சடச் சட மழையில்!
ஈரக் காற்றில்!
இருள் அணைத்த வேளையில்!
மீண்டும் மீண்டும் வருகிறாள்!
வாகனப் புகையில்!
கரும் பூனையில்!
காவல் நாயில்!
சிறு வழியில்!
சீறும் மனிதரில்!
என்னிடம் வருகிறாள்!
உயர்ந்த மரங்களில்!
விளைந்த நிலத்தில்!
மக்கள் கூடும் இடங்களில்!
வெட்ட வெளிகளில்!
என்னிடம் தஞ்சம் என்றே வருகிறாள்!
எரியும் அடுப்பில்!
சுடும் எண்ணையில்!
வெட்டும் கத்தியில்!
எல்லாம் ஆகத் தெரிகிறாள்!
அறிஞர் கூடும் இடங்களில்!
அறிவுப் போர்களில்!
காக்கிச் சட்டைகளில்!
வேகம் போகும் வாகனங்களில்!
கவர்ந்தே என்னைச் செல்கிறாள்!
சின்னு (சிவப்பிரகாசம்)