ஆயிரமாயிரம் மனிதர்கள்!
பணிபுரியும் அலுவலகத்தில்...!
யாருமற்ற தனிமையில்!
ஒரு நாள்....!
உன் அருகில்!
ஒரு முழு நாள்...!
உன்னுடன் பரிமாறிக்கொண்ட - அதே!
தகவல்களை கூட!
அலுக்காமல் மீண்டுமொரு முறை!
அசை போட்ட நாள்...!
ஒரே உணவினை உன்னுடனிருந்து!
சுவைத்திட்ட நாள்...!
ஊரைப்பற்றி கவலைப்பட்டு!
உன்னருகில் அமர அச்சப்பட்டு!
ஒரே பேருந்தில்!
ஒரு சேர பயணித்த நாள்...!
கவலைப்பட்ட ஊரைப்பற்றி!
கவலை இன்றி - உன்னுடன்!
நடந்து சென்ற வீதிகள்... கடைகள்....!
ஒரு வருடமாக தவமிருந்த!
இந்த திருநாள்!
மீண்டுமொருமுறை வாய்த்திடாதா?...!

வீ.இளவழுதி