நானும் நீயும் - s.உமா

Photo by Tengyart on Unsplash

1 நானும் நீயும் !
* புத்தகச் சாலை!
சொர்கத்தின் வாசல் எனக்கு!
உனக்கோ!
திக்கு தெரியாத காடு !
* கதை கவிதை!
கரும்பெனக்கு!
கானல் நீருனக்கு!
* எழுத்தெனக்கு!
இதயத்தின் பக்கத்தில்!
எழுதும் முறைமறந்து!
`தட்டித் தட்டியே` !
பழகிவிட்ட உன் !
கைகளுக்கு!
`ஃபைல்` களின் பக்கங்களை!
`க்ளிக்` கத்தான் தெரியும்,!
பக்கங்களின் புரட்டல்களில்!
பித்தானவள் நான்.!
* இரவில் நிலவில்!
இருளின் ஒளியில்!
நெருப்பு பந்தங்களில் !
விழி தீண்டி!
நானிருக்க!
இதமான குளிரில்!
இமை மூடி தூங்கிவிட்டாய்!
நீ...!
* கதம்ப மாலைப் போல்!
எதிர்மறையாகவே!
பிணைந்திருக்கின்றோம்!
இருப்போம்!
மாறுபட்ட வண்ணங்கள் !
குழைந்தால்!
புதுப்புது எண்ணங்கள் !
சாத்தியமே!... !
2.கலைந்த கனவு !
அழகான மலை!
ஆழமான பள்ளத்தாக்கு!
அற்புதமான மாலை நேரம் !
பசுமையான புல்வெளி!
பக்கத்தில் !
நீ மட்டும்!
ப்பூ....!
கட்டிலில் கொசு
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.