வண்ணத்துப்பூச்சிகள்!
பறக்கும் அழகையும் !
இறக்கைகளின்!
ஓவியத்தையும்!
அதன்-சுதந்திரத்தையும்!
நான்!
இரசிக்க மறந்ததில்லை!
இறக்கைகள்-பிய்த்து!
குருதி கசிந்த அதன்!
வலியை நான்!
உணராதபோதும்!
ஒரு கணத்தின்!
இடைவெளியில்!
அதன் - காருண்யம்!
பற்றி நான் !
சிந்திக்கத்தவறியதுமில்லை!
சந்தேகமற்ற!
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்!
நான்!
ஆனா போதும்!
ஒரு நாளேனும்!
தலையிட முடிவதில்லை!
என் மகனின்!
விளையாட்டில்
முஹம்மட் மஜிஸ்