பிதாவே..எங்களை மன்னியும் - புதியமாதவி, மும்பை

Photo by Seyi Ariyo on Unsplash

பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் !
பிழைத்திருப்பதற்க்காக !
நன்றி சொல்ல !
எங்களால் முடியாது. !
பிழைத்திருப்பதே !
பிழையாகிப்போனதால் !
அச்சுப்பிழையில் !
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம். !
!
பரமப்பிதாவே எங்களை மன்னியும் !
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன !
கருவறையே கல்லறையானது !
முலைப்பாலில் உயிர்க்கொல்லி !
ஒப்பாரியில் உன் சங்கீதம். !
பரமப்பிதாவே... !
எங்களை மன்னியும்..! !
!
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் !
இப்போதாவது- !
உயிர்த்தெழுவது எப்படி என்பதை !
எங்கள் துடுப்புகளுக்கு !
சொல்லிக்கொடும்.. !
உடைந்தப் படகுகளிலிருந்து !
விரியவேண்டும் எங்கள் வலைகள். !
!
புதியமாதவி, !
மும்பை
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.