வசிப்பதற்காக - அறிவுநிதி

Photo by Daniel Seßler on Unsplash

ஆக்கம்: அறிவுநிதி!
வீட்டைக் கட்டியும்!
முகவரி நிரந்தரமாகியும்!
வாழ்வு தேடி!
புதுப் புது முகவரிகளுடன்!
சேமிப்புளுக்காக!
சிதறிப்போன விசுவாசங்கள்!
தூரம் தூரமாய்!
பிரிவின் பாரம் சுமந்து!
முரண்களுக்கு மத்தியில்!
பயணித்துக் கொண்டு!
வாழ்க்கை காத்திருப்பதாக!
எண்ணி!
வயது கடந்துகொண்டிருக்கிறது!
கனவுகள்!
ஒன்றென் பின் ஒன்றாக!
யாசிக்கின்றன!
பல வண்ணங்களில்!
அரிதாரங்களற்ற!
அவதாரம்பூண்டி ஏதேச்சைகளில்!
யத்தனிக்கும்!
அடுத்த இலக்கில் பெறும் பகுதி!
இருப்பது அறியாமல்!
நகர்ந்துகொண்டே இருக்கும்!
வாழ்க்கை!
திரும்பிப் பார்க்கும் போது!
குழப்பங்களின் மிச்சம்!
தேடல்களில்!
எங்கே எங்கோ!
கடைசியாய்!
மௌனத்தில் உறைந்து போகும்!
மூச்சுப் பை!
முற்றுப் புள்ளியாய்!
வாழ்வின் அடிவாரத்தில்!
நினைவிடங்களாக!
பூர்விகம்!
!
ஆக்கம்: அறிவுநிதி!
006590054078
அறிவுநிதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.