வாழ்க்கை இனிமைதான்,
காதலிக்கத் தெரிந்தவர்க்கு.
வேலைக்குப் பிறகுதான் மாலையென்று
விலைப் பேசாதே உன் வாலிபத்தை
வாழ வா என்னுடன்
உன் வெற்றித் தோல்விச் சொல்ல
ஒரு நேசம் தேவையில்லையா உனக்கு?
நீ குடும்பத்தை தூக்கி நிறுத்த
நானுமோர் தூணாக மாட்டேனா?
பூக்களை நேசிக்கத் தெரியாதவனால்,
புவியாள முடியாது,
புரியவில்லையா உனக்கு?
மொட்டு வெடிக்கும் ஓசையை உணரா
வண்டு பரிணாமத்தின் பிறழ்ச்சி.
காதலில்லாமல் போயிருந்தால்
கலாச்சார சுவடுகளின்
நிறையப் பக்கங்கள் நிரப்பப்
படாமலேயேப் போயிருக்கும்
பரஸ்பர பறிமாறல்களை
வணிகவியலில் வகைப்படுத்தி
ஆங்கோர் இதயத்திற்கு இடமில்லையெனும்
வயதாகிப் போன வாலிபர்களை
விலகி நிற்கச் சொல்
காதலினால் மானுடற்கு
கவிதையுண்டாம்;
கானமுண்டாம்;
சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினால் இப்படி வா மானிடனே...
காதல் செய்வோம்.
வாழ்விற்க்கினிமைத் தானேச் சேரும்.
எட்வின் பிரிட்டோ