மழை சோவென பெய்து - வி. பிச்சுமணி

Photo by Sonika Agarwal on Unsplash

மழை சோவென பெய்து !
ஓய்ந்து இருந்தது !
மழைத்துளிகள் கூரையின் !
விளிம்பில் முத்துக்களாய் !
கோர்த்து நிற்கின்றன !
மழை அடித்து !
காற்று தூயிமைஆயிற்று !
தெரு வெளிச்சம் !
தூக்கலாக இருந்தது !
தூரத்தில் லெவல் கிராசிங்!
மூடும் ஒலி தெளிவாய் கேட்டது !
முன் இரவு அமைதியாய் !
தொடங்கியது !
அரைஇறுதி கணக்கு !
பார்க்க தோன்றியது !
மனவான நீலத்தில்!
இளம் இருள் கவ்வியது!
மறதியாய் அசையா !
வெண் மேகங்கள் !
நற்செயல்களாய்!
நட்சத்திரங்கள் !
துர்செயல்களாய் !
இருள்கவ்விய கீழ்வானம்!
வெளிச்சம் மட்டும் !
வாழ்க்கை இல்லை!
-வி. பிச்சுமணி
வி. பிச்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.