விடியல் உன் கையில் - லலிதாசுந்தர்

Photo by Maria Lupan on Unsplash

இரவின் மடியில் சாய்ந்து கொண்டு!
விடியலுக்காக காத்திருப்பதை விட!
இரவின் கைபிடித்து நடைபயணம் - செய்துபார்!
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம் !
விரித்து காத்திருக்கும்!
உழைப்பென்னும் உளி கொண்டு !
செதுக்கிபார் - உன் மனதை!
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்!
உன் வெற்றி தேவதை!
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என!
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்பதை விட!
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்!
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்!
நிற்க வாய்ப்பு கேட்கும்!
கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்!
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை!
கடலில் கலக்கும் வரை !
மனிதா!
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார் !
உன் இலட்சிய பாதையில்!
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்!
நிலக்கரி பிரித்த வைரமாய்.!
!
- லலிதாசுந்தர்
லலிதாசுந்தர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.