வாழ்வில் வந்தாய் அமைதியாய்!
வீட்டில் தனியே என்றாய்!
அருகிலேயே இருந்தான்!
அவன் நட்புகள் காணாமல்!
அலைந்து சேவை!
நேரம் ஒதுக்கவில்லை என்றாய்!
சேவையினை ஒதுக்கினான் !
நம்பிள்ளை நம் குடும்பமென்றாய்!
தாய்தந்தை மறந்து குடும்ப நலமானான்!
இன்றோ புதிய நட்புகள் பாராட்டி!
உதவி உபத்திரம் செய்கிறாய்!
மகளிர் சேவையாய்!
செல்கிறாய்!
உன் குடும்பம். அவன் குடும்பமென்கிறாய்!
அவன் சேவை மனப்பான்மை!
உன் சேவையை தடுக்க மறுக்கிறது!
உன் நட்புக்கு உதவி செய்கிறது!
அவன் தாராள மனம்!
உன் குடும்பத்தையும் !
ஆராதிக்கிறது!
தென்னை சுற்றி வளரும்!
மணி பிளாண்ட் செடி!
அழகுதான் என்றாலும்!
மண்ணில் சத்து ஊறியும் வரை!
நியாயம் ஆனாலும்!
தென்னையையே ஊறிஞ்சால்!
அது அநியாயம்!
நன்றாக படர்ந்தபின்!
தென்னை வெளியே!
தெரிவதில்லை!
அவனுள்ளமும் வெளியே!
தெரிவதில்லை
வி. பிச்சுமணி