என் பாலைவனப்பயனத்தில் ஒரு நாள்!
மல்லிகைச் செடியைக்கண்டேன்!
மல்லிகையும் பூத்திருந்தது!!
முகர்ந்தேன் மணல் வாசம்!
அதைச்சொல்லிக்குற்றமில்லை!
நீருண்டு வாழ்ந்திருந்தால்!
நீர் வாசம் வீசும்,இது!
மணலுண்டு வாழ்ந்ததால்!
மணல் வாசம் வீசுகிறது!!
ஊரிலும் இதை உணர்ந்தேன்!!
உண்ணும் உணவிலும்!
உடுக்கும் உடையிலும்!
மனைவியின் அணைப்பிலும்!
மகளின் முத்தத்திலும்!
ஆக மொத்தத்திலும் மணல் வாசம்!!
மீன் விற்ற காசு நாறுகிறதோ இல்லயோ!
மணல் தேசக்காசு மணல் வாசம் வீசுகிறது!!
மனைவியிடம் சொன்னேன்!
அதற்கு மறுமொழி சொன்னாள்,!
'உங்களுக்கு வீசுவது மணல் வாசம் ஆனால்!
உங்களிடம் வீசுவது பண வாசம்.....!
வேறு வேலையைப்பாருங்கள், !
இன்னும் இருப்பது ஒரு மாசம்!'!
-- கோ.சிவசுப்ரமணியன்!
சௌதி அரேபியா

கோ.சிவசுப்ரமணியன்