தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இருப்பதிகாரம்

வ.ந.கிரிதரன்
இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
- வ.ந.கிரிதரன் - !
!
படைப்பின் நேர்த்தியெனைப் !
பிரமிக்க வைத்திடுதல்போல் !
பாரிலெதுவுமில. !
வீழும் மலர், ஒளிரும் சுடர், !
துணையில் களிப்புறும் இணை, !
நிலவுமனைத்திலுமிங்கு !
நிலவும் நேர்த்தியென் !
நினைவைக் கட்டியிழுத்தல்போல் !
நினைவெதுவுமில. !
முறையெத்தனையெனினும் !
மறையாத நினைவுப் புயல்! !
இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து !
இருந்திடுமோ? இல்லை !
இதுவும் 'நிச்சயமற்றதொரு !
தற்செயலின்' !
சாத்தியம் தானோ? !
இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
---------------------------------------------------------- !
இருப்பதிகாரம் !
- வ.ந.கிரிதரன் - !
நிலை மண்டில ஆசிரியப்பா! !
!
வானினை நிலவினை வரையினை மடுவினை !
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும் !
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை !
மீறிட முடியா சிந்தையை மேலும் !
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள் !
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும் !
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும் !
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா? !
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்? !
விரியு மண்ட மடக்கு மண்டம் !
அதனை யடக்க மற்றோ ரண்டம். !
வெறுமை வெளியில் பொருளின் நடனம். !
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு. !
இதுவும் நிசமா நிழலாக் கனவா? !
நனவும் கனவா? கனவும் நனவா? !
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள். !
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்! !
இருப்பு அறிந்திட தேடித் தொடரும் !
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே! !
இதனை அறிதல் புரித லெவ்விதம்? !
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக் !
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை !
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை !
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்? !
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய் !
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம் !
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்? !
செயற்கை சமைத்திட சிந்தை தந்த !
செயலினால் தானோ செகத்தினில் துயரோ? !
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க !
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட !
பண்பினால் தானோ பாரினில் பகைமை? !
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று !
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு !
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து !
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை !
வந்திடு மென்றால் அதுவே போதும். !
வேறு.... !
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும் !
சிந்தை யிழந்து இருத்த லின்பம்! !
இரவில் வானில் நீந்தும் மீன்கள் !
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும். !
விசும்பும் மதியும் கதிரும் காற்றும் !
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும் !
படைப்பின் திறனை பறையே சாற்றும். !
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும். !
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும் !
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும். !
உறவினை உதறி யுண்மை அறிதல் !
துறவென ஆயிடு மதனா லதனை !
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே !
உண்மை காணலே சிறந்ததோ தறியேன். !
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன். !
உளையு முளத்தின் உளைவை எவ்விதம் !
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

சென்னபட்டணம்

ஜெ.நம்பிராஜன்
வாழ வரும் அனைவரையும்!
வாரி அணைக்கிறது சென்னை!
நல்ல சம்பளக்காரனுக்கு!
அப்பார்ட்மண்டில் வீடு!
குறைந்த சம்பளக்காரனுக்கு!
ஒண்டுக் குடித்தன வீடு!
வேலை தேடுபவனுக்குக் கூட!
மேன்சனில் குடித்தனம்!
சிக்னல் அருகே வசிக்கிறான்!
சென்னைத் தமிழன் மட்டும்!
-ஜெ.நம்பிராஜன்

பணம்

வேதா. இலங்காதிலகம்
ஒரு கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி!
ஒரு சோடி எண்களுக்குக் கிடைத்த பெறுமதி!
பெருமைமிகு மனிதப் படைப்புப் பணம்.!
அருமைத் திறமை, மதிப்பு, மனிதப் பெறுமதி!
துரும்பாகிறதே இவன் படைப்பின் முன்பு.!
மாறுபட்ட வடிவமாகி நாட்டுக்கு நாடு!
பெறுமதி, பெயர் வேறு ஆகிறது.!
திருவாகி இலட்சுமி கடாட்சம் ஆகிறது.!
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.!
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.!
பணம் - மனிதக்குணம் மாற்றும் உரைகல்.!
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.!
கருமி, உண்ணாமல் உடுத்தாமல் சேர்ப்பான்.!
திருடன், பித்தன், கனவான், விபச்சாரம்,!
திருவோடு ஏந்தி, திருமண் பூசியும்!
திறமையாய்ப் பணம் சம்பாதிப்பார்.!
ரூபா, றுப்பியா, டொலர், றிங்ஙிட்,!
ரூபிள், ஈரோ, குரோணர், பவுன்சென்று!
நாடுவிட்டு நாடு மாறி மனிதர்!
வாடுவதும், மகிழ்வதும் இவைகளுக்காக.!
பணம் பற்றிப் பழைய மொழிகள்,....!
பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.!
பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம்.!
பணம் பாதாளம் வரை பாயும்

உலகம் உலர்ந்து விட்டது

கே.பாலமுருகன்
இனி!
ஓர் உலகத்திற்காகப் !
போராடுவதை நிறுத்திக் கொள்வோம்!!
போதும் !
இந்த உலகமே!!
இந்த உலகத்தில்!
எனது கனவுகள் !
தொலைந்து விட்டன!!
நம்பிக்கையும்!
இழந்து விட்டவனாகிவிட்டேன்!!
ஓர் இரவில்!
என் பழைய!
காதலி சாளரமோரமாக!
தோன்றி ஒர் இரகசியத்தைக்!
கூறிச் சென்றாள்!!
“உலகம் உலர்ந்து விட்டது. . போய்விடு”!
வீட்டிலிருந்து கிளம்பி!
இருளில் நடைபிணமானேன்!!
எங்கு நடப்பது?!
நடந்து கொண்டிருந்தேன்!!
பார்க்கும் முகங்களெல்லாம்!
கல்லறை படங்களாக மாறின!!
உலகம் உலர்வதற்கு முன்பதாக!
ஏன் இவர்கள்!
வீட்டைக் கல்லறையாக்கிவிட்டார்கள்? !
இந்த உலகத்தில்!
வேறொன்றுமில்லை!!

பாரதி.. எங்கிருந்து வந்தாய்.. ரெத்தம்

வல்வை சுஜேன்
பாரதி கவிச்சாரதி.. எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய் .. ரெத்தம்!
01.!
பாரதி கவிச்சாரதி!
-----------------------!
எண்ண மெனும் தேரில் வண்ணம் மாறா!
வாழ்வில் நீ வாழ்கிறாய் கவியே நீ வாழ்கிறாய்!
கட்டவிழ்ந்த நதியிடத்தும் காடு மலை!
மேட்டிலும் சொட்டு மலர் தேனிலும் நீ!
வாழ்கிறாய் கவியே நீ வாழ்கிறாய்!
கொஞ்சுங் கிளியாள் கூண்டுக்குள்ளே பஞ்ச!
வர்ணம் கலையக் கண்டு நெஞ்சத் தீ!
நெடுவளர்த்து மஞ்சத்திரை மாற்றியவா!
நீ வார்த்த புதுமை பெண்ணாள் எமதீழத்திலே!
வேல் விழியில் தீ வழர்த்து தீயவரை!
தான் அழித்து உன் இறப்பை மீட்டெடுத்து!
தமிழீழத் தாய் மண்ணுக்கே உயிர் கொடுத்து!
தசையினை தீ சுடினும் சுடட்டும் என்றே!
வங்கத்து அலைமேலும் வாகை சூடி!
நல் தர்மம் நிலைத்திட பரிசளித்தாள்!
விஜையனுக்கு பார்த்தன் போல் பாமரர்க்கும்!
சாரதி நீ பாப்பா பாட்டின் பாரதி நீ!
புவி ஈர்ந்த கவியே புயல் சாயா மதியே!
கள்ளிருக்கும் பூவிலும் உள்ளிருக்கும் தேனிலும்!
உனை காண்கிறேன் நான் உனை காண்கிறேன்.!
02.!
எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய் !
-------------------------------------------------!
உயிரே எங்கே செல்ல போகிறாய் நீ!
சாய்ந்த கூட்டின் ஓரத்தில்!
ஒரு விழித் துளியின் கேள்வி !
கருவறையில் குடிபுகுந்தேன்!
உருவெடுக்க உயிரானாய்!
உலக பந்தில் சின்ன பாதம் பதித்தேன்!
வாழ்க்கை படகில் கூட்டி சென்றாய் !
கிழையிலே துளிராக இலையிலே!
நரம்பாக ஊருக்கும் துணையானேன்!
என் வாழ்விற்கு வரப்புயர் நீர் வார்த்தாய் !
நெல்லுக்குச் செல்லும் நீரோடையில் !
புல்லுக்கும் கசிந்துருகி எண்ணச் சிறகு !
விரித்து பட்டாம் பூச்சியாய் பறந்தேன்!
புவி வாழ்வின் தீ மேலே விட்டில் தான் யாவரும் என இன்று உணர வைதாய் !
நாலு கால் தவழ்ந்து இரு கால் நடந்து!
மூன்று காலூன்றி நான்கு தோழ்களின் !
துணையோடு விடை பெறும் நேரம் இது!
விழித் துளியின் கேள்விக்கு!
விடை என்ன தரப்போகிறாய்!
எங்கிருந்து வந்தாய் நீ எங்கே போகிறாய்!
சொல்லாமல் சொல்லிவிடு நிச்சயமாய் !
யாரிடமும் சொல்ல மாட்டேன். !
03.!
ரெத்தம்!
-------------!
உன்னில் என்னில் சுரக்கிது ரெத்தம்!
ரெத்த மிடுக்கில் நடக்கிது யுத்தம்!
ரெத்தம் செத்தால் யுத்தம் இல்லை!
யுத்தம் என்றால் ரெத்தம் ஏழை!
நிறங்க ளென்றும் ஜாதி என்றும்!
தரம் பிரிக்கும் உயர்ந்த மனிதா!
உன் ஜாதி என் ஜாதி என்று!
பிரிவேதும் இருக்கிறதா!
ரெத்த வங்கியில்!
ஜீவன் வாழ சுரக்கும் குருதியை!
சாக்காட்டில் எரித்துவிடாதே!
தானத்தில் தலை சிறந்தது!
ரெத்த தானமே!
நீ இறந்தாலும்!
இன்னொரு உயிர் காத்து!
உயிர் வாழும் உன் ரெத்தம்

இரத்தசாட்சி

ரவி (சுவிஸ்)
சகோதரியே !
நீ !
வெடிகுண்டை உன் உடலின் !
பாகமாக்கிய கணத்திலேயே !
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள் !
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை !
உணர்ந்திருப்பாய். !
மனித அறிதலுக்கு உட்படாத உன் !
உணர்வுகளை நீ !
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை !
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள் !
பேயோட்டமாய் காவிச்சென்றதடி. !
உடலை சிதிலமாக்கிய வெடிகுண்டோ !
உன் முகத்தை !
இரத்தசாட்சியாய் விட்டுச்செல்லும் என !
நீ கற்பனைபண்ணியிருக்க சாத்தியமில்லைத்தான் !
மனிதக் குண்டின் கோரத்தை !
துண்டமாகிய உன் தலை !
வரைந்துகாட்டியதை எப்படி மறப்பது !
எப்படி நாம் வாழாவிருப்பது? !
மனிதச் சிதைவின் காட்சிக்கூடத்தில் !
உன் முகம் !
ஆயுளையும் வென்றதுபார். !
இதுகுறித்து மண்பெருமை பேச என்னால் !
முடியவில்லை !
துரோகிகளை தண்டித்தவன்; !
பின்னாளில் துரோகியாகிப்போகிறான் !
துரோகிகளாய்ப் போனவர்களின் வாரிசுகள் !
வரையறுப்பாளர்களின் வாயாகிப்போகிறார்கள். !
ஆனாலும் பார் நாம் !
தொடர்ந்தும் !
வரையறை செய்துகொண்டுதானிருப்போம். !
பால்யத்தின்மீது நாம் வெடிகுண்டுகளை !
பொருத்திக் கொண்டுதானிருப்போம்; !
நீங்கள் !
குண்டுகளுடன் பாய்ந்துகொண்டேயிருங்கள். !
அவர்களின் வரையறுப்புகளின்படியேதானும் !
துரோகி சமன் போராளி என !
உயிர்ச்சமன்செய்யும் வாய்ப்ப்பாட்டை !
புரிந்துகொள்ளமுடிவில்லை எம்மால். !
தியாகத்தின் அதிஉணர்வையும் !
சேர்த்துக்கொன்றதுவோ !
நீ அணிந்த வெடிகுண்டு என !
சந்தேகப்படுகிறேன் நான். !
இன்னமுமாய் பார் !
உனது முகவரியை தியாகத்தின் !
பட்டியலிலிலிருந்து மறைத்துவிடுகிறது !
கிறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் !
சமாதானத்தின் முகப்போவியம். !
சகோதிரியே !
உனது இரத்தசாட்சியை மீறி !
கனவிலும்கூட துலங்க !
மறுக்கிறதடி சமாதானம் என்ற !
செய்தியை நான் !
சொல்வதற்காக என்னை மன்னித்துக்கொள்! !
ரவி(சுவிஸ்09072004)

இரு பதிவுகள்

மதியழகன் சுப்பையா
மதியழகன் சுப்பையா மும்பை !
* !
இடது கையில் !
காய்ந்த !
சளியின் கோடு !
காதுக்குள் !
காய்ந்திருக்கும் !
சோப்பு நுரை !
கன்னமெல்லாம் !
திட்டுத்திட்டாய் !
அழுக்கு !
புடைத்த வயிறு !
சீப்புக்கு அடங்காத மயிர் !
காலெல்லாம் !
செம்மண்ணால் !
உலக வரைபடம் !
மயிர் சார்ந்த !
இடங்களிலெல்லாம் !
உவர்ப்புச் சுவை !
மூக்கெல்லாம் !
காய்ந்த பீ !
எப்படி இருப்பினும் !
அந்தியில் வரும் ஆத்தா !
'என் ராசா' என்று !
முத்தமிடுவாள் !
ஆத்தா பார்த்திருபாளோ ராசாவை? !
# !
காலில் கருங்கல் !
ஏற்படுத்திய காயம் !
கரண பிடிச்சிருந்தது !
உள்ளங்கையெல்லாம் !
உதிராத காய்ப்பு !
பத்த வச்சாலும் !
பத்திக்காத பரட்டத்தலை !
கருத்து சுருங்கிய !
உடம்பு !
தோளெலும்பு மட்டும் !
தூக்கியிருக்கும் !
சோப்பின் முகம் !
கண்டதில்லை !
இடுப்பு வேட்டி !
நிமிர்ந்து நடந்தா !
நெஞ்சு வலிக்கும் !
குத்த வச்சுதான் !
கஞ்சியே குடிப்பேன் !
படுத்து கிடந்தா !
பல்லு தெரியும் !
எப்படி இருப்பினும் !
என் பொஞ்சாதி !
'மவராசன்னு' !
மடியில கிடத்துவா !
பொஞ்சாதியாவது !
பார்திருப்பாளா !
மவராசன?

இலக்கைப் பார்

ராமலக்ஷ்மி
எட்டுகின்ற தூரத்தில்!
இதோ இருக்கின்றது!
வெற்றி என்று!
அக்கறையுடன்!
சுட்டிக் காட்டப்படுகையில்-!
எட்ட வேண்டிய!
இலக்கினை நோக்காமல்!
சுட்டுகின்ற விரலை!
மட்டுமே பார்த்துநின்றால்!
கிட்டுமா வெற்றி ?

புரட்சிப் பாவலன் பாரதிதாசனை

சத்தி சக்திதாசன்
நினைந்து வணங்கிடுவோம்!
------------------------------------------------------------------------------------!
புத்தம் புதுபிரவாகமாய்!
புதுவையில் வெடித்தவனே - என்!
புரட்சிப் பாவலனே!
பாரதிதாசா வணங்குகிறேன் நின்னை!
எந்தையின் வழிநின்று!
என் அன்னையின் மொழி கண்டு!
என்னனகம் மகிழ்கையில்!
எழுச்சிகொள் நின் கவிதைகளில்!
எழுந்த என் உணர்வுகளில்!
என்றுமே நிலையானாய்!
என்னுள் நீ தீயானாய்!
தமிழை நீ அமுதென்றாய்!
அமுதை நான் சுவைக்காமல்!
அதன் சுவை எனக்களித்தாய்!
மாகவியின் கவிதைகளில்!
மனதை நீ பறிகொடுத்தே!
மாற்ரினாய் உனை நீயே!
பாரதிதாசனாய்!
சமுதாய அடக்குமுறைகள்!
சாதி, சமய வேற்றுமைகள்!
அனைதையும் எதிர்த்து நீ!
ஆயிரம் கவிதை தந்தாய்!
மனிதனாய் பிறந்தது!
மட்டுமே புவியினில் சிறப்பு அல்ல!
மனிதராய் வாழ்வதன் அவசியம்!
மனங்களில் புகுத்தி நின்றாய்!
புதுவெள்ளம் பாய்ந்து!
பயிர்கள் புத்துயிர் பெறுவது போல்!
புரட்சிப் பாவலன் உன் கவிதைகளால்!
பிறந்தது தமிழர்க்கு புதுவேகம்!
அயல் நாட்டு மக்கள் இன்று!
ஆறாத கண்ணீரில்!
அவர்களின் துயர் அகல!
அய்யா உன் நினைவுநாளில்!
அடிபணிந்து வணங்கி உன்னை!
அன்னை மண்ணின் சொந்தங்கள்!
அமைதி காண வேண்டி நின்றேன்

பிறந்த ராசி

மகி
வீதியின் ஒற்றை!
சாலையில் ஓரமாய்!
கால்கள் நடந்தாலும்!
நிற்கவில்லை என்!
பிறப்பினை ஒட்டிய!
துக்கங்கள் .....!
யார் சொன்னது ?!
நான் தீண்டபடாதவன்!
என்று ?தீண்டிகொண்டேதான்!
இருக்கிறார்கள் என்னை!
வார்த்தைகளால் .........!
எஜமானின் பத்து வயது!
பையன் என்னை!
அழைக்கும் அந்த!
ஒருவார்தையின் வீரியத்தில்!
என் சுயமரியாதை மொத்தமாய்!
செத்து போகிறது ..!
எல்லாம் நான்!
பிறந்த ராசி ...!
-மகி' தம்பி பிரபாவின் தம்பி'