வாசற்படி,தின்னை,என் அன்னைமடி!
எப்பொழுதும் நான்!
ஞாபகங்களால் தவழ்ந்து விளையாடும்!
ஞானமடங்கள்!
பூரணமான எனது!
புனிதஷ்த்தலங்கள்!
வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறபோது!
தென்படும் என் திசைகள்!
தன் துணையை பயணமொன்றுக்கு!
கையசைத்து வழியனுப்ப மனமின்றி தவிக்கும்!
காதலியைப்போல் நானும்!
மயிலிறகால் வருடும்!
மழலை பருவத்தை !
நிகழ்காலத்தில் நினைவுகளில் கூட!
மீட்டிப்பார்க்கநேரமின்றி!
மின் விசிறியாய் சுழல்கிறேன்!
காலம் என்னை!
தன் அடுப்பன் கரையின்!
அம்மிக்கல் போலவே ஆக்கிவிட்டது

ரோஷான் ஏ.ஜிப்ரி