தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சுவாசித்தலுக்கான நியாயங்கள்

சகாரா
அவசரமாய்ப் போகும்போது !
ரோட்டில்கிடந்த முள்ளை !
எடுத்துப் போடாமல் வந்ததற்கு !
மனசு குத்தியதுண்டா ? !
ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த !
பறவை விலங்கு இறந்த வேளையில் !
நெருங்கிய உறவை இழந்ததுபோல !
துக்கப்பட்டதுண்டா ? !
அறமுகமில்லாத ஒருவர் !
முகவரிக் குழப்பத்தில் திண்டாடிய போது !
தெரிந்தவரைக்கும் சரியாக !
வழகாட்டியதுண்டா ? !
நலிந்தவர் மூத்தவர் !
நிற்கத் தடுமாற !
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை !
விட்டுக் கொடுத்ததுண்டா ? !
விபத்தில் சிக்கி !
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக !
நெஞ்சு கிடந்து !
அடித்துக்கொண்டதுண்டா ? !
பாதையைக் கடக்கையில் !
அணிற்பிள்ளை குறுக்கிட !
பதறியடித்து !
பிரேக் போட்டதுண்டா ? !
அப்படியானால் !
வாழ்த்துக்கள் !
இன்னும் நீங்கள் !
மனிதராய் இருக்கிறீர்கள். !
நன்றி :: !
”-நதிக்கரையில் தொலைந்த மணல்” !
வெளியீடு : பயணம் புதிது !
புலியூர் 639 114 !
கரூர் வட்டம் !
தொலைபேசி :: 04324 - 50292

யாருக்கு வரும் இந்த தைரியம்....?

இனியவன்
அதிகாலையில் துயில் எழுந்து ...!
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...!
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...!
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...!
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே!
காட்டும் விவசாய பாரதி -நீ!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?!
கொட்டும் மழையில் உடல்விறைக்க...!
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...!
குருதியே வியர்வையாய் வெளிவர ....!
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...!
காவல் செய்யவும் புறப்படுவாய் ..!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?!
பட்ட விவசாய கடனை அடைக்க!
பட்டையாய் உடல் கருகி ....!
விற்று வந்த வருவாயை ..!
கடனுக்கே கொடுத்துவிட்டு ...!
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?!
உச்ச அறுவடை பொழுதினிலே ...!
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..!
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...!
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....!
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....!
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....!
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....!
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?!
நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...!
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....!
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?!
காதலில் தோற்றால் நஞ்சு .....!
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....!
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....!
இத்தனை துன்பம் வந்தபோதும்.....!
தன் கையில் நஞ்சை அருந்தாத......!
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......!
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!!
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

பாசத்திற்குரிய அப்பாவுக்கு

அனாமிகா பிரித்திமா
“பெண் குழந்தை”...!
என்றதும்...!
பெருமுச்சு விடாமல் !!
பார்த்த, அடுத்த நொடியில்...!
இந்த வைரச்சிலைக்கு...!
கண் பட்டு விட கூடாதேன்று...!
கருப்பு வளையல் பூட்டியவர் !!
கால்கள் தரையில் பட்டு...!
சிவக்க கூடாதேன்று...!
தன் மார்பை எனக்காய்...!
தரையாக்கியவர் !!
விளையாடி களை(உடை)க்க...!
அவர் வாங்கி ...!
கொடுக்காத பொருட்களே... !
இல்லை !!
அழகாய் அறிவுரை...!
போதிப்பார் !!
பொறியாளராய்...!
பாடம் நடத்துவார் !!
என் பட்டங்கள்...!
அவர் எனக்களித்த...!
விலைமதிப்பில்லா...!
பரிசுகளே !!
அரசிகளுக்கு சோதித்து...!
கொடுப்பதை போல ...!
என் உணவை...!
ஏன் மருந்தை கூட...!
சோதிக்காமல்...!
கொடுத்ததில்லை !!
என்னை ...!
தங்க சிலையாய்...!
அலங்கரித்து...!
அழகு பார்த்ததும்...!
அவரே !!
நான் சிரித்து கொண்டே...!
இருக்க வேண்டும்...!
என தன் ஆசைகளை...!
மாற்றிக்கொண்டவர் !!
என் மனதின் ஆசைகளை... !
நிறைவேற்ற உலகை...!
விலை பேச கூட...!
தயங்காதவர் !!
“என்னடா வேணும்...?”!
என எனக்கான சகலமும்...!
இன்று வரை...!
பார்ப்பதும் அவரே !!
என்ன சொல்லி அழைப்பது...!
இந்த மகானை...!
“அப்பா”..!
“தந்தை”...!
“தகப்பனார்”...!
“தாயுமானவர்”..!
“தியாகி”...!
இவை எல்லாவற்றையும்...!
சேர்த்து ஒரு வார்த்தை ...!
கிடைக்குமானால் !!
அதுவே...!
பொருந்தும் ...!
என் பாசத்திற்குரிய...!
“அப்பாவுக்கு” !!
!
-அனாமிகா பிரித்திமா

வாழைத் தோல்

இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலையின் நடுவில்!
வாழைத் தோல்!
வீசிச் சென்றதோர்!
ஆறறிவு!!
வீதியில் நடந்திடும்!
ஆறறிவினரில்!
அதைப் பாராமல்!
நடந்தனர் ஒருசாரார்!!
பார்த்தும் பாராமல்!
சென்றனர் மறுசாரார்!!
'அம்மா' !
என்ற அலறலுடன்!
வழுக்கி விழுந்ததோர்!
அறுபதை எட்டிய!
ஆறறிவு!!
விழுந்த வேகத்தில்!
எலும்பின் முறிவு!!
வசவைப் பொழிந்தது!
வலியும் வேதனையும்!!
சுற்றிலும் சூழ்ந்த!
ஆறறிவினரில்!
' ச்சூ ச்சூ...' என்றனர்!
ஒரு சாரார்!!
'பார்த்து நடக்கக் கூடாதா'? !
என்றபடியே!
பார்த்துச் சிரித்தனர்!
ஒரு சாரார்!!
முதலுதவி செய்து!
சிகிச்சைக்காக!
அனுப்பி வைத்தனர்!
இரக்கம் கொண்ட!
ஒரு சாரார்!!
'ஐந்தறிவு!
பழத்தைத் தின்றிருந்தால்!
தோலுடனன்றோ!
விழுங்கி இருக்கும்..!
விபத்தையும் அங்கே!
தவிர்த்திருக்கும்'!
என்றெண்ணியபடியே!
வாழைத்தோல்!
நிகழ்வுகளை அங்கு!
பரிகாசத்துடன்!
பார்த்து ரசித்தது!
புன்னகை பூத்தது!
பூரித்துக் கிடந்தது...!
ஐந்தறிவொன்று!
அதை நெருங்கிய வரையில்...!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

ஓர் அஞ்சலி

ரவி (சுவிஸ்)
மரணம் !
வயதை வெல்லும் மரணம் கொடியது !
நண்பனே !
எடுத்துச் செல் !
எனது இரு கண்ணீர்த் துளிகளையும் !
எடுத்துச் செல் !
மிகுதியை என் கண் மடல்களுக்குள் !
தேக்கிவைக்கிறேன். !
உனது முகம் இறுகியது !
உன் புன்னகை செத்துப் போனது !
பார் நண்பா !
ஒரு கனவை செய்து காட்டுமாப்போல் !
நீ !
சவப்பெட்டிக்குள் !
வளர்ந்து கிடந்தாய் !
நம்ப முடியவில்லை !
என்னால் நம்பமுடியவில்லை - நீ இறந்துபோய்விட்டதாய். !
என்னிடம் இன்னும் கண்ணீர்த் துளிகள் இருக்கின்றன !
அவையும் !
ஒரு தசாப்தத்தை பின்னால் !
இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டன !
அவை !
தொலைந்துபோன தோழர்களுக்காகவும் !
இழந்துகொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும்- உன்போல. !
எப்படி முடிந்தது !
ஆயிரமாயிரம் தோழர்கள் !
வீசியெறிந்த பயங்களை எப்படிச் சூடினர் !
ஓயாமல் இயங்கிய தசைகளை !
எது கட்டிப் போட்டது !
விரக்திகள் கொண்டதும் !
வாழாவிருந்ததும் !
எப்படி எப்படி... !
எல்லாம் பட்டியலாய் நீண்டுபோனது !
நதியொடுங்கி ஓடையானாய் !
இருந்தும் !
ஓய்ந்துபோக முடியவில்லைப் பார் !
உன்னால் !
கேள் நண்பா !
எல்லாமே நேற்றுப்போல !
காலத்தை அழித்து அழித்து எழுதிய !
உன் உழைப்பும் !
மனங்களில் மறைந்து போகுமெனில் !
தியாகங்கள் மறக்கப்படுமெனில்... !
ஒரு மண்புழுவோடுகூட !
நான் நிறைய பேசவேண்டியிருக்கும் - அதன் !
அப்பாவித்தனத்திற்காய். !
-ரவி !
குறிப்பு: (போராளி ஈஸ்வரன் நினைவாக முன்னர் எழுதப்பட்ட கவிதை இது

வீட்டில் எண்ணெ.. முற்றுப்புள்ளி..ஒரு கொடி

வித்யாசாகர்
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!.. முற்றுப்புள்ளி.. ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும் !
!
01.!
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!
---------------------------------------------------------!
நாங்களெல்லாம் அப்போது!
சிறுவர்களாக இருந்த சமையமது!
அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு!
பிடிப்பதேயில்லை!
அம்மா இல்லாத அந்த வீடு!
இருண்டுப் போன மாதிரியிருக்கும்!
யாருமேயில்லாமல்!
தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில்!
எல்லோரும் அமர்ந்திருப்போம்!
இரவு நெருங்கநெருங்க!
மனசு அம்மா அம்மா என்று ஏங்கும்!
எனக்குக் கொஞ்சம் அழுகைவர!
தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி!
அழுகையை அடக்கிக் கொள்வேன்!
என்றாலும் சற்று நேரத்தில் தம்பியோ தங்கையோ!
அழ ஆரம்பித்துவிடுவார்கள்!
அம்மா அம்மா என்று!
அழுதுகொண்டே நாங்கள் ஐவரும் வந்து!
தெருவில் அமர்ந்துக் கொள்வோம்!
எங்களோடு அப்பாவும் வந்து!
அமர்ந்துக் கொள்வார்!
அம்மாயில்லாத வீடு அவருக்குக் கூட!
இருட்டாகத் தான் இருந்திருக்கும் போல்!
எல்லோரும் அப்பா மடிமீதும் தோள்மீதும்!
சாய்ந்துக் கொள்ள!
நாங்கள் தெருமுனையில் அம்மா வருவார்களா என்றே!
பார்த்து அமர்ந்திருப்போம்..!
திடீரென ஒரு தருணத்தில்!
அம்மா அந்த முனையில் திரும்பி!
தெருக் கோடியில்!
வருவது தெரியும்!
கூட்டிலிருந்து குஞ்சுகள் ஓடி!
தாய்ப்பறவையின் அலகைக் கொத்தி!
உணவைப் பிடுங்குவதைப் போல!
நாங்களெல்லோரும் ஓடி அம்மாவின்!
கால்களை கட்டிக் கொள்வோம்!
அம்மா இயன்றவரை தங்கையை!
தம்பியை!
யாரேனும் ஒருவரைத் தூக்கிக் கொள்ள!
சற்று தூரத்திற்கெல்லாம்!
அப்பாவும் எழுந்துவந்து பைகளை வாங்கிக்கொள்ள!
அம்மா அப்பாவை கடிந்துக்கொள்வாள்!
கொஞ்சம் கடைத்தெரு போய்வருவதற்குள் இப்படியா!
செய்வீர்கள் ?!
வீட்டிற்குள் அமர்ந்தால்தானென்ன!
பார் ஒரு விளக்குக் கூட ஏற்றி வைக்கவில்லை!
எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கே என்பாள்!
சற்று கடிந்துதான் கொள்வாள்!
அம்மாவிற்கு அப்போதெல்லாம்!
நாங்கள் எடுத்துச் சொன்னதில்லை!
அம்மா இல்லாத வீட்டில் எங்களுக்கு விளக்கோ வெளிச்சமோ!
தேவைப் பட்டிருக்கவில்லை என்பதை..!
03.!
ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும் !
---------------------------------------------------!
சுதந்திரம் என்று சொன்னாலே!
உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்;!
ஏன்?!
அதன் ஒவ்வொரு எழுத்திற்கும்!
எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும்!
காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின்!
வலிபற்றிய பயமுமது;!
நிற்க முறைத்தலும்!
பார்க்க அடித்தலும்!
எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென!
நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில்!
வாங்கியச் சுதந்திரம் - இன்று எம் தேசத்தின்!
ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும்!
இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர்!
ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ?!
சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும்!
மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல!
வெள்ளையனை வெளியேற்றிய கையோடு!
ஒற்றுமையை மண்ணில் புதைத்தோம்!
வீட்டிற்குள்ளும் விடுதலையைத் தொலைத்தோம்!
வேறுபல வரலாற்றைப் படித்து நம்மை நாமறியவும் மறந்தோம்;!
அலுவலிலிருந்து அரசியலமைப்புவரை!
இன்றும் வலிக்கிறது அடிமைத்தனம்,!
எதிர்த்துக் கேட்க வரும்தீவிரவாதப் பட்டத்தில்!
பயந்து முடங்கிக் கொள்கிறது - அன்று!
வாளெடுத்துச் சுழற்றிய நம்!
பச்சைத் தமிழரின் வீரம்..!
பகைவரை அடையாளம் காணத் துணியாத!
அறிவில்!
பகல்வேசக் காரர்கள் பதவியேற்று!
நல்லோராய்த் திகழும் நாலுபேரின் முகத்தில்!
கரிபூசும் அவலத்தில் மகிழவில்லை மனசு - நாம் பெற்ற!
குடியரசையெண்ணி..!
ஒருபக்கம் சாயும் தராசின்!
சமபலத்தை!
பணக்கட்டுகள் தாங்கிப்பிடிக்கும் அவலம் மாற!
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம்!
கண்ணுள்ள!
குருடராய் வாழ்வோமோ(?)!
ஓரிடம் வெளிச்சமும் வேறிடம் இருட்டுமாக!
இருக்குமொரு பரப்பில்!
கேட்க நாதியற்று சாகும்!
பல உயிர்களின் இழப்பில்!
எங்கிருந்து நிலைக்கிறதந்த!
சமத்துவத்தின் தோற்கா வெற்றி?!
நீருக்குச் சண்டை!
மின் நெருப்புக்குப் போட்டி!
யாருக்கு என்ன ஆனாலும் ஆகவிட்டுச் சேர்க்கும்!
சொத்துக் கணக்கை வெறுக்கும்!
மக்கள் பற்றியெல்லாம் ஒரு சிந்தையுமில்லாது வெல்லுமொரு!
அரசியல் கூட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்!
எம் சமகாலக் கூட்டம், சிந்திய ரத்தத்தின் வலியை மட்டுமே!
மிச்சப்படுத்தி!
கைக்கு குச்சிமிட்டாய் கொடுத்து கொடி ஏற்றுகையில்!
விடுதலைக்காக உயிர்விட்ட தியாக நெஞ்சங்கள்!
மீண்டுமொரு முறை சாகக் கேட்டு!
நமைச் சபிக்குமோயெனும் பயமெனக்கு..!
எம் பெண்கள் வீசிய வாளில் சொட்டிய!
ரத்தமும்!
இளம்பிஞ்சுகள் அறுபட்ட கழுத்தில் கசிந்த வீரமும்!
என் தாத்தாக்கள் தடியெடுத்து நடந்த!
சுதந்திரக் காற்று நோக்கியப் பயணமும்!
இன்னும் முடிவுற்றிடாததொரு ஏக்கமெனக்கு..!
கொதிக்கும் உலையின் அடிநெருப்பாகவே!
அன்று சுதந்திரம் இருந்தது, உணர்வுகளை!
மிதிக்கும் கால்களின் தலை நசுக்கி!
விடுதலை யாசித்தபோது!
அஹிம்சை அன்று ஆயுதமாக முளைத்தது,!
இன்று அகிம்சையின் வழித்தடங்களையும்!
விற்கத் துணிந்த!
வியாபார உத்தியின் மனோபாவத்தில்!
நம் அத்தனை போராட்ட உணர்வும்!
அடிப்பட்டே கிடக்கிறது..!
விடுதலைக்காக!
தகித்த அன்றைய வேள்வியிலிருந்து!
துளிர்த்த எம் போராட்டத்தின் விதைகள்!
வெறும்!
துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன..!
சிந்திய ரத்தம் அத்தனைக்கும் அர்த்தம்!
சுதந்திரம் சுதந்திரமொன்றே என்று!
வெள்ளையன் அன்று நீட்டியத் துப்பாக்கிக்கெல்லாம்!
மார்பு காட்டிய வேகத்தை!
வெறும் கொடி மட்டும் ஏற்றி மறக்கிறோம்;!
விரைத்து திமிர்ந்த மார்பில்!
அடிவாங்கி அடிவாங்கிச் சொன்ன வந்தேமாதரமின்று!
திரும்பிநின்று நமைப் பார்த்துச் சிரிக்கையிலும்!
கையுயர்த்தி தனதுதேசம் தனதுதேசமென்றே நம்பி இன்றும்!
வந்தேமாதரமென்றே முழங்குமொரு இனம்!
கேட்பாரன்றி சுட்டு வீழ்த்தப் பட்டதின் நினைவில்!
வலிக்கிறதுதான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதான!
அந்த எண்ணம்;!
சுதந்திரமெனில் என்ன?!
கட்டப்பட்ட வெள்ளையக் கைகளின்!
கட்டுகளைத் தகர்த்து வெளியேற்றி!
தன் மண்ணில் தான் நடைபோடுவது எனில்;!
நடக்கையில் தடுக்கும் மாற்றுக் கை எதுவாயினும்!
மீண்டும் தகர்க்குமந்த கோபம்!
உணர்வு சுட பொங்கியெழ வேண்டாமா?!
என் கண்முன்னே எனைச் சார்ந்தோரை!
அடிக்கும் கைகளை முறிக்கா என் தேசத்தின்!
விலங்கு உடைபடும் நாள்!
என் விடுதலை நாளெனில்,!
அதற்கென சுமக்கும் உணர்வுகளில் ஜெயிக்குமொரு தினம்!
என் குடியரசை நானும் -!
முழுமையாக பெருமொரு நாளாகுமோ?!
அடிமைத் தீ சுட்டுயெரித்த!
இடமெங்கும் தாகம் தாகம்!
சுதந்திர தாகமென்று தவித்த அந்த நாட்களின் வலிநீளும்!
ஒரு மண்ணின் மைந்தர்களென்று!
நமை நாம் நினைக்கையில்!
ஒன்றுசேர்ந்துப் பெற்ற சுதந்திரமின்று!
வேறு கைகளில் மட்டுமிருக்கும் வேதனையை!
ஆற்றமுடியவில்லைதான்..!
என்றாலும் -!
இன்று சிலிர்க்கும் அழகின் காற்றுவெளியில்!
இடைநிறுத்தாத கொடிகள் அசையும் தருணத்தில்!
கண்ணீரின் ஈரம் காயாவிட்டாலும்!
எம் வீரத் தியாகிகளை நினைவுகூறும்!
நன்றிசெலுத்தும் நன்னாளின் மகிழ்வாக!
பட்டொளி வீசிப் பறக்குமந்த தேசியக்கொடிக்கு!
என் தாயகமண்ணின் முழு விடுதலையை மனதில் சுமந்த!
வீர வணக்கமும்!
தீரா கனவுகளின் மிச்ச வலியும்

பொம்மை கல்யாணம்

அனாமிகா பிரித்திமா
குழந்தைகள் நடத்தும்...!
பொம்மை கல்யாணம்...!
சிறப்பு விருந்தினராக நான் !!
பெண் அழகாய் இருந்தாள் ...!
சிவப்புப்பட்டுப்புடவையில்...!
மாப்பிள்ளை நேர்த்தியாய் ...!
இளம் - அரக்கு சூட்டில் !!
அழைப்பு முடிந்தது, நிச்சயம் நடந்தது...!
திருமணமும், வரவேற்பும் மிக சிறப்பு !!
வீட்டிற்கு கிளம்பும் தருணம்...!
மாப்பிள்ளை பெண்ணிடையே...!
மற்றொரு பொம்மை விழுந்தது...!
பெண் பொம்மை சரிந்தது !!
அய்யோ...!
என்ன கண்ணா என்ன ஆச்சு ?!
இது கூட தெரியலயா அத்தே ?!
இரண்டு பேருக்கு இடையில...!
இன்னொரு பொம்மை !!
அதனால...!
பெண் பொம்மை சரிந்தது !!
சொன்னது ...!
என் அண்ணன் மகன்...!
வயது நான்கு !!
!
அவனுக்கு...!
விளையாட்டு பாடம் !!
எனக்கு ...!
வாழ்க்கை பாடம் !!
!
-அனாமிகா பிரித்திமா

சிரிக்கும் பறவை

கருணாகரன்
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால் !
இந்த அவசரத்துக்கு !
என்ன நடந்து விடப்போகிறது !
என்ன நடக்காமல் விடப்போகிறது? !
தயக்கமுறும் நிழல்கள் !
பின்னகர !
இருளின் வாசம் நம் மீது கவிகையில் !
அவிழும் நினைவுகளில் !
எது யாரிடம் !
எது யாரிடமுமில்லை? !
ஒருமித்த ஞாபகங்களை !
விலக்கும் கணங்கள் !
எதிரெதிர் முனைகளில் !
காந்த விசையைப் பெயர்த்தனவா? !
அறியேன் !
எறும்புகளின் வன்முறைகளில் !
உண்டா அடையாளமும் !
பிரகடனமும் !
அவற்றின் சினேசிகத்திற்கு !
இருக்கிறதா பாடலும் இசைக்குறிப்புகளும்? !
துக்கத்தின் வலியில் சிதறுண்ட !
எறும்புகளின் பாதையில் !
ஏதேனுமொரு ஞாபகத்துண்டைப் !
பார்த்தாயா? !
பறவைகளிலும் பூக்களிலும் !
உன்னைப் பகிர்ந்தளித்து விட்டுப் போனாய் கரைந்து !
யாசகனாய் நான். !
தவிர்க்க முடியாதவாறு !
நம் தனிமைக்குள் ஊடுருவி !
நெடும் பயணம் நிகழ்கின்றன !
உன் கண்கள் எடுத்து வந்த காட்சிகள். !
எந்த வாசலிலும் இல்லை !
யாருடைய வரவேற்பும் !
பனிவிலகத் துடித்தெழும் தெருவில் !
ஒரு பள்ளிச் சிறுமி !
நகர மறுத்த காலப் புள்ளியில் !
நின்று விளையாடுகிறாள் !
நீயும் விளையாடுகிறாயா !
கமெராவுடன் !
திகைத்து நின்று !
வழிமறிக்கும் நமதன்பு !
தத்தளிப்புடன். !
-கருணாகரன்

தியாகத் திருநாள்

கிளியனூர் இஸ்மத் துபாய்
நபி இபுராஹிமுக்கு!
நழுவிப்போன நனவில்!
அவரைத் தழுவிக் கொண்டது!
நான்-என்ற எண்ணம்…!
தவமிருந்து தரித்த தனையனை!
தத்துவமறந்து தழுவியதால்!
அல்லாஹ; ஆணையிட்டான்!
அறுத்து விடு….!
அவரின்!
ஏக உள்ளமையில்!
ஏற்பட்ட தடுமாற்றம்!
பெற்றபாசம்!
படைத்தவனை!
எண்ணத்திலிருந்து!
பாலையாக்கியது…!
நான்-என்ற சுயநலத்தை!
தியாகம் செய்து!
நாம் என்ற சுயத்தை!
அருந்த வேண்டிய ஆணை…!
இருப்பதும் இல்லாமையும்!
இறையாகும் போது!
அறுப்பதும் அறுக்கப்படுவம்!
வேறாகுவதில்லை….!
அறுப்பது நானாகஇருந்தாலும்!
அறுக்கப்படுவதில்!
நான் இருக்கவேண்டும்!
அதுதான்!
குர்பான்…!
இது தீர்க்கதரிசிக்கு!
இறைவன் தந்த தீர்ப்புமட்டுமல்ல!
தீனோருக்கு இட்ட கட்டளை….!
-கிளியனூர் இஸ்மத்

இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு

சொ.சாந்தி
இளம் விதவையின் சோகம் ..வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி..!
01.!
இளம் விதவையின் சோகம் !
---------------------------------------!
தேயும் வளரும் வெண்ணிலவில் ஒளியும் இருளும் உண்டு !
தொலைத்துவிட்டேன் நிலவினையே வெளிச்சம் எனக்கு என்று? !
தூணாக நீயிருந்தாய் சரிந்ததில்லை என் கோட்டை !
சாய்ந்ததனால் சரிந்துவிட்டேன் விளைத்தவர் யார் கேட்டை.? !
தனி மரத்தில்கனி பறிக்க எண்ணி சதியில் உறவினம் !
தட்டிக்கேட்க ஒருவரில்லை துன்பம் தினம்...தினம்... ! !
வலை வீசி வீசித் திரியுதய்யோ வேடுவக் கூட்டம் !
நான் சிக்கவில்லை சிக்கிக்கொண்டேன் துன்பத்தில் மட்டும்..! !
விட்டுப்பிரிந்த நாள்முதலாய் அணைத்ததென்னை துன்பம் !
பட்டுப்போன வாழ்வினிலே துளிர்விடுமோ இன்பம் ? !
அந்தநாளின் நினைவு நெஞ்சில் மோதி நிற்குமலைகள் !
வெந்து இன்னும் தணியவில்லை கொதிக்குது கண்உலைகள்.! !
விழியிருந்தும் காட்சியில்லை கண்ணீர் படலங்கள் !
விதி மேடையிட்டு ஆடிடுதே துன்ப நடனங்கள்..! !
வடமிழந்த தேரும் வீதி ஊர்வலம் வருமா..? !
தடமறியா பாதை பயணம் நன்மைகள் தருமா? !
துடுப்பில்லா தோணியில் என் பயணங்கள் வீணே !
அடுக்கடுக்காய் சோதனைகள் அவதியில் நானே..! !
சொந்தபந்தம் என்றதெல்லாம் நீயிருந்தவரை மட்டும் !
நிந்தனையில் வாட்டிடுதே எனக்கு விடிவு என்று கிட்டும்..? !
அன்று நீ விரித்த பாயில் மணக்கும் முல்லை சிரித்தது !
இன்று படுக்கையாக நெருஞ்சி முள்ளை யார் விரித்தது.? !
உன்னை இழந்த எந்தன் வாழ்வு ஊசலாடுது !
தவிக்கவிட்டு பறந்ததென்ன உன்னை என்று சேர்வது..? !
மாண்ட உயிரை மீண்டும் தரும் மரண தேவன் உண்டோ? !
தொலைந்த இன்பம் மீட்டுத் தரும் காவலர்தான் உண்டோ? !
விண்ணுலகம் செல்லும் வழி நானும் தேடுவேன் !
இந்த மண்ணைவிட்டு உன்னை நாடி விரைவில் கூடுவேன்..!! !
!
02.!
வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..!
---------------------------------------------!
இறுதி ஆண்டில் தேர்வெழுதி!
வழியனுப்பி வரும் வேளை!
கொண்டாடி மகிழ்வதற்கு!
கூட்டாளி வெயில்தானே..!!!
ஏராள விடுமுறையில்!
சித்திரையோ கத்திரியோ!
எது வந்தும் கவலை இல்லை!
விளையாடிக் களிப்போமே..!!!
வெயில் நித்தம் சிரம் வாங்கி!
வெப்பத்தில் முகம் கருக்க!
நீரின்றி நீராடி!
வியர்வையிலே குளிப்போமே..!!!
வெயில் என்ன செய்துவிடும்!
நீராகாரம் காலையிலே!
கேப்பைக்கூழ் தயிர் கலந்து!
அத்தனையும் குடிப்போமே..!!
ஊருக்கு எல்லையிலே!
ஓடுமந்த ஆற்றினிலே!
குதித்திருக்கும் வெயிலோடு!
குதித்து கொட்டம் அடிப்போமே..!!
தள்ளுவண்டிக் காரனிடம்!
நாவில் எச்சி ஊற வைக்கும்!
குச்சி ஐஸ் வாங்கித் தின்று !
வெயிலுக்கு விடை கொடுப்போமே.!!
குற்றாலம் சென்றுமந்த!
அருவியோடு ஆர்ப்பரிப்போம்!
கொடைக்கானல் சென்றுமந்த!
குளிர்மேகம் தொடுவோமே..!!
நுங்கு தின்று வெப்பம் தணித்து!
பனங்காயின் சக்கரத்தில்!
விளையாட வண்டி செய்து!
குச்சி கொண்டு ஓட்டுவமே..!!
எளிமையாக வெயில் விரட்ட!
ஏராளமாய் வழி இருக்கு!
குடிசை வாழ் மக்கள்மேல்!
வெயிலுக்குத்தான் பகையிருக்கு..!!
கோலா இருக்கு கலர் இருக்கு!
குப்பியிலே வியாதி கிருமியிருக்கு!
மோரும் தர்பூசணியும் - இறைவன்!
ஏழைக் களித்த வரமிருக்கு..!!
மேட்டுக்குடி மக்களுக்கோ!
வெயில் என்றால் பயமிருக்கு!
பதுங்கி பதுங்கி இருப்பதற்கு!
ஏசி எண்ணும் சிறையிருக்கு....!!!
கிராமத்திலே பிறந்துவிட்டோம்!
எங்களுக்கு கவலை எதற்கு!
தாராளமாய் பெய்த மழையில்!
ஏரி குளம் நிறைந்திருக்கு..!!!
வீடு சுற்றி மரமிருக்கு!
வேப்பமர காத்திருக்கு!
ஆற்றினிலே நீராடி!
அரவணைக்கும் தென்றல் இருக்கு..!!
வெயிலோடு விளையாடி!
வெயிலோடு உறவாடி!
களித்திருக்கும் இன்பமெல்லாம்!
கிராமமன்றி வேறெங்கிருக்கு..?