இன்னும் கலையாமல் !
!
!
!
கொஞ்சம்¢
வேதா மஹாலஷ்மி
இன்னும் கலையாமல் கொஞ்சம் !
- வேதா மஹாலஷ்மி !
படிகளில் பார்க்காமல் !
பார்த்ததில் கொஞ்சம், !
உன் பரவசத்தை !
பார்த்தும், பார்க்காததில் கொஞ்சம்... !
மனசோடு மனசாகப் !
பேசியதில் கொஞ்சம், !
மவுனமாய் மருகியே !
பேசாததில் கொஞ்சம்... !
இளம் மாலையில் இன்பத்தில் !
இணையாய் நடந்ததில் கொஞ்சம், !
துளிர் காலையில் துன்பத்தில் !
துணையாய் கிடந்ததில் கொஞ்சம்.. !
கலைய வைத்து நானும் !
கலைந்ததில் கொஞ்சம், !
காத்திருக்கும் என் கனவுகள் !
கலையாததில் கொஞ்சம், !
உன் அன்பைத் தேடி !
அலைந்ததில் கொஞ்சம் !
அருகாமை தேடி !
அலையாததில் கொஞ்சம், !
ஊசி முனையில் !
உன் உள்ளத்தில் நுழைந்ததில் கொஞ்சம், !
உயிரோடு உறைந்தும் உன் கருணை !
உருகி வழியாததில் கொஞ்சம், !
புதிதாய் உன்னைக் கவிதை !
புனைந்ததில் கொஞ்சம், !
புதிரான உன் புன்னகையை மட்டும் !
புனையாததில் கொஞ்சம், !
மூச்சுத்திணற உன் முத்தத்தில் !
நனைந்ததில் கொஞ்சம், !
உன் இளமையின் யுத்தத்தின் சத்தத்தில் !
நனையாததில் கொஞ்சம், !
ஈருடல் ஓருயிராக !
இணைந்ததில் கொஞ்சம், !
இன்னமும் முழுவதும் !
இணையாததில் கொஞ்சம், !
கவிதைக் கள் உண்டு !
மலர்ந்ததில் கொஞ்சம், !
கள் கொண்ட பூக்கள் !
மலராததில் கொஞ்சம், !
அத்தனையும் உனக்காய் !
அணைத்ததில் கொஞ்சம், !
தித்திக்கும் தீண்டல்கள் !
இன்னும் அணையாததில் கொஞ்சம், !
இனிமையும் என் இளமையும் !
தீர்ந்ததில் கொஞ்சம், !
தனிமையும் உன் தாகமும் !
தீர்க்காததில் கொஞ்சம், !
உன் வசியத்தோடு !
வாழ்ந்ததில் கொஞ்சம், !
வாசத்தோடு வாழாததில் கொஞ்சம், !
நினைவுகள் நெஞ்சில் !
நிறைந்ததில் கொஞ்சம் !
உன்னால் இன்னமும் !
நான் நிறையாததில் கொஞ்சம் !
பசி போக்கும் உன் பசலை !
குறைந்ததில் கொஞ்சம் !
பருவத்தால் என் பருவம் !
குறையாததில் கொஞ்சம் !
இப்படியே... !
கொஞ்சலும் கெஞ்சலுமாய் !
துள்ளலும் துடிக்கலுமாய் !
பார்த்துப் பார்த்துக் கட்டிய கூட்டை !
பட்டென்று கலைத்துவிட்ட !
உன் பண்பாட்டு மொழிகளால் !
பாராமுகங்களால் !
உள்ளம் உடைந்ததில் கொஞ்சம், !
உடையாததில் கொஞ்சமுமாய் !
எனக்கும் உனக்கும் சேர்த்து... !
கொஞ்சம் கொஞ்சமாய் !
இறுதிவரை, !
காதலித்துக் காத்திருப்பேன் !
கண்களில் கனவுகளோடு - அழகான !
நம் நினைவுகளோடு!!!! !
veda