ஓர் அஞ்சலி - ரவி (சுவிஸ்)

Photo by Paul Esch-Laurent on Unsplash

மரணம் !
வயதை வெல்லும் மரணம் கொடியது !
நண்பனே !
எடுத்துச் செல் !
எனது இரு கண்ணீர்த் துளிகளையும் !
எடுத்துச் செல் !
மிகுதியை என் கண் மடல்களுக்குள் !
தேக்கிவைக்கிறேன். !
உனது முகம் இறுகியது !
உன் புன்னகை செத்துப் போனது !
பார் நண்பா !
ஒரு கனவை செய்து காட்டுமாப்போல் !
நீ !
சவப்பெட்டிக்குள் !
வளர்ந்து கிடந்தாய் !
நம்ப முடியவில்லை !
என்னால் நம்பமுடியவில்லை - நீ இறந்துபோய்விட்டதாய். !
என்னிடம் இன்னும் கண்ணீர்த் துளிகள் இருக்கின்றன !
அவையும் !
ஒரு தசாப்தத்தை பின்னால் !
இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டன !
அவை !
தொலைந்துபோன தோழர்களுக்காகவும் !
இழந்துகொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும்- உன்போல. !
எப்படி முடிந்தது !
ஆயிரமாயிரம் தோழர்கள் !
வீசியெறிந்த பயங்களை எப்படிச் சூடினர் !
ஓயாமல் இயங்கிய தசைகளை !
எது கட்டிப் போட்டது !
விரக்திகள் கொண்டதும் !
வாழாவிருந்ததும் !
எப்படி எப்படி... !
எல்லாம் பட்டியலாய் நீண்டுபோனது !
நதியொடுங்கி ஓடையானாய் !
இருந்தும் !
ஓய்ந்துபோக முடியவில்லைப் பார் !
உன்னால் !
கேள் நண்பா !
எல்லாமே நேற்றுப்போல !
காலத்தை அழித்து அழித்து எழுதிய !
உன் உழைப்பும் !
மனங்களில் மறைந்து போகுமெனில் !
தியாகங்கள் மறக்கப்படுமெனில்... !
ஒரு மண்புழுவோடுகூட !
நான் நிறைய பேசவேண்டியிருக்கும் - அதன் !
அப்பாவித்தனத்திற்காய். !
-ரவி !
குறிப்பு: (போராளி ஈஸ்வரன் நினைவாக முன்னர் எழுதப்பட்ட கவிதை இது
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.