வாழ்க்கை!
------------!
எப்போதும்!
வேர்களின்!
நம்பிக்கையில் இறுமாப்புடன்!
நிற்கும்...!
புயல்!
வந்து மோதினாலும்!
வெற்றிவீரனாகவே சாயும்..!
நாணல்!
மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்..!
தன்னைப்போல்!
இரு...!
வாழலாம்...!
பூக்கள்!
வண்டுடன் காமுற்ற!
போதையில்!
கிடக்கும்..!
இலைகள் யாராவது !
உரசமாட்டார்களா !
என்று சிலிர்த்து !
நிற்கும்...!
சருகாவதற்குள்!
வாழ்வை !
அனுபவித்துவிடும் துடிப்பு...!
மரம்!
தன்னில் !
முளைத்தவற்றைப் பார்த்து !
சிரித்துக் கொண்டாலும்!
மௌனமாகவே!
நிற்கும்..கம்பீரமாக..!
இலைகளும்..பூக்களும்!
விசுவாசமாகவே!
இருக்கும்!
என்கிற!
நம்பிக்கையில்!
குருவிச்சை!
ஒட்டி!
முளைத்ததை!
அறியாமாலேயே வளர்ந்தது.!
பூக்களின்!
காமம்,!
இலைகள்!
குருவிச்சையுடனான !
உரசல்..!
மரத்தை!
வெட்டிச் சாய்க்க!
சரிந்து வீழ்ந்தது...!
வேர்கள்!
மட்டும் கவலைப்படாதே...!
இதுதான் வாழ்க்கை...!
நானிருக்கிறேன்..!
என்னிலிருந்து!
புதிதாய்!
வீச்சுடன் மரம் !
முளைக்கும் என்றது....!
02.!
துப்பாக்கிகள்!
----------------------!
துப்பாக்கிகள் கூட!
அகிம்சை !
பற்றி !
போதிக்கிறது.!
சமாதானம் பேசிய படியே!
எங்களூரில்!
இயந்திர வாகனங்கள்!
வந்தன..!
குழந்தைகளின் தலைகளை!
நெரித்தபடி..!
இராணுவம்!
வயிற்றை கிழித்து!
பயங்கரவாதியைத் தேடுகிறான்..!
வகுப்பறையில்!
தலமைஆசிரியர் முன் நின்றேன்!
எங்கு!
குண்டு வைத்தாய் !
என்ற விசாரனைக்காக...!
நீ சுட்டாய்..!
தீவிரவாதி என்று நீயே!
சொல்லிக்கொள்கிறாய்..!
ஆமாம் என்கிறார்கள்!
அண்டி நிற்பவர்கள்.!
இறந்த பின்!
எந்த உடன்படிக்கையின் கீழ்!
என்!
பிணத்தை!
விசாரனை செய்யப்போகிறீர்கள்?!
03.!
வாழை குலை!
---------------------!
வாழை குலை!
தள்ளி!
மகிழ்ச்சியாய்!
முற்றத்தில் நின்றது.!
கிணற்றடியில்!
நின்று வாழையைப் !
பார்த்தால்!
அப்பாவின் முகத்திலும் மகிழ்வு!
பொங்கும்...!
உறவுகள்!
விரதம் என்று !
இலைகளை வெட்டிச் செல்வர்.!
தங்கை!
கணவனுக்குப் பிடிக்கும்!
என்று!
பொத்தியை !
கொண்டு சென்றாள்.!
மிச்சமிருந்த குலையை !
மருமக்கள் உரிமையுடன்!
பங்கு போட்டனர்.!
போதாதற்கு-!
வாசிகசாலைக்காரரும்!
விளக்கீட்டுக்கென!
குத்தியை வெட்டிச் செல்ல!
மொட்டையாய் !
அந்த வாழை மரம்..!
அப்போதும் அப்பா !
சிரித்தபடியே இருந்தார் !
புகைப்படமாய்
முல்லை அமுதன்