மின்னல் வெட்டும் !
இடி வெடிக்கும் !
மழைதான் அடுத்தது !
மாரிகாலம் இப்படித்தான் போகும் !
பழைய பள்ளிக்கூடம் !
பழைய வாத்தியார் !
'கைவேலை' அப்படியொரு பாடம் !
திரும்பத் திரும்ப !
அம்மியும் குழவியும் !
உரலும் உலக்கையும் !
ரேடியோவும் !
களிமண்ணிலேயே செய்வோம் !
கேள்வியே கேட்காத வாத்தியார் !
சிந்தனையைத் தூண்டாத!
களிமண் மூளை அவருக்கும் !
100 க்கு 100 எல்லோருக்கும் !
அதுதான் கிடைக்கும் !
வாய்க்கால் வழியே !
மழைநீர் முட்டி முட்டி ஓடும் !
ஒரே மாதி!
வெவ்வேறு கடுதாசியில் !
கப்பல்கள் விடுவோம் !
ஒரே தடத்தில் !
அவையும் முட்டியும் மோதியும் !
அணைத்தும் !
ஒன்றாய் செல்லும் !
எம்மைப்போல் !
பழகிப்போனது வாழ்க்கை !
'அவர் சொன்னால் சரியாயிருக்கும்'!
மேய்ப்பரின் பின்னால் !
மந்தைகள் செல்லும் !
புதிய புதிய மேய்ப்பர் வருவார் !
மீண்டும் மீண்டும் மந்தைகள் !
பின்னால் செல்லும் !
பழகிப்போன வாழ்க்கை

நிர்வாணி