முடிப்பேன்.. தவிப்பு !
01.!
முடிப்பேன்!
-------------!
துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது - வாழ்வு!
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம் - சோதனைகள்!
வேதனையின் விளிம்புகளை, விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு!
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....!
புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்!
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்!
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.!
இலட்சியங்களை அகலமாக்கியதால் - இன்றும்!
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்!
வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று!
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.!
விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு!
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்!
அழுது ஆண்டுகள் ஆச்சு.!
விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்!
கனவுகள் கண்டவன்!
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.!
தோல்விகள் என்னை காதலித்ததால்!
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.!
விடியும் திசையில் தான் என் பயணம் - விரைவில்!
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.!
வெடிக்கும் கனலாய் கருகுது மனது!
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்!
இருக்கும் முடிப்பேன் எனும் நெருப்பு.!
!
02.!
தவிப்பு!
-----------!
வணக்கம்!!!!
மனிதாபிமானம் மரித்த மண்ணில்!
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து!
தொட்டழைந்த மண்ணையும் விட்டு!
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து!
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட விதையாய்!
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்!
தமிழ் பொடியனின் தவிப்பு இது!!
தலை நிமிர்ந்து வாழ்ந்த தாய்மண்ணை!
உயிர் காக்கும் உறங்காத விழிகளை!
தலை சாய்ந்துறங்கும் தாய்மடியை!
என் உயிராய் நேசித்த நண்பர்களை!
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு வலியோடு!
வந்திருக்கிறேனே!-நான்!
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???!
ஆழக்கடல் கடந்து வாழ்வு தேடி!
வந்தவனை அகதி எண்டு அடையாளம் இட!
ஆயிரம் கேள்விகள்!!
அழகான பூந்தோட்டத்திலிருந்து!
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்!
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்!
தாய்மண்ணின் புளுதி மண் வாசம்தான்!!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட!
ஆசையில்லை எனக்கு!!
ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே!
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.!
என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற நிழலில்!
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!!
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு!
தங்கத்தட்டில் தரமான உணவாம்!!
என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்!
புட்டுக்கும் நண்டுக்கறிக்கும் ஈடாகுமா?!
ஓலைப்பயில் ஒழுகும் மழைத்துளியில்!
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே!
ஓசியாய் கிடைக்கிறது ஏசி!
என்ன வேன்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது!
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் இனம் நான் எண்டு.!
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே!
வீடு கட்டி வாழ்வதில்லை!!
காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.!
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை!
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்!
எங்கள் மண்ணில் நிரந்தரமான வாழ்வை தேடி
தமிழ்ப்பொடியன்