அக்கா எனும் - ஜான் பீ. பெனடிக்ட்

Photo by Paweł Czerwiński on Unsplash

அன்னை அவளின் கவனமோ!
அடுத்த பிள்ளை பெறுவதிலே!
அக்கா அவளின் ஆர்வமோ!
அன்புத் தம்பி தங்கை வளர்ப்பினிலே!
மூத்தவளாய் அவள் பிறந்ததாலே!
முதுகிலே சுமப்பாள் இளையவனை(ளை)!
மூக்கைப் பொத்திக் கொள்ளாமலே!
மூத்தரம் மலம் அள்ளுவாளே!
தான் படிக்காவிட்டாலும்!
தன் தம்பி தங்கை படிக்க விளைவாள்!
தான் உண்ணாவிட்டாலும்!
தன் தம்பி தங்கை உண்ண வைப்பாள்!
கல்யாணம் நடக்கும்வரை!
கற்பினைக் காத்திடுவாள்!
கணவன் கை பிடித்து!
கரு சுமந்து தாயாவாள்!
கணவரின் தம்பியை!
கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள்!
கண்கலங்கும் தன் தம்பியை!
கை தூக்கிவிட தவறமாட்டாள்!
பட்டணத்தில் குடியேறி!
பாங்காய்க் குடும்பம் நடத்திடுவாள்!
படிக்கப் பட்டணம் வரும்!
பாசத் தம்பிக்கு இடம் கொடுப்பாள்!
தனக்கே போதாத சம்பளமெனினும்!
தன் தம்பிக்கும் பகிர்ந்தளிப்பாள்!
தவழ்ந்திடும் தன் பிள்ளைக்குத்!
தாய் மாமனைக் காவல் வைப்பாள்!
பணி நிமித்தம் தம்பி பாரின் செல்லும்போது!
பாசத்துடன் அனுப்பி வைப்பாள்!
பெண்ணொருத்தியை தம்பி மணக்கும்போது!
பெரும் மன நிறைவு கண்டிடுவாள்!
தன் குடும்பப் பணியினிலே!
தனிக்கவனம் செலுத்திடுவாள்!
தம்பி போல் தன் பிள்ளைகள் வளர!
தவமாய்த் தவம் கிடப்பாள்!
அத்தனையும் அன்னை செய்திருந்தால்!
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்!
அத்தனையும் அக்கா செய்திடுவதால்!
அவளையே தெய்வம் என்றிடுவேன்!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்
ஜான் பீ. பெனடிக்ட்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.