மனசாட்சி .. உறக்கம் கவியா இரவுகள் - ப.மதியழகன்

Photo by Patrick Perkins on Unsplash

மனசாட்சி.. உறக்கம் கவியா இரவுகள் !
01.!
மனசாட்சி !
---------------------!
பூரணமாய் அஞ்ஞானம் வரும்!
பெயர் புகழும் தேடி வரும்!
பொன், பொருளும் வந்து குவியும்!
கூரையை பிய்த்துக் கொண்டு!
கரன்சி நோட்டுக்கள் கொட்டும்!
ஊரும், நாடும் காலில்!
விழுந்து வணங்கும்!
தொடங்கிய தொழில் யாவுமே!
வெற்றி பெறும்!
ஜகத்தை ஆளவந்த அரசன் என!
புலவர்கள் கூட்டம்!
உந்தன் புகழ் பாடும்!
கவலை பாமரர்களுக்கு உரியது!
அது உன்னை எந்நாளும் அண்டாது!
பயம் கொண்டிட வேண்டாம்!
சிறையில் கூட முதல் வகுப்பு தான்!
கூட்ட நெரிசலில் சிக்க வேண்டியதில்லை!
வி.ஐ.பி பாதையில்!
கடவுளை தரிசனம் பண்ணலாம்!
சாஷ்டாங்கமாய் சுவாமியை!
விழுந்து வணங்கி!
இரண்டு மடங்கு லாபத்தை!
வரமாய் கேட்கலாம்!
உழைப்பின்றி கிடைத்த ராஜயோகத்தால்!
நல்லவையா, கெட்டவையா!
செய்யும் செயல்கள் என!
மனசாட்சி வினா எழுப்பாது!
அந்தஸ்து தரும் பின்புலத்தால்!
அரசனைப் போல்!
மண்ணை ஆளலாம். !
02. !
உறக்கம் கவியா இரவுகள் !
-------------------------------------!
கண்களிரண்டும் புத்தகத்தை!
மேய்ந்து கொண்டிருந்தது!
மனசு வேதாளம் போல்!
ககனவெளியில் அலைந்து கொண்டிருந்தது!
புத்தி நாளை நடைபெற வேண்டிய!
காரியங்களில் கவனத்தை!
செலுத்த துவங்கியிருந்தது!
உடல், ஐம்புலன்களும்!
ஓய்வு கொள்ளும்!
உறக்கத்திற்கு ஏங்கித் தவித்தது!
கடிகார முற்கள்!
நகர மறுத்தன!
வினாடி யுகமாய் நீண்டது!
இறைவனின் திருவருள்!
இன்றிரவு கிடைக்கவில்லையென!
உள்ளம் குழம்பித் தவித்தது!
வாழ்க்கை சாபமாகவும்!
மரணம் பேரமைதி சூழும்!
சுவர்க்கமாகவும்!
மனதிற்குத் தோன்றியது!
இன்னும் சில நொடிகளுக்குள்!
கனவுலகுக்குள் நான் நுழையவில்லையெனில்!
காலைப் பொழுது!
களைப்பு நீங்கியதாக இருக்காது எனத்தெரிந்தது!
தலையணையும், படுக்கை விரிப்பும்!
அப்படியே கிடந்தது!
புத்தகத்தின் பக்கங்களை மின்விசிறி!
புரட்டிக்கொண்டிருந்தது!
மனசு சூன்யத்தில் நிலை கொண்டு!
பொருளற்ற வாழ்வை எண்ணி!
கண்ணீர் விட்டு அழுதது!
தவிர்க்க முடியாத ஷணங்களெல்லாம்!
பேரவஸ்தை கொண்டன!
இப்படியாக!
என்னுள் ஆன்ம விடுதலை விதையை!
தூவிச் சென்றன!
அந்த உறக்கம் கவியா இரவுகள்
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.