நான் பெண் - கிறிஷ்ரா விஸ்ரறிஷ்

Photo by Sajad Nori on Unsplash

நான் பெண், எனது கத்தலைக் கேளுங்கள்;!
நாங்கள் தொகையில் அதிகம், கவனிக்காமல் இருப்பதற்கு;!
என்னை இடையூறு செய்யமுடியாதபடிக்கு, எனக்கு அறிவு அதிகம்;!
முன்பு கேட்டவையெல்லாம் நான் அடியில் இருந்தபோது;!
என்னை மீண்டும் அடியில் அமுக்க எவராலும் முடியாது.!
ஆம்! நான் அறிவானவள்;!
ஆனால் இந்த அறிவு வலிகளில் இருந்து பிறந்தது;!
ஆம், நான் விலை கொடுத்தேன்;!
ஆனால் பார், எவ்வளவை வென்றுவிட்டேன் என்பதை;!
நான் பலம் கொண்டுள்ளேன், என்னை வெற்றிகொள்ள முடியாது நான் பெண்!!
நீங்கள் என்னை வளைக்கலாம், ஆனால் என்னை ஒருபோதும் முறிக்கமுடியாது;!
அது என்னை மேலும் திடமாக்குகிறது, எனது குறிக்கோளை அடைவதற்கு.!
நான் இன்னும் பலமடைவேன்;!
நான் ஆரம்பநிலையில் இல்லை!
எனது நம்பிக்கையை நீங்கள் பலப்படுத்தியுள்ளீர்கள்!
நான் பெண், நான் வளர்வதைப் பாருங்கள்;!
நான் விரல்நுனியில் நிற்பதைப் பாருங்கள்;!
எனது கைகளை வாஞ்சையோடு பூமிமேல் விரிக்கிறேன்.!
ஆனால் நான் இன்னும் சிறிய கருத்தான்;!
நான் போவதற்கு இன்னும் நீண்ட.... நீண்ட.... பாதைகள் உள்ளன.!
!
இந்திய பெண்கள் விடுதலை இயக்கப்பாடல் ஒன்று.!
ஜெர்மனுக்கு : CHRISTA WICHTERICH !
ஜெர்மன்மொழியிலிருந்து தமிழில் : றஞ்சினி
கிறிஷ்ரா விஸ்ரறிஷ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.