தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மனசாட்சி .. உறக்கம் கவியா இரவுகள்

ப.மதியழகன்
மனசாட்சி.. உறக்கம் கவியா இரவுகள் !
01.!
மனசாட்சி !
---------------------!
பூரணமாய் அஞ்ஞானம் வரும்!
பெயர் புகழும் தேடி வரும்!
பொன், பொருளும் வந்து குவியும்!
கூரையை பிய்த்துக் கொண்டு!
கரன்சி நோட்டுக்கள் கொட்டும்!
ஊரும், நாடும் காலில்!
விழுந்து வணங்கும்!
தொடங்கிய தொழில் யாவுமே!
வெற்றி பெறும்!
ஜகத்தை ஆளவந்த அரசன் என!
புலவர்கள் கூட்டம்!
உந்தன் புகழ் பாடும்!
கவலை பாமரர்களுக்கு உரியது!
அது உன்னை எந்நாளும் அண்டாது!
பயம் கொண்டிட வேண்டாம்!
சிறையில் கூட முதல் வகுப்பு தான்!
கூட்ட நெரிசலில் சிக்க வேண்டியதில்லை!
வி.ஐ.பி பாதையில்!
கடவுளை தரிசனம் பண்ணலாம்!
சாஷ்டாங்கமாய் சுவாமியை!
விழுந்து வணங்கி!
இரண்டு மடங்கு லாபத்தை!
வரமாய் கேட்கலாம்!
உழைப்பின்றி கிடைத்த ராஜயோகத்தால்!
நல்லவையா, கெட்டவையா!
செய்யும் செயல்கள் என!
மனசாட்சி வினா எழுப்பாது!
அந்தஸ்து தரும் பின்புலத்தால்!
அரசனைப் போல்!
மண்ணை ஆளலாம். !
02. !
உறக்கம் கவியா இரவுகள் !
-------------------------------------!
கண்களிரண்டும் புத்தகத்தை!
மேய்ந்து கொண்டிருந்தது!
மனசு வேதாளம் போல்!
ககனவெளியில் அலைந்து கொண்டிருந்தது!
புத்தி நாளை நடைபெற வேண்டிய!
காரியங்களில் கவனத்தை!
செலுத்த துவங்கியிருந்தது!
உடல், ஐம்புலன்களும்!
ஓய்வு கொள்ளும்!
உறக்கத்திற்கு ஏங்கித் தவித்தது!
கடிகார முற்கள்!
நகர மறுத்தன!
வினாடி யுகமாய் நீண்டது!
இறைவனின் திருவருள்!
இன்றிரவு கிடைக்கவில்லையென!
உள்ளம் குழம்பித் தவித்தது!
வாழ்க்கை சாபமாகவும்!
மரணம் பேரமைதி சூழும்!
சுவர்க்கமாகவும்!
மனதிற்குத் தோன்றியது!
இன்னும் சில நொடிகளுக்குள்!
கனவுலகுக்குள் நான் நுழையவில்லையெனில்!
காலைப் பொழுது!
களைப்பு நீங்கியதாக இருக்காது எனத்தெரிந்தது!
தலையணையும், படுக்கை விரிப்பும்!
அப்படியே கிடந்தது!
புத்தகத்தின் பக்கங்களை மின்விசிறி!
புரட்டிக்கொண்டிருந்தது!
மனசு சூன்யத்தில் நிலை கொண்டு!
பொருளற்ற வாழ்வை எண்ணி!
கண்ணீர் விட்டு அழுதது!
தவிர்க்க முடியாத ஷணங்களெல்லாம்!
பேரவஸ்தை கொண்டன!
இப்படியாக!
என்னுள் ஆன்ம விடுதலை விதையை!
தூவிச் சென்றன!
அந்த உறக்கம் கவியா இரவுகள்

விடியலை தேடி

மித்திரன், கொழும்பு. இலங்கை
விழிகளினோரம் விடியலைத்தேடி!
விதைத்துப்போன!
விண்ணப்பங்கள்!
விடையறியாமலே வழிகளினோரம்!
விடைகொடுக்கும்..!
சுதந்திரக்காற்று சற்றும்!
சமாதானத்திற்கு(ம்)!
சம்மதமற்று..!
சமாதான சம்மதக்கொடி!
சாளரத்தின் ஓரம் சாரமற்றுப்போய்!
சரிந்து கிடக்கிறது சாக்கடையில்!
சத்தியமாய் இல்லை சமாதானம் எந்த!
இனங்களும் இதையறியாது எந்த!
விதைகளும் விழுதெறியாது!
இனியும்..!
உன்னதப்பட்டுப்போன எம்மின!
விடிவின்!
உயிர்த்துடிப்புகளுக்காய்!
உதிர்ந்துபோய் கிடக்கும் என்!
உணர்வுகளற்ற!
உறவுகளின்!
உதிரிப்பூக்கள்!
உரிமைகளற்றும் உடைமைகளற்றும்!
உறங்கி கிடக்கின்றோம்!
உணர்வுகளற்று உதிர்ந்துபோய்!
நிம்மதிகள் தினமும்!
நிர்மலமாகிப் போகின்றன

வாழ்வின் பயணம்

நீதீ
புன்னகையால் தொடங்குகிறது,!
இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட!
தடாகத்தில்,!
எதிர்பார்புகளின்றி!
கடந்துசொல்ல முற்படுகிறோம்,!
நம்முடைய பார்வையில்!
நாம் செய்வது சரி என்று.!
இப் பிரபஞ்சத்தை!
நாம் தழுவிடாது தடுக்கும்!
கட்டுப்பாடுகளை !
தகர்க்க முயற்சிக்கிறோம்,!
இதன் தொடர்சியாய்!
கேவல் சப்தங்கள்,!
எதற்காக எனும் புரிதலின்றியே!
எண்ணங்கள் எரியூட்டப்படுகிறது,!
சொல்லப்படாத ஆசைகளுக்காக,!
மீண்டும் ஒருமுறை பிறந்திட!
பயணம் முடிவடைகிறது.!
இருண்மை ஆக்ரமிக்க தொடங்க!
நம் புன்னகை நமக்கானதாகிறது.!
ஆக்கம்: நீதீ

விகாரமும் கடவுளும்

செயவேலு வெங்கடேசன்
மனதின் விகாரத்தோடு,!
பல்லவனில் பயணித்தபோது!
மகளிர் இருக்கையை!
கல்லூரி மாணவிக்கு விட்டுகொடுத்தேன்!
சுயநலமாய்!
காற்றில் பறக்கும் மேலாடையின் ஊடே!
தெரியும் மார்பகங்களை பார்க்கலாமென்று!
என் வெறித்த விழியின்!
ஆகர்ஷனத்தின்பால் இறுக்க!
மூடினாள் மேலாடையை!
கற்பின் சதவீதம் களவாடபடுகிறதென்று,!
தன்னிச்சையாய் திரும்பிய பார்வை!
நிலைத்து நின்றது!
பக்கத்து இருக்கையின்!
குழந்தை முட்டும் தாயின் ஒதுங்கிய!
சேலை மாராப்பில்……..!
கற்பின் சதவீதம் களவாடபடுவதை விட!
சேயின் விளையாட்டு அமைதியில்!
மறுதலிக்கப்பட்டது என் பார்வையின் ஆகர்ஷனம்!
அமைதியாய் பக்கம் நின்ற!
இரவிக்கையே அறியாத!
மூதாட்டியின் சமுதாயத்திற்காக சேலை சுற்றின்!
காணும்வரை …..!
பிடிபடவில்லை கற்பின் சூத்திரம்!
புத்தனாய் யோசிக்கிறேன்……!
கற்பு என்பது!
மனதா? உடலா? அனுபவமா?!
மனதெனில் மூவருக்கும் பொதுவே!!
உடலெனில்! மனதின் களங்கம் அங்கீகாரம்,!
அனுபவமெனில்! கற்பு எங்கே?!
மனவிகாரம் கூட தவறேயில்லை!
உள்வாங்கி கடக்கையில்!
கடவுள் உண௫ம்வரை!....!
!
-செயவேலு வெங்கடேசன்

என் மரணத்தை..மண் தின்ற.. கடவுளைக்

வித்யாசாகர்
என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்.... மண் தின்ற மழையே ...கடவுளைக் கொல்லும் சாமிகள்!!!
01.!
என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்.... !
--------------------------------------------------------!
வாழ்வின் பாடங்களில்!
கிழிந்த பக்கங்களின்!
ஒவ்வொன்றையும் எடுத்து!
தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்;!
இதயம் தைக்கும் ஊசியென!
என் அறுந்த மனதின் கிழிசல்களில்!
உன் நிறைவுறாத வார்த்தைப் போட்டு!
பிறந்த பயனை நிரப்புகிறாய்;!
தத்தி தத்தி நடந்துவந்து!
எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில்!
என் மெத்த கர்வத்தையும்!
இலகுவாக உடைத்து வீசுகிறாய்;!
நீ தின்ற உணவில்!
ஒரு பாதி எடுத்து எனக்கூட்டி!
என் பாதி ஆயுளை!
அந்த ஒரு பிடி உணவில் நிறைக்கிறாய்;!
நான் வெளியில் போக வீடுபூட்டி!
தெருவிறங்கி நடக்கையில்!
நீ ஓடிவந்து அம்மா தோளேறி ஜன்னலில் எட்டிப் பார்த்து!
அப்பா அப்பா என்று கத்தி கத்தி நீ உடனில்லாதப் பொழுதை!
நினைக்க நினைக்க வலிக்கும் ரணமாக்கிவிடுகிறாய்;!
நீ பார்க்காத!
பேசாதப் பொழுது ஒவ்வொன்றையும்!
சுமக்க இயலாதவன்போலே யெனை!
ஓடி வீடு வரவைக்கிறாய்;!
நீ பெரிதா நான் பெரிதா!
என்று யாரோ கேட்கையில்!
நீ பெரிதில்லை!
நான் பெரிதில்லை!
என் அப்பாதான் எனக்குப் பெரிதென்று நீ சொன்ன வார்த்தையில்!
என் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் வாரி!
உலகின் சிரிப்புசப்தத்திற்கு இடையே இரைத்தாய்;!
நானந்த சிரிப்பின் சப்தத்திற்கு இடையே வந்து!
உன்னையும்!
அவர்களையும்!
பார்த்தவாறே நிற்கிறேன்!
இனி’ மரணமொன்றும் அத்தனைப் பெரிதில்லை.. யெனக்கு!!!
02.!
மண் தின்ற மழையே ..!
-------------------------------!
மழையே! மழையே!!
எம் மண்தின்ற மழையே..!
உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே..!
என்செய்தோம் யாம்..!
வயிரருத்துப் போட்டதுபோல் எம்!
மண்ணறுந்துப் போனது பலகாலம்!
மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்!
பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;!
மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல!
எதை சேர்த்துவைக்க எம் மழையே ?!
ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது உழைப்பவர்கள்!
மறுநாளை பற்றி மறுநாளே நினைப்பவர்கள்!
காலில் அடிபட்டால்கூட – பட்டபோது மருந்திட்டு!
அடுத்தநாள் வலியோடு வாழ்வு ரத்தமாய் கசிந்தாலும்!
துடைத்தெறிந்துவிட்டு தொழில்பார்க்க போய்த் தீரும்!
சாபம் பெற்ற பாவப் பிறவிகள்;!
பட்டவலி போதாமல், அவன்!
இட்ட கடன் தீராமல், விதியென்ற ஒரு!
இல்லாத கிணற்றுக்குள் சாகும்வரை மூழ்கப் பட்டவர்கள்!
மூழ்காத குறையொழிக்க நீயும் வந்தாய் எம் மழையே;!
ஒருநாள் இருநாள் பட்டினி நெருப்பில் புசுங்கினோம்!
இடையே அடிக்கும் குளிரில் நோயுற்றுப் போனோம்!
சோறில்லா வயிற்றுக்கு மருந்தெங்குப் போட!
மலைத்துப் போய் மழையோடு மண்ணாகவேப் போகிறோம் மழையே;!
ஒழுகிய இடத்திலெல்லாம் பாத்திரம் வைத்தோம்!
வைக்க பொருளில்லாத யிடத்தில் – கண்ணீர் பூசினோம்!
மீறியும் உள்புகும் மழையை உயிர்விட்டுத் தடுக்கிறோம்!
ஒருசொல் கேளாது எங்கள் வீடுடைத்துப் போனாயே மழையே;!
உன்னைப் போய் பலர் கடவுள் என்கிறார்!
உன்னைப் போய் பலர் கவிதை என்கிறார்!
உன்னால்தான் எல்லாமே என்கின்றார் – ஆம்!
உன்னால்தான், உன்னால்தான் எல்லாம்; எங்களின் வாழ்வும்!
எங்களின் மரணமும் உன்னால்தான் எம் மழையே;!
ஒரு குறிப்பொன்றுக் காண் -!
பெய்யாமல் இருந்துவிட்டு பூமி வெடித்தப்பின்!
அடைமழையெனப் பெய்து!
வெள்ளமெனப் புகுந்து –!
வீடழிக்கும் நாட்களின் குறிப்பில் இதையும் எழுதிக் கொள்!
நீ வளர்த்த பயிர் நீ; வளர்த்தப் பிள்ளைகளெல்லாம்!
நாங்கள் விட்டுப்போகும் உயிர்களின் மிச்சத்தில்!
அனாதையாய் கிடக்கும் அடுத்தமுறை வருகையில் அதையும் வாரிச் செல்..!
மாடிவீட்டுக் கனவுகளுக்கு நீ விருந்தாளியாய் இருந்துப் போ!
ஆடிப்பாடி விளையாட நீ கொண்டாட்டமாய் இருந்துப் போ!
ஓலைவீட்டு விவசாயிக்கு நீ வரம் தரும் கடவுளாய் இருந்துப் போ!
உயிர் அறும் பொழுதுகளில் வந்து; யெம் மண்தின்றும் போ நீ மழையே!!!
03.!
கடவுளைக் கொல்லும் சாமிகள்!!!
---------------------------------------!
நாலு ரூபாய் வருவாயில்!
நானூறுக்கும் மேலேக் கனவுகள்,!
யார் கண்ணைக் குத்தியேனும்!
தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்;!
சாவின் மேலே நின்றுக் கூட!
தன் ஆசை யொழியாச் சாபங்கள்,!
ஆடும் மிருக ஆட்டத்தில்!
மனித குணத்தை மறந்த மூடர்கள்;!
போதை ஆக்கி போதை கூட்டி!
எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள்,!
படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் மட்டும்!
வீரம் காட்டும் வித்தகர்கள்;!
காலில் பட்ட அடிக்குத் துடிக்கும்!
விழுப்புண் இல்லா வீரர்கள்,!
நூறுபேர் சேர்ந்து ஒருவனைக் கொன்றாலும்!
கண்மூடிச் செல்லும் கோழைகள்;!
பெண்ணின் ஒரு மயிர் உதிர்ந்தால் போதும்!
காதல் காதலென சுமக்கும் பொய்முகங்கள்,!
பெண்ணின் வலி கண்ணீர் இழப்பு ஏக்கம்!
பற்றியெல்லாம் பின் வருத்தப் பட்டிடாத வேடதாரிகள்;!
பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து!
பணத்தால் சாகும் இழிபிறப்புகள்,!
உடுத்தும் உடையில் நடக்கும் நடையில்!
மனம் எரிந்துப் படிந்த மினுமினுக்கிகள்;!
யாருக்கு என்ன ஆனாலும் வருத்தமின்றி!
தன் பாருவுக்குபுடவை மடிக்கும் கரைவேட்டிகள்,!
பக்குவமில்லா வெட்டிகளிடத்தில்!
பயங்கொண்ட மக்களின் கைநிறைந்த தேசங்கள்;!
காட்டுவழியேப் போகும் வாழ்க்கை!
இடையே களவும் கற்கும் புதுமைகள்,!
பொய்யில் அழியும் பாதைத் தெரிந்தும்!
புகழுக்கேவாழும் பெரும் பிழைகள்;!
கடவுள் பித்து கடவுள் பித்து!
மதத்தின் நிறத்துள் போதனைகள்,!
கலந்து கெடுத்து கலந்துக் கெடுத்து!
குற்றம் சுமக்காக் கயவர்கள்;!
கடவுளைக் கொன்று கடவுளைக் கொன்று!
பதவியைத் தேடும் ஆசைகள்,!
அறிவு புகட்டி அறிவு புகட்டி – பின்!
கிணற்றில் வீழும் கொடுமைகள்;!
காசுக்கில்லை மனிதம் தெளிவு!
காடும் மேடும் கோவில் கலவரம்,!
வெறும் தெய்வம்செய்து குற்றம் சொல்லிக்!
குழந்தையைப் பசியில் கொள்ளும் கொடூரங்கள்;!
மூடத்தனத்தின் உச்சம் ஏறி!
முழு நிர்வாணங் காட்டும் அழிவுகள்,!
யாரோ சொன்ன தெருவழி நடந்து!
சுடு-காட்டில் முடியும் தொடர்கதைகள்;!
சிந்தித்திடுடா சிந்தித்திடுடா எனச்!
சொன்னோரெல்லாம் ச்சீ...ச்சீ ஆனான்; சரியில்லையே..!
வீட்டைத்திருப்பி வைத்தவன் கையில்!
நாட்டைக் கொடுப்பது வளமில்லையே;!
குறுக்குவழியில் தேடிடும் கடவுள்!
கையிலிருந்தும் கண் தெரியலையே'!
கத்தும் உயிரின் கழுத்தை நெறிக்கா -!
கருணையில் பார்த்தால் நீயும் கடவுளடா

பாலைவனத்து பட்டாம்பூச்சி

அவனி அரவிந்தன்
பார்வைக் குடுவையில்!
நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்களை!
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களெனவும்!
கடற்குதிரைக் கூட்டமெனவும் கற்பித்த வண்ணம்!
மனோரதங்கள் தரிகெட்டுத் திரிகின்றன…!
விருட்சங்கள் வெளியேறிய வனத்தில்!
ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே!
மற்றைச்சிறகின் மீதான நிழலாகப் படர்கிறது…!
கனவுகளின் பாய்மரம் விரித்து!
சிறகடித்துச் செல்கிறேன்!
வழிநெடுகும் வியர்வைக் கடல் பெருகி!
ஏக்கச்சிப்பிகள் மட்டுமே கரையொதுங்குகின்றன..!
கரையே கடலாகவும்!
கடலே உடலாகவும்!
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து!
எனதுறுபசி ஆற்றும் அமுதம்!
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்றே தேடியலைகிறேன்!
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி…

வடக்கு மூலை அறை

A. தியாகராஜன்
தன்னுடைய ராசிக்கு நன்றி சொல்லி!
எதிர் காலத்துக்குப் போவோம் என்றான்-!
விரல்களை மடக்கி!
நீட்டி எண்ணி!
கணக்குப்பார்த்துப்!
பின் மோட்டு வளையை பார்த்துப்!
பின் தலையை ஆட்டிப்!
பினனர் தன்னைப் பார்த்துப்!
பேசும் ஜோசியக்காரனை!
ஏளனமாய்ப் பார்த்து...!
அவன் தன்போக்கில்!
வெகு இயல்பாகவே!
எதிர் காலத்தைக் கண்டான்!
வாரிசுகளையும் வருமானத்தையும்..!
மற்றும் உருவ ஒற்றுமை கொண்ட!
ஒரு இளைஞனையும்...!
அவனருகே சென்றான்!
பேசுவதற்கென!
ஆனால்!
பாஷை தெரியாமல் போனது-!
பின்!
வீட்டைக் கடந்து!
தோட்டத்துள் செல்ல!
தன்னையே ஒத்த நகல் ஒன்று!
வடவண்டை மூலையின் சிறிய!
அறை ஒன்றில்-!
தன்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டும்!
தனக்குத்தானே!
சப்தம் வெளியே வராமல்!
முணுமுணுத்துக் கொண்டும்..!
தனியாக!
வேறொருவரும் இன்றி!
கதவருகே ஒரு நாயைத்தவிர...!
வடவண்டை மூலையின் சிறிய!
அந்த அறையிலிருந்து!
அவனால் வெளியே வர இயலவில்லை!
அந்த நாயை மீறி..!
- அ.தியாகராஜன்.!
!
A.Thiagarajan!
A-504 Dosti Aster!
Wadala East!
Mumbai 400 037

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு

வ.ந.கிரிதரன்
எங்கோயிருக்கும்!
ஒரு கிரகவாசிக்கு..!
- வ.ந.கிரிதரன் -!
முகமில்லாத மனிதர்களிற்காகவும்!
விழியில்லாத உருவங்களிற்காகவும்!
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்!
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்!
அனுப்புகின்றேனிச் செய்திதனை.!
உன்னை நான் பார்த்ததில்லை.!
பார்க்கப் போவதுமில்லை.!
உனக்கும் எனக்குமிடையிலோ!
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.!
'காலத்தின் மாய' வேடங்கள்.!
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.!
மனந்தளர்ந்திடவில்லை.!
மனந்தளர்ந்திடவில்லை.!
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.!
எங்கேனுமோரிடத்தில்!
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.!
ஆம்!!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.!
காடுகளில் , குகைகளில் அல்லது!
கூதற்குளிர்படர்வரைகளில்!
உன்!
காலத்தின் முதற்படியில்...!
அல்லது!
விண்வெளியில் கொக்கரித்து!
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..!
சிலவேளை!
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்!
பொசுக்கிச் சிதைத்தபடி!
அறியாமையில்...!
ஒருவேளை!
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு!
அற்புதவுயிராய்...!
ஆயினும் உன்னிடம் நான்!
அறிய விரும்புவது ஒன்றினையே..!
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்!
நீயிருப்பின்!
பகர்ந்திடு.!
காலத்தை நீ வென்றனையோ?!
அவ்வாறெனின்!
அதையெனக்குப் பகர்ந்திடு.!
பின் நீயே!
நம்மவரின் கடவுள்.!
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்!
நம்மவர்.!
இன்னுமொன்று கேட்பேன்.!
இயலுமென்றா லியம்பிடு.!
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?!
இதனை நீ அறிந்தனையோ?!
உண்டெனில் அர்த்தம் தானென்ன?!
சிலர்!
அர்த்தமற்ற வாழ்வென்பர்.!
யான்!
அவ்வாறல்லன்.!
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்!
அதனையிதுவரை அறிந்திலேன்.!
அதனை நீ அறிந்திடின்!
அதனையிங்கு விளக்கிடு.!
அது போதும்!!
அது போதும்

மானிடள்

கலாநிதி தனபாலன்
அவனுக்குள்ளே அவள் அமிழ்ந்திருப்பதால்!
அவளை அவனால் அறியமுடியவில்லை!
அவனோ அவளோடு வாழ்வதாய்!
அலட்டிக்கொள்கிறான் அவ்வளவேதான்.!
அவளோ அவன்தான் வாழ்க்கையென்று!
வாழ்வின் இறக்கைகளை இழந்துவிட்டு!
சிறகுகளைச் சிதைத்துவிட்டு சிறைப்பட்டாள்!
மனிதனுக்குள்ளே சிறைப்பட்டிருக்கும்!
மானிடளை விடுதலை செய்வதுதான்!
உண்மையான விடுதலை!
இதை இவளே உணராதபோது!
இவளுக்கு எப்போது விடுதலை?!
இயந்திரப் பொம்மலாட்டப் பாவையாய்!
இயங்கிய இவள்!
தன்னைத்தானே அழித்துக்கொண்டு!
வசதியாய் வாழ்வதாய் வாயாரச்சொல்லி!
சிலபொழுதுகளில் சிற்றின்பத்தில் சிலாகித்து!
வாரிசாய் சிலஉடல்களை உற்பத்தி செய்துவிட்டு!
வசதி வந்தபோது இறந்துபோனாள்!
விடுதலை பெறாமலே விடைபெற்றுச்சென்றாள்.!
மரித்துப்போன மானிடளை மறந்தான்!
மறுபடித்தொடங்கினான் தேடலை…!

தேவதை வருகிறாள்

தி.ராஜகோபாலன்
தவம் கிடந்தார்கள் தரிசனத்திற்காக !
வலம் வந்தார்கள் ப்ரதக்ஷினமாக !
பூக்கொடுத்தர்கள் அர்ச்சனையாக !
எவனையும் பொருட்படுத்தவில்லை !
நிச்சயம் அவள் தேவதைதான். !
நான் ஒன்றும் நாத்திகன் அல்ல அவளை மறுப்பதற்கு. !
வற்றாத அன்பும் ஈர்ப்பும் எந்நாளும் நெஞ்சில் உண்டு. !
தூசியாக அவள் என்னை துச்சமாக மதித்தாலும், !
மாசில்லா காதல் என்தன் மனதிற்குள் ஊற்றெடுக்கும் !
என்றாலும் அவளுக்கு ஏற்றவன் நானில்லை. !
விலையற்ற வைரத்தை, தங்கத்தில் பதிப்பார்களேயன்றி !
தகரத்தில் பதிப்பதில்லை. !
கொம்புத்தேனை முடவன் விரும்பக்கூடாதா? !
அவனுக்கு கால்கள்தான் இல்லை, நாக்கு இருக்கிறதே. !
எண்ணத்தை ஈடேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். !
எண்ணுவதையே தடைசெய்யும் பொல்லாத உலகமன்றோ! !
சத்தியம் சொல்கின்றேன். !
நெஞ்சத்திலிருந்து அவள் எண்ணத்தை இப்போதே நீக்கிவிட்டேன் . !
என்றைக்கும் அவளை இனி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. !
என்றாவது என் முன்னே அவள் எதிர்ப்பட்டுவிட்டு விட்டால், !
பாடுபட்ட நிஷ்டை எல்லாம் பாழாகிப்போய்விடுமே. !
அவள் கொலுசொலி கேட்கும்போதே கண்களை இறுக மூடிவிட்டால், !
விளையவிருக்கும் முட்செடியை முளையும்போதே தடுத்திடலாம். !
யோசனை என்று வந்துவிட்டால் சாணக்கியனுக்கும் சளைத்தவன் நானில்லை. !
அந்த கொலுசொலி எப்போது கேட்குமென்று எதிர்பார்த்தபடி நெஞ்சம்