துணி கசகசத்தது!
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்!
எச்சத்துடன்., கவிச்சியுடன்..!
இலைதின்று!
கூடோடு கிடந்தவற்றை!
கூண்டோடு அனுப்பி!
இழைகளை நீவி!
வாரி வாரி சீராக்கி!
சாயக்கஷாயத்தில் தோய்த்து..!
கசவுகளும் .,!
கசடுகளும் நீக்கி!
தறியடித்து ஜரிகை சேர்த்து!
பட்டு சார்த்தும் போதோ!
பட்டு போர்த்தும் போதோ!
பட்டின் உடல் நெளி நெளியாய்..!
உப்புக் கண்டமாகவோ!
கருவாடாகவோ!
பட்டு(டாய்)ப்போன புழுக்களோடு
தேனம்மை லெக்ஷ்மணன்