01.!
தாய்மண்!
-----------------!
பச்சைப் பூமி, பளிங்குக் குடிநீர்!
எச்சிலாகிவிட்டது எங்கள் பூமியில்!!
பெரும் பட்டினி குடியிருக்க இடமில்லை.!
கருக்கலைப்பு, தமிழர் உயிர் அழிப்பு!!
தீ! பெரும்தீ! மண்மீது! மக்கள்மீது!!
தீய்ந்த பட்டமரத்தில் பறவைகளும்!
தீம்பின்றி அமரவியலாத பதட்ட நிலை!!
தீயுதெம் மனம் கோபமாய், ஆக்ரோசமாய்!!
ஆதிகாலமோ எனும் ஊர்ச் சிதைபாடு!!
வீதிகளும் உடைந்த பெரும் கட்டிடங்களும்!!
மோதிய குண்டுகளால் எரிந்த மரங்களும்!!
சேதி சொல்கிறது பயங்கர இனஅழிப்பென்று!!
நாளும் பெரும் தொகை மக்களிறப்பு!!
நீளும் செய்திகள் ஊடகங்களில் பதிவு!!
ஊடகவியலாளர்கள் உயிர் ஆயத முனையில்!
ஊசலாடுகிறது! கொலை பூமியாய் தாய்மண்!!
காலடி வைக்கவே பூமி இல்லாது!
கவரப்படக் கூடாது எம் மண்!!
கையிணைந்து தமிழர் அனைவரும் ஒன்றாக!
வைக்கும் போராட்டம் இனம் காக்கட்டும்!!
9-03-2009.!
!
02.!
பெண்விடுதலை!
------------------!
பெண்ணுரிமை பெண்விடுதலை!
பெண்ணெழுச்சி என்று!
பொன்மொழி பேசுகிறோம்!
வீண் அல்ல அவை.!
ஓன்று உறுதியானது!!
ஆண்களுக்கெதிராக இது!
ஆண்களை வெல்லும் !
ஓன்றுபட்ட குரலல்ல!!
தொன்றுதொட்டு உலகில்!
பெண்களை அடிமைகளாக!
நின்றழிய வைக்காதீர்!
என்ற குரலே இது!!
ஆணோடு பெண்ணும்!
பெண்ணோடு ஆணும்!
தூணோடு தூணாக நின்று!
இணங்கி இயங்குதல் வாழ்வு!!
ஒருவருக்கொருவர் உதவி!
பெருமையிலும் சிறுமையிலும்!
உரிமை கொண்டு சமமாக!
இருவரும் வாழ்தலே விடுதலை.!
24-3-2009
வேதா. இலங்காதிலகம்