல்லறையாய!
புதிய பரிமாணம்!
உயிரணுக்களின்!
உயிர்கள்!
அணுவணுவாய்!
கொல்லப்படுகிறது!
மருத்துவச் சித்ரவதைகளுடன்....!
தொப்புள்கொடிகளே!
தூக்குக்கயிறுகளாகின்றன!
இந்தக்கருக்கலைப்பில்....!
பூக்களை தீயிட்டு!
எரிப்பதைப்போல!
என்பதை தவிர!
வேறெந்த உவமைகளும்!
பொருந்தப் போவதில்லை!
இந்த அகால மரணங்களுக்கு...!
மனிதாபிமானம்!
செத்துப்போய்விட்டதை!
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா!
சிசுக்கொலைகள்...?!
உண்டான பிறகு!
சிதைப்பதை விட்டுவிட்டு!
உண்டாகும் முன்!
சிந்தியுங்கள்!
ஏனெனில் நீங்கள்!
சிதைப்பது உயிர்களை அல்ல!
இவ்வுலகின்!
நாளைய விடிவை !!
!
- நிந்தவூர் ஷிப்லி

தொடர் கதை

வேதா. இலங்காதிலகம்
துன்பநிலை வாழ்வில்தானாக வருவதில்லை,!
அந்நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.!
சொந்த மனதில் சோதனை, விரக்தி நிறைந்தால்!
சிறுமனம் திரிந்து எரிந்து புகையும்.!
பொறுமைக் குணம் பற்றி முற்றாக அணைந்தால்,!
நாம் தூங்க நல்ஞானம் தூங்குவதால்,!
ஆம் என்று சோகம் தானாய் புகுதலே.!
ஆன்ம தவம், தர்மநெறி நீறு பூப்பதால்!
ஆன்மாவின் ஆழ் அமைதி அவிந்து போதலே.!
ஆழ்ந்த பார்த்தால் அதுவும் ஒரு தொடர் கதையே

நானிலத்தை அழகூட்டும் வனப்பேச்சி

க.உதயகுமார்
விதையொன்று செடியாகி!
விரியும் நிலம் மீது!
பெண்மையின் சாயல்!
செடியொன்று மரமாகி!
குலுங்கி சிரிக்கையிலே!
கருத்த வானம்!
கரைந்து பொழிகிறது!
மொட்டொன்று பூபெய்துகையில்!
நாணிச்சிவக்கிறது!
வனாந்தர மேடுகள்!
பூக்கள் காயாகும் பருவத்தே ,!
கானகமெங்கும்!
கலவி வாசனை!
காய்கள் இலகுவாகி!
கனியும் தருணத்தில்!
மசக்கையின் நிறம்பூசும்!
மாகாடு!
விதையினை வெளித்தள்ளி!
வீறிடும் வேளையிலே!
வனமேகும் காற்றில்!
தாய்மையின் நெடி!
விழுந்த விதை!
மண்ணை ஊடுருவி!
வேர்பிடிக்கையில்!
பூமி துளிர்க்கிறது!
பூமி நிறைகிறது!
பூமி எழில்கிறது!
இளம்பச்சை நிறத்தில்

மனிதம்

இரவி கோகுலநாதன்
எந்த மண்ணும்!
தன்மீது விழுந்த!
நீரை விலக்குவதில்லை!
செம்புலப்பெயல் நீராவதன்றி...!
எந்த மரமும்!
தன்மீது படரும்!
கொடியைப் பிரித்தெரிவதில்லை!
பகிர்வதையன்றி...!
எந்த இலையும்!
தன்மீது தவழும்!
தென்றலைத் தவிர்த்ததில்லை!
தழுவுதலன்றி...!
எந்த விலங்கும்!
தன்னினத்தையே!
அழிப்பதில்லை!
காப்பதன்றி...!
மனித இனம் மட்டும் !
மண்ணில் பிறந்தும்!
மழையில் நனைந்தும்!
தென்றலை நுகர்ந்தும்!
தாவரங்களைப் புசித்தும்!
விலங்காயிருந்து பின் !
மனிதர்களாய்...!
மற்றைய மகத்துவங்களை!
மட்டும் மறந்தவர்களாய்...!
தன்னையே...!
தன் இனத்தை மட்டுமே!
யுதங்களோடும் !
யுதங்களற்றும் அவ்வப்போது !
புசித்தும், புசித்தப்பின்பு !
சிரித்தும்... மனிதம்...!!
!
-இரவி கோகுலநாதன்