மெழுகுவர்த்தியில் அவள்!
முகம்பார்த்துப் பின்!
பேனை பிடித்து – அந்த!
மனோகரத்தை வரையும்!
வேலையில்லாதவன் நான் ..!!
கண்திரை மூடும்போதும்!
நித்திரை வேண்டாமென!
நித்தம் உன்!
நினைவில் வாடிய!
ஜீவனில்லா ஜடம் நான் ..!!
அல்லிப்பூவின் இதழ்கொண்டு!
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி!
கடலைத்தூற்றி!
கரையை அணைத்த!
பைத்தியக்காரன் நான் ..!!
மனோகரத் தோற்றத்துக்கு!
மணிமணியாய் வார்த்தை தேடி!
தமிழில் வார்த்தை கொஞ்சம் என!
ஒருவரியில் பொய்சொன்ன!
பொல்லாதவன் நான் ..!!
துணையாய் இருப்பாயென நம்பி!
தோள்கொடுத்த!
தோழனை தூக்கியெறிந்து!
தனிமையில் தவித்த!
துரதிர்ஷ்டசாலி நான் ..!!
நெஞ்சம் செய்யும்!
கபளீகரத்தில்!
தாயின் நெருடலை!
தொல்லையென்றொதுக்கிய!
துர்மனக்காரன் நான் ..!!
மொத்தத்தில்!
காதலுக்காக!
வாழ்வை இழந்து!
காதலிக்காக!
என்னை இழந்த!
உதாரணவாதி நான் ..!!
ஆர்.நிர்ஷன்

ஆர். நிர்ஷன்