யாரும் பார்க்காதவை - கவிமதி

Photo by Pramod Tiwari on Unsplash

கவிமதி !
யாரும் !
பார்க்காதவேளையில் !
மீன்கள் நீந்துவதை !
நிறுத்தியிருக்கக்கூடும் !
யாரும் !
பார்க்காத வேளையில் !
இரண்டு நிலாக்கள் !
பாதிசூரியன் !
பிளந்தவானமென்று !
எத்தனையோ மாற்றங்கள் !
இப்பிரபஞ்சத்தில் !
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதென்பதை !
யாரும் !
பார்க்காதவேளையில் !
பார்த்தவர்கள் சொன்னாலும் !
பார்க்காதவர்கள் !
ஏற்றுக்கொள்வதேயில்லை !
யாரும் !
பார்க்காதவற்றை !
கூட்டம்கூட்டி பார்க்கவைக்கவும் !
அவசியமில்லை
கவிமதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.