வழமை போலவே!
உனது அளவிடமுடியாக் கோபங்களையும் !
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று!
வழியிறங்கிப்போகிறேன்!
ஒவ்வொரு துணிக்கையிலும்!
அன்பைக் கொண்டு!
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்!
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்!
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை!
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்!
அலட்சியத்தின் சலனமற்ற மொழி!
உன் முகத்தில் உறைகிறது!
நாற்திசைகளிலும் ஊசலாடும்!
நூலாம்படைகளினிடையில் !
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்!
நிரம்பி வழிகிறது!
நிராகரிப்பின் பெருவலி!
நான் அகல்கிறேன்!
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்!
நீயுன் வழித்துணைகளை!
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப் !
பாடச் சொல்லி ரசி!
இறுதியாக வழமை போலவே!
உனது அளவிடமுடியாக் கோபங்களையும் !
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று!
வழியிறங்கிப்போகிறேன்!
வாழ்க்கை!
அது மீண்டும் அழகாயிற்று!
- எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்