அவசரமாய்ப் போகும்போது !
ரோட்டில்கிடந்த முள்ளை !
எடுத்துப் போடாமல் வந்ததற்கு !
மனசு குத்தியதுண்டா ? !
ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த !
பறவை விலங்கு இறந்த வேளையில் !
நெருங்கிய உறவை இழந்ததுபோல !
துக்கப்பட்டதுண்டா ? !
அறமுகமில்லாத ஒருவர் !
முகவரிக் குழப்பத்தில் திண்டாடிய போது !
தெரிந்தவரைக்கும் சரியாக !
வழகாட்டியதுண்டா ? !
நலிந்தவர் மூத்தவர் !
நிற்கத் தடுமாற !
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை !
விட்டுக் கொடுத்ததுண்டா ? !
விபத்தில் சிக்கி !
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக !
நெஞ்சு கிடந்து !
அடித்துக்கொண்டதுண்டா ? !
பாதையைக் கடக்கையில் !
அணிற்பிள்ளை குறுக்கிட !
பதறியடித்து !
பிரேக் போட்டதுண்டா ? !
அப்படியானால் !
வாழ்த்துக்கள் !
இன்னும் நீங்கள் !
மனிதராய் இருக்கிறீர்கள். !
நன்றி :: !
”-நதிக்கரையில் தொலைந்த மணல்” !
வெளியீடு : பயணம் புதிது !
புலியூர் 639 114 !
கரூர் வட்டம் !
தொலைபேசி :: 04324 - 50292
சகாரா