இதுவும் முத்தம்தான் - புதியமாதவி, மும்பை

Photo by engin akyurt on Unsplash

==================== !
!
சத்தமில்லாமல் !
முத்தமிடும் காதல் !
நமக்கு !
சாத்தியப்படவில்லைதான்.. !
போர்முனையின் !
இருட்டைக் கிழித்து !
இன்னும் !
ஒலிக்கின்றது !
உன் !
சண்டைக்குரல்!! !
வெடிகுண்டுகளின் !
படுக்கையில் !
விழுந்துகிடக்கின்றேன் !
உன் விழிகளின் !
தேடலில் !
என் மொழிகளின் !
தோல்வி !
உன் உயிர்க்கிழித்து !
நீ கொடுத்த !
முத்தம் !
ரத்தம் சிந்தும் !
உதடுகளில் !
எழுதியது !
போராளிகள் !
தோற்பதில்லை. !
........ !
!
அன்புடன், !
புதியமாதவி
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.