தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பிறந்த ராசி

மகி
வீதியின் ஒற்றை!
சாலையில் ஓரமாய்!
கால்கள் நடந்தாலும்!
நிற்கவில்லை என்!
பிறப்பினை ஒட்டிய!
துக்கங்கள் .....!
யார் சொன்னது ?!
நான் தீண்டபடாதவன்!
என்று ?தீண்டிகொண்டேதான்!
இருக்கிறார்கள் என்னை!
வார்த்தைகளால் .........!
எஜமானின் பத்து வயது!
பையன் என்னை!
அழைக்கும் அந்த!
ஒருவார்தையின் வீரியத்தில்!
என் சுயமரியாதை மொத்தமாய்!
செத்து போகிறது ..!
எல்லாம் நான்!
பிறந்த ராசி ...!
-மகி' தம்பி பிரபாவின் தம்பி'

நான் விரும்புவதெலாம்

தமிழ்ஹாசன்
நித்தம் உன்!
நினைவு கண்டு!
என் சித்தம் எங்கும்!
இரத்தம் சிந்துதடி.!
நான் விரும்புவதெலாம்...!
உன்னிடத்தில்!
எனக்கான!
ஓர் இடம்!
என்னில் முதலாய் நீ..!
உன்னில் முடிவாய் நான்.!
நான் விரும்புவதெலாம்...!
என் கவிதைகளுக்கெலாம்!
கருவறையாய்!
உன் இதயம்!
உன் கனவுகளில் கூட!
உனக்கான!
காதலனாய் நான்..!
நீ வாத்தியக்கருவியானால்!
நான் கூட இசைக்கலைஞன் தான்!
உன்னை மீட்டும் போது.!
மங்கையர் நூலகத்தில்!
நான் கண்டெடுத்த!
புத்தகம் நீ..!!
உன்னை முழுவதுமாய்!
படிக்க ஓர்நாள் ஆசை...!
நான் விரும்புவதெலாம்...!
உன்னில் பாதியல்ல!
முழுவதுமாய்!
வாழ ஆசை...!
உன் ஆடை மீது!
எனக்கு கோபம்...!
உன் பிரபஞ்ச அங்கத்தில்!
எனக்கோர் பிறவி வேண்டும்.!
தலை முடி முதல்!
பாத அடி வரை!
உன் விருப்பம்.!
நான் விரும்புவதெலாம்...!
உன் மேனி எங்கும்!
என் முத்த!
அடையாளங்கள்..!
கைபடா இடங்களிலெலாம்!
என் கையெழுத்து...!
கச்சேரி முடிந்ததும்!
உன் காதோரம்!
என் கவிதை...!!
நான் விரும்புவதெலாம்...!
நம் இருவருக்குமிடையில்!
இடையூறு ஏதேனும்!
வராத நேரம்!
இடைவேளை ஏதும்!
தராத நேரம்.!
விடியும் வரை உன் வாசம்!
விடிந்தபின் உன் சுவாசம்!
காலை நேர காபியாய்!
உன் முத்தம்!
தினம் ஓர் சுவை அது!
தித்திக்கும் அறுசுவை..!!
மல்லிகைப்பூ கைகளில்!
வெள்ளைப்பூ இட்லி!
தொட்டுக் கொள்ள!
எதுவும் வேண்டாம்!
கட்டிக் கொள்ள!
உன் கைகள் போதும்..!!
விக்கல் வந்தால்!
உன் விரலில்!
தண்ணீர் குடிப்பேன்!
சிக்கல் வந்தால்!
உன் மடியில்!
கண்ணீர் வடிப்பேன்..!!
முடிவாக,!
நான் விரும்புவதெலாம்...!
காலந்தோறும் உன் காதல்!
கடைசி வரை உன் தேடல்!
மோகம் தீர்ந்த வேளையிலும்!
முத்தமிட உன் உதடு...!
நரை விழுந்த வேளையிலும்!
நான் விரும்பும் காதலியாய் நீ

பெண் நட்பு பற்று தீ

செயவேலு வெங்கடேசன்
இவள் அவளை பற்றி... !
அவள் இவளை பற்றி... !
இவள் அவளுடன் அவளை பற்றி...!
அவள் இவளுடன் அவளை பற்றி...!
இவள் அவளுடன் இவளை பற்றி... !
அவள் இவளுடன் இவளை பற்றி...!
இவள் இவளுடன் இவளை பற்றி.. !
அவள் அவளுடன் அவளை பற்றி...!
யார் யாருடன் யாரை பற்றி... !
நானும் புரியாமல் நிற்கிறேன்?! !
என் கவிதையை போல்.... !
பெண்களின் அரசியல் பேச்சில்!!! !
!
-க.செ.வெங்கடேசன்!
அபுதாபி

காத்திருப்பு

ராம்ப்ரசாத், சென்னை
பருவம் தவறாத!
மழையில் ,!
பருவமங்கை நீ!
வரும் வழியில் ,!
என்னுடன் நனைந்தன ,!
பச்சை தாமரை!
இலைகளின் மேல்!
இச்சை கொண்ட மேகங்கள்!
இறங்கி வந்தமர்ந்த!
விடிகாலை பனித்துளிகள்...!
எனக்குப் பின்!
அவைகளும் தெரிந்து!
கொண்டதோ இவ்வழியே!
நீ வந்துபோவதை ...!
என்னிரு கருவிழிகளை போல்!
தேவதை உன்னை!
தன்னில் சுமக்க!
காத்திருக்கின்றனவே அவைகளும் !!!...!

ஒரு நிறமற்ற பெரும் மழை

கேயெல்.நப்லா (நப்லி)
ஒரு!
நிறமற்ற பெரும் மழை பெய்து முடித்திருந்தது!
நான் முழுவதுமாக நனைந்திருந்தேன்!
ஒரு சொட்டு ஈரமும் காயவில்லை...!
நிலவில் முகம் பார்க்க அழைத்தேன்!
ஈரம் சொட்டும் உடைகளை கழற்றச் சொன்னாய்!
உடைமாற்றம் நிகழும் போதெல்லாம்!
நிறமற்ற மழை பெய்கிறது.......!
தொப்பலாய் நனைந்த தேகத்துடன்!
உனை அணைக்க வரும் போதெல்லாம்!
பட்டாம்பூச்சி சகிதம் பறந்து போகிறாய்......!
மழை பிடிக்கும் என்றல்லவா நினைத்தேன்...!
ஏன் பறந்தாய்....?!
உன் பதில் காற்றில் உறைத்தது!
‘வியர்வை நாற்றம்’!
பெய்ததெல்லாம் நிறமற்ற மழை தான்...!
வியர்வை எந்த நிறம்!
பச்சையாகவோ!
மஞ்சளாகவோ!
வேறு எந்த நிறமாகவோ இருக்குமோ!
என்று நினைக்கிறேன்...!
உன் தப்பித்தல்வழி சிறந்தது...!
எந்த நிறத்திலும் வியர்வை என்னிடமில்லை...!
பெய்ததெல்லாம் நிறமற்ற மழைதான்...!
இது போலத்தான்!
என் மரணம் நிகழ்கிறது...!
நாள் கடந்தால்!
‘பிண நாற்றம்’ என்பாய்...!
அதுவரை நான் அடக்கம் செய்துவிடப்பட மாட்டேனா...!
வர்ணஜால சூரியனின் ரதத்தில் காய்வேன்!
தொப்பலில்லாமல் வருவேன்!
உன்னிடமல்ல!
என்னைத்தேடி என்னிடமே

மழைக்கு தெரியாது

சாந்தினி வரதராஐன்
பாவம் மழை !
இடியும் மின்னலும் !
கீறும் வலி பொறுத்து !
மண்ணுக்காய் நீளும் கரங்களை !
மறுக்கும் மனங்கள் உண்டென்று !
மழைக்கு தெரியாது !
மனிதர்கள் குணத்தால் !
மாறுபட்டவர்களென்று. !
வீடு நனையுதென்றும் !
விறகு புகையுதென்றும் !
ஆடை உலரவில்லையென்றும் !
முகம் சுளிக்கும் மனங்களை !
மழைக்கு தெரியாது. !
மழை நினைத்திருக்கும் !
மனிதர்கள் மகிழ்வார்களென்று !
மண்ணும் மரங்களும் !
மலர்களும் மலைகளும் !
சின்ன மழலைகளும் !
மகிழ்வார்கள் !
மழைகண்டு !
முகம் சுளித்து !
குடை விரித்து !
கதவடைக்கும் !
மனிதர்களுக்காய் !
ஒளி உமிழும் !
உயிர் துறந்து !
முகம் கறுத்து !
வலி பொறுத்து !
கரம் கொடுக்கும் !
மழைக்கு தெரியாது !
மனிதர்கள் மனங்காளல் !
மாறுபட்டவர்களென்று. !
சாந்தினி வரதராஐன். !
ஜேர்மனி

தவிட்டுக் குருவிகள்

சிதம்பரம் நித்யபாரதி
இருபக்க இறக்கையாய் ஆடும் இரும்பு கேட்- !
சிமெண்ட் தூண்களில் !
சதுரத் தலைகளில் ஏற்றிய!
அறுமுகக் கண்ணாடி விளக்குகள்!
கும்பம் குமிழுடன்.!
அடையாய் வந்த!
தவிட்டுக் குருவிகள் சுற்றிலும் கொலுவாய்!
மணிமண்டபம் என்ற கற்பனை போல!!
அருகில் தொங்கும் தபால்பெட்டி!
அரங்கம் அமைக்க!
ஒற்றைக்குருவி!
ஒயில் நடனம் போல் காலைத்தூக்க...!
அவளை விளித்து அங்கு பார் என்றேன்.!
மெல்லிய குரலின் அசைவிலும்!
அசைந்தது எல்லாக் காட்சியும்.!
கணத்தினில் பறந்தன கண்களை விட்டு.!
'மெளனம் கலையாது பேசி இருக்கலாம்'.!
எப்பொழுது முடியும்?!
!
-- சிதம்பரம் நித்யபாரதி

கொல்லென கொல்லும் மழை

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
வானம் அழுது!
பூமிக்கு வந்த மழை!
நாங்கள் அழுத!
கண்ணீரில்!
நனைந்தது.!
நிலம் கடலானது!
குளம் கூளமானது!
ஆறு ஏழானது!
எங்கள் வாழ்வு பாழானது....!
ஒரு நாளில்....!
அன்று மழை வேண்டி!
தொழுதவர்கள்!
இன்று!
மழை தீண்டி!
அழுத கொண்டிருக்கிறோம்....!
போன வருடப் போரில்!
தோற்றுப்போய்!
புறமுதுகிட்டோடிய!
மழையரசன்...!
இம்முறை!
கோடான கோடி!
போர்வீரர்களோடும்!
இடி மின்னல்களோடும்!
புயலோடும் வந்து!
அடித்த அடியிலும்!
இடித்த இடியிலும்!
கோட்டை!
கொத்தளங்களை இழந்து!
கட்டடங்களை!
கட்டியணைத்து!
கதறிக்கொண்டிருக்கிறோம்.!
குளத்தை!
துடிக்கத் துடிக்க கொன்றோம்!
ஆற்றினை சிறைபிடித்தோம்!
வயல் நிலங்களை!
சிலுவையில் அறைந்தோம்...!
மரங்களின் கரங்களை!
முறித்தோம்!
காட்டினை கதறக்கதற!
கற்பழித்தோம்.!
காட்டுமிராண்டிகள்!
நாங்கள்!
இயற்கைக்கு செய்த கொடுமை!
கொஞ்ச நஞ்சமல்ல....!
நேற்று நாங்கள் விதைத்தோம்!
இன்று அறுவடை செய்கிறோம்....!
இயற்கை என்பது!
சிங்கம் புலி போன்று!
சினம் கொண்டதல்ல!
நாயைப்போன்று!
நன்றியுள்ளது!
வாழவைத்தால் வாலாட்டும்!
காதலோடு!
காவலிருக்கும்!
நாங்கள்!
கல்லெடுத்து அடித்தால்!
கடிக்குமா..!
இல்லை!
வா ...வந்து!
என்னை கொல்லென்று!
செங்கம்பளம் விரித்து வரவேற்குமா....?!
இயற்கையை!
கொன்றொழித்த!
அயோக்கிய!
கொலைகாரர்கள் நாங்கள்!
வாருங்கள்...!
மரங்களை நட்டு!
மன்னிப்பு கேட்போம்.....!!!
கடந்த கால தவறுகளை!
நாம் கொல்லாதவரை...!
எம்மை திருத்திக்கொள்ளாதவரை!
தொடர்ந்தும்!
இதுபோல் கொல்லென கொல்லும் மழை

நான் நீ

பட்டுக்கோட்டை தமிழ்மதி
பட்டுக்கோட்டை தமிழ்மதி !
நீ !
பூச்செடியைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
பூத்திருந்தது பூ. !
நீ !
வாசலைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
படர்ந்திருந்தது கோலம். !
நீ !
வானத்தைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
சிவந்திருந்தது அந்தி. !
நீ !
கொடியைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
காய்ந்திருந்தது கைகுட்டை. !
நீ !
சாளரம் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
நின்றிருந்தது நேற்றைய ஞாபகம். !
நீ !
மரத்தைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
கிளையிலிருந்தது கூடு. !
நீ !
என்னைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
மண்ணிலிருந்தது உன் கண். !
அப்போதும் !
உன் கண்ணிலிருந்தேன் நான்

என் பழைய மொழி

கலீல் கிப்ரான்
நான் பிறந்து !
மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. !
நான் தொட்டிலில் இருந்தபடி !
என் புதிய உலகத்தை !
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் !
பார்த்துக் கொண்டிருந்தேன்.. !
என் அம்மா, !
செவிலித் தாயிடம் கேட்டாள்.. !
எப்படி இருக்கிறான் என் மகன்..?? !
அவள் சொன்னாள்.. !
ரொம்ப நன்றாக இருக்கிறான்.. !
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. !
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் !
இதுவரை கண்டதேயில்லை.. !
எனக்குக் கோபம் வந்தது.. !
நான் கத்தினேன்.. !
அம்மா.. அது உண்மையில்லை.. !
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது.. !
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது.. !
அவள் மார்பகங்களின் வாசம் கூட !
எனக்குப் பிடிக்கவேயில்லை.. !
நான் மகிழ்ச்சியாய் இல்லை.. !
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!! !
ஆனால் என் அம்மாவுக்கோ, !
என் செவிலித்தாய்க்கோ !
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை.. !
ஏனென்றால் நான் பேசிய மொழி, !
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது.. !
இந்தப் புதிய உலகத்தில் !
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை.. !
இருபத்தியோரு நாட்கள் கடந்ததும் !
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.. !
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி !
என் தாயிடம், !
நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே.. !
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.. !
என்றார்.. !
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம், !
அப்படியென்றால் !
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய் !
துக்கப்பட வேண்டுமே.. !
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!! என்றேன்.. !
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை.. !
ஏழு மாதங்கள் ஆன பிறகு, !
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து !
என்னைப் பார்த்து என் தாயிடம், !
உங்கள் மகன் !
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்.. !
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.. என்றான்.. !
நான் கோபத்துடன், !
தலைவனெல்லாம் க முடியாது.. !
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்.. !
வேறு எதுவும் ஆக மாட்டேன்.. என்று கூக்குரலிட்டேன்.. !
ஆனால், அந்த வயதிலும் !
என் மொழி யாருக்கும் புரியவில்லை.. !
இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள் !
கழிந்த பிறகு !
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி !
எல்லோரும் இறந்து போய் விட்டனர்.. !
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்.. !
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்.. !
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது !
அவன் சொன்னான்.. !
நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று !
எனக்கு அப்போதே தெரியும்.. !
நீ குழந்தையாய் இருந்த போதே !
நான் கணித்துச் சொன்னேன்.. !
என்றான்.. !
நான் அவன் சொன்னதை நம்பினேன்.. !
ஏனென்றால், !
இப்போது !
என் பழைய மொழியை !
நானே மறந்து போயிருந்தேன்..!! !
----!
மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்