போராட்டத்தின் -!
ஒவ்வொரு கிளையாய்!
தாவிச் சென்றதில்;!
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி!
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;!
ஒரு நாளைக் கடப்பதே!
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க!
வருடங்களை -!
சிரிக்க மறுத்து!
சகித்துக் கொண்டே - கடக்கிறோம்;!
எதிரே வருபவர்களை யெல்லாம்!
தனக்கானவர்களாக எண்ணியும்,!
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -!
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே!
மடிகிறதிந்த மனித இனம்; அதில்!
நானும் மாறுபட்டவனாக இல்லை;!
அப்பட்டமாய் -!
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்!
வாழ்வதற்கான உயிர்காற்று -!
தொண்டையை அடைத்துக் கொள்ள,!
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,!
ஆசையில் -!
நம்பிக்கையில் -!
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்;!
இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்!
எந்த நிலையிலும் -!
யார் இறப்பிலும் -!
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,!
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்!
சில உண்டு, என்றாலும் -!
மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய!
மீண்டும் ஒரு புள்ளியாக -!
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!!
வித்யாசாகர்