தன்னுடைய ராசிக்கு நன்றி சொல்லி!
எதிர் காலத்துக்குப் போவோம் என்றான்-!
விரல்களை மடக்கி!
நீட்டி எண்ணி!
கணக்குப்பார்த்துப்!
பின் மோட்டு வளையை பார்த்துப்!
பின் தலையை ஆட்டிப்!
பினனர் தன்னைப் பார்த்துப்!
பேசும் ஜோசியக்காரனை!
ஏளனமாய்ப் பார்த்து...!
அவன் தன்போக்கில்!
வெகு இயல்பாகவே!
எதிர் காலத்தைக் கண்டான்!
வாரிசுகளையும் வருமானத்தையும்..!
மற்றும் உருவ ஒற்றுமை கொண்ட!
ஒரு இளைஞனையும்...!
அவனருகே சென்றான்!
பேசுவதற்கென!
ஆனால்!
பாஷை தெரியாமல் போனது-!
பின்!
வீட்டைக் கடந்து!
தோட்டத்துள் செல்ல!
தன்னையே ஒத்த நகல் ஒன்று!
வடவண்டை மூலையின் சிறிய!
அறை ஒன்றில்-!
தன்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டும்!
தனக்குத்தானே!
சப்தம் வெளியே வராமல்!
முணுமுணுத்துக் கொண்டும்..!
தனியாக!
வேறொருவரும் இன்றி!
கதவருகே ஒரு நாயைத்தவிர...!
வடவண்டை மூலையின் சிறிய!
அந்த அறையிலிருந்து!
அவனால் வெளியே வர இயலவில்லை!
அந்த நாயை மீறி..!
- அ.தியாகராஜன்.!
!
A.Thiagarajan!
A-504 Dosti Aster!
Wadala East!
Mumbai 400 037
A. தியாகராஜன்