1.புதிதாய்ப் பிறப்போம்!
இந்த யுகம் முடிவுற்று!
புதிதாய் ஓர் யுகம் பிறந்தால்!
நான் பிறக்க வேண்டும்!
மழலையின் சிரிப்பொலியே!
எங்கும் மலர்ந்திருக்க வேண்டும்!
யுத்தம் என்ற வார்த்தையை!
அகராதியிலிருந்து நீக்க வேண்டும்!
குயில்களின் கூவலும்!
பறவைகளின் சலசலப்பும்!
அருவியின் சத்தமும்!
காதில் கலந்து மகிழ வேண்டும்!
அளவாய் ஆசையுடன் மனிதர்கள்!
ஆட்சிகள் அதிகாரங்கள் அற்று!
எம்மை நாமே ஆள வேண்டும்!
போதும் என்ற வாழ்வில்!
விருப்புடன் மரணம்!
அதனால் பிறர்க்கு!
துயரம் வேண்டாம்!
பொய்கள் அற்று இருக்க!
புதிதாய் ஓரு வாழ்வு வேண்டும்!
!
2. அழகி!
வான் அங்கு இல்லை!
பிறை நுதல் கண்டேன்!
குளம் அங்கு இல்லை!
தாமரை முகம் கண்டேன்!
கடலங்கு இல்லை!
கயல்விழி கண்டேன்!
விண்மீன்கள் இல்லை!
முல்லாக்கு கண்டேன்!
ரதம் அங்கு இல்லை!
லோலாக்கு கண்டேன்!
போர் அங்கு இல்லை!
சங்கொன்று கண்டேன்!
இறை அங்கில்லை!
மலர் பந்துகள் கண்டேன்!
கொடி அங்கில்லை!
இடை ஆடக்கண்டேன்!
இசை ஒன்று கேட்டேன்!
நரம்புகள் என கார்குழலில்!
வண்டுகள் இசைமீட்ட!
தவில்களும் கண்டேன்!
சலங்கை ஒலிகேட்டேன்!
அவள் நகைப்பென்று வியந்தேன்!
பெண் ஒன்று கண்டேன்-அவள்!
அழகை என்னென்று சொல்வேன்!
- நளினி.அ

நளினி.அ