அழகுச் சொல்லொன்று வேண்டும்!
அறிவெது சொல்லிடத் தான் வேண்டும்!
இழியது இவ்வுலகில் இல்லை!
இயற்றிய பொருளில் வாழ்ந்தால்!
என்று சொல்லிடவும் வேண்டும்!
தொடர்கதை போலன்று வாழ்வு!
விட்டுத் தொடர்ந்திட முயன்றால்!
துரத்திடும் சாவு!
என ஓதிடவும் வேண்டும்!
கொடியது இவ்வுலகில் இல்லை- அனைவரும்!
கொற்றவர் ஆவதும் இல்லை - வாழ்வில்!
தோல்வி என்பது இல்லை - வாழ்வை!
வென்றார் எவரும் இல்லை!
என ஓங்கி உரைத்திட வேண்டும்!
அன்பைச் சொல்லிடவேண்டும்!
ஆனந்தம் எதுவென்றும் சொல்லும்!
அழகுச் சொல்லொன்று வேண்டும்!
செந்தமிழ்ச் சொல்லொன்று வேண்டும்!
சென்னியில் உரைத்திட வேண்டும்
சின்னு (சிவப்பிரகாசம்)