தந்தை உன்!
எண்ணங்கள்!
தனயன் என்!
நெஞ்சினில் துள்ளி!
விளையாட!
அப்பா என்றொரு!
சொல்லுக்கு!
அறிவு என்றொரு!
கருத்தை எண்ணிரண்டு!
வயதினில் மறந்த!
முட்டாள் நான்!
நீ நடக்கும் மண்!
நடுக்கம்!
கண்டால் கூட!
அமைதியை!
கைவிடா மனம்!
கொண்டவன் தான் நீ!
ஜந்து வருடங்கள்!
உருண்டோடின!
ஜயன் உன்னைத்!
தன்னோடு அழைத்தின்று!
இன்றும் என்னெஞ்சில்!
பசுமையான உனது!
நேச நினைவுகள்!
தென்றலாய் வீசுதே!
அறிவுரை என்று நீ!
அன்று கூறிய!
அழுத்தமான!
வார்த்தைகளின் அர்த்தம்!
முன்பு புரியவில்லையே!
ஆது!
இளமையின் மூர்க்கத்தனமா ?!
சிரித்தபடியே வாழ்வின்!
அனர்த்தங்களை அளந்தவன் நீ!
நீ கண்ட மனத்திடத்தின்!
அரைப்பங்கு கூட!
அடையாதவன் நான்!
அடி எடுத்துக் கொடுத்தாய்!
தந்தையாய்!
அன்று நீ!
அதே அடியில் தொடர்ந்து!
தந்தையானேன் நான்!
உன் மகன் நான்!
பெற்ற அனுபவங்கள் அனைத்தும்!
என் மகனும் பெற்றிட!
உன்னருள் வேண்டுமே!
உன் பாதைகள் என்றுமே!
எளியவைதான்!
உன் வழிகள் யாவையும்!
தூய்மையானவையே!
ஊன் எண்ணங்கள் எப்போதுமே!
தொளிவானவைதான்!
ஒன்று மட்டும் நானுரைப்பேன்!
என்னுடல் எரியும் போதும்!
உன் நினைவுகள் மட்டும்!
பசும் புல்லென!
நிலைத்திருக்கும்!
!
சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்