நான்தான் உங்களிடமிருந்து !
தனிமைப் படுகிறேனோ !
என்ற ஐயமிருந்தது !
ஆனால் காலமும் நிகழ்வுகளும்!
உரைத்துவிட்டன உண்மையை!
'உங்களைப்போல்தான் நானும்'!
என்று நான் சொல்லவில்லை!
ஆனால் இச்சமுதாயச் சமுத்திரத்திலே!
அயராது நீந்தப் போராடும் !
மற்றொரு மீன்தான் நானும்.!
நேற்றைய நேற்றுகளின் நினைவுகளும்!
நாளைய நாளைகளின் கனவுகளும்!
எனக்குமுண்டு. !
எதனைக் கொண்டு !
என்னைத் தணிக்கை செய்கிறீர்கள் !
என்ற திட்டவட்டமில்லையெனக்கு.!
தீப்பட்ட முதுகின்மேல் மூட்டைப்பூசிகளாய்!
அவ்வப்போது வந்து!
தனியாய்த்தான் இருக்கிறேனா என!
எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறீர்கள்...!
அருவருப்பாயிருக்கின்றது.!
சிரித்துக் கொள்கிறீர்கள்!
களித்துக் கொள்கிறீர்கள்!
மறக்காமல் என்னைமட்டும்!
முறைத்துக் கொல்கிறீர்கள்.!
ஜன்னலின் திரைச்சீலையினால்!
ஒரு கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்க!
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப் !
போகும் தென்றலைப் போல!
வார்த்தைகளினால்!
என்னைப் புரியவைக்க !
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப்!
போகிறேன்.!
என்னைத் தனிமைப்படுத்தியவர்களே...!
இறுதியாய்க் கேட்கின்றேன்!
இப்படியேதான் இருக்கப்போகிறீர்களா இனியும்?!
அப்படியே ஆகட்டும்; நான் விடைபெறுகிறேன்...!
ஆம்!!
நகரத்து வீதியில்!
அநாதைப்பிணமாய்க் கிடப்பதிவிடப்!
பாலைவனத்தில் புதையுண்டு போவது!
குறைவான அவலமே...!
போகும்முன் ஒரேயொரு வேண்டுதல்...!
எதற்காக என்னைத் தனிமைப்படுத்தினீர்கள் என்று!
எக்காலத்திலும் எனக்குத் தெரிவிக்கவேண்டாம்.!
!
-ஜதி!
14-03-2008

ஜதி