இதமாய் இனிக்கிறது - உடுவையூர் த.தர்ஷன்

Photo by Seyi Ariyo on Unsplash

ஒருமுறை உன்னை பார்த்தேனே -என் !
இதயம் உடைந்ததடி !
மறுமுறை உன்னை ரசித்தேனே -என் !
இளமை கொல்லுதடி !
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால் !
இதமாய் இனிக்கிறது !
நீ கவிதை பேசவில்லை -ஆனால் !
மனசும் இசைக்கிறது !
விழியினில் விழுந்திட்ட ஒரு விதை நீ !
நினைவினில் வளர்ந்திடும் ஒரு செடி நீ!
உயிரினில் உலவிடும் ஒரு மதி நீ!
உதட்டினில் பிறந்திடும் ஒரு மொழி நீ!
பூக்களின் இதழில் உந்தன் வதனம் !
நிலவின் மடியில் உந்தன் புருவம் !
கண்களை திறந்தாய் பகலின் ஜனனம் !
கூந்தலை கலைத்தாய் இரவின் மரணம் !
காதல் செய்தேன் உன்னை மட்டும் !
கனவில் காப்பேன் உன்னை மட்டும் !
நெஞ்சில் சுமந்தேன் உன்னை மட்டும் !
என்னுயிர் கொடுப்பேன் உனக்காய் மட்டும் !
முளைக்கின்ற தடங்களில் இருப்பிடம் அமைத்தேன் !
சிரிக்கின்ற விழிகளின் புதுமொழி படித்தேன் !
தவிக்கின்ற நிழலிடம் முகவரி கொடுத்தேன் !
பிரிகின்ற நொடியினில் என்னுயிர் விடுவேன்
உடுவையூர் த.தர்ஷன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.